பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் டாலரின் மதிப்பை வீழ்த்த முயலும் ரஷ்யா

தமிழில் : வெண்பா

பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் டாலரின் மதிப்பை  வீழ்த்த முயலும் ரஷ்யா

பிரிக்ஸ்: ஈரானும் ரஷ்யாவும் வர்த்தகத்திற்காக டாலரை பயன்படுத்துவதை  அதிகாரப்பூர்வமாக கைவிடுகின்றன.

ஈரானும் ரஷ்யாவும் தங்களது  சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. அமெரிக்க டாலர் பயன்பாட்டை கைவிடவுள்ளன. உண்மையில், இரு நாடுகளுமே தங்களது வர்த்தக பரிவர்த்தனைகளில் பாரிய மாற்றத்தை  ஏற்படுத்தும் ஓர் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் டாலர் பயன்பாட்டை கைவிடுப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஒப்பந்தம் இரு நாட்டு மத்திய வங்கிகளின் கவர்னர்களால் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதனுடன், 2024ல் பிரிக்ஸ் அமைப்பின் ஐந்து புதிய உறுப்பினர்களில் ஒன்றாக ஈரான் மாற உள்ளது.

ஈரானும் ரஷ்யாவும் டாலரை தவிர்த்து தங்களது சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன

கடந்த ஆண்டு முழுவதும், பிரிக்ஸ்(BRICS) அமைப்பில் டாலரை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சிகள் இருந்து வந்தது. அதனுடன், கூட்டணி விரிவாக்கத்துடன் இப்போக்கை அதன் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாக அது ஆக்கியுள்ளது. இப்போது, ​​இவ்விரு முயற்சிகளும் டாலரை தவிர்ப்பதில் முக்கிய முன்னேற்றமாக மாறியுள்ளது.

குறிப்பாக, பிரிக்ஸ் நாடுகளான ஈரானும் ரஷ்யாவும் தங்களது சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. இதன் மூலம் அமெரிக்க டாலரை  தவிர்க்கின்றன. தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளின் கீழ் உள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான டாலரை கைவிடும்  வர்த்தக ஒப்பந்தம் பிரிக்ஸ் கூட்டமைப்பின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுடன் அதிகளவில் ஒத்துப்போகிறது.

"வங்கி மற்றும் பொருளாதார துறையினர் இப்போது நாணய பரிமாற்று அவசியப்படாத இன்டெர்-பேங்க் சிஸ்டம் (interbank system) போன்ற கட்டமைப்புகளைப் பயன்படுத்தலாம்" என்று அறிக்கை கூறுகிறது. கூடுதலாக, இரு நாடுகளின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலும் பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

2023 உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட பிரிக்ஸ் விரிவாக்கத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். குறிப்பாக, இது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), எகிப்து மற்றும் எத்தியோப்பியாவையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், இந்தாண்டின் தொடக்கத்தில் இந்த ஐந்து நாடுகளும் அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸ் கூட்டணியில் சேர உள்ளன.

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை : https://watcher.guru/news/brics-iran-russia-officially-ditch-us-dollar-for-trade