இன்னமும் நீங்கள் திமுக வுக்கு வாக்களியுங்கள் என்கிறீர்கள் என்றால்...

சே ரா

இன்னமும் நீங்கள் திமுக வுக்கு வாக்களியுங்கள் என்கிறீர்கள் என்றால்...

இரண்டு இடதுசாரி கட்சிகள், விசிக, திமுகவின் புரட்சிகர அணியினரான முன்னாள் நக்சல்பாரிகள்....இவர்களெல்லாம் திமுக வை ஆதரித்து இந்த 4 ½ ஆண்டுகளில் சாதித்தது என்ன?

1. சாம்சங் தொழிலாளர் பிரச்சனையில் எந்த அரசை ஆதரித்தார்களோ அவர்கள்தான் சங்க பதிவை கூட செய்யவிடாமல் தடுத்தார்கள். 

2. சென்னைக்கு புதிய விமான நிலையம் என்ற பெயரில் பரந்தூர் மக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தி அம்மக்களை விரட்டி அடிக்கும் அரசின் வேலைக்கு எதிராக போராடும் மக்களுக்காக உங்களால் ஒரு துரும்பையாவது அசைக்க முடிந்ததா?

3. மக்களின் தனிநபர் வருமானம் உயருவதற்கு எந்த வழியும் செய்யாமல் உள்ளாட்சி அமைப்புகளில் வரி உயர்வை மட்டும் செய்தார்களே அதற்காக அரசின் மீது தாக்கத்தை செலுத்த என்ன செய்ய முடிந்தது?

4. மின் கட்டண உயர்வுக்கு எதிராக என்ன செய்ய முடிந்தது?

5. தமிழ்நாடு முழுக்க உள்ளாட்சி பணிகள் , பஞ்சாலைகள் மற்றும் மருத்துவமனை பணிகளில் அரசு நிரந்தர பணியை ஒழித்து ஒப்பந்த பணியாக்கி தற்போது தனியார் ஒப்பந்த நிறுவன பணியாக மாற்றி அரசுக்கும், உழைக்கும் மக்களுக்கும் மாபெரும் இழப்பை ஏற்படுத்தி வரும் நீங்கள் ஓட்டு போட சொன்ன அரசை உங்களால் என்ன செய்ய முடிந்தது?

6. ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம் என்றும் அதற்கான சூட்சுமம் எங்களிடம்தான் உள்ளது என்று ஏமாற்றினார்களே! அதை ஏன் செய்யவில்லை என்று ஏன் உங்களால் கேட்க முடியவில்லை?!

7. ஆங்காங்கே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் பிரச்சனை, டாஸ்மாக் எண்ணிக்கை குறைப்புக்காக போராடும் நீங்கள் டாஸ்மாக்கை மூடுகிறேன் என்கிற பெயரில் 500 டாஸ்மாக் கடைகளை மூடி 2000 க்கும் மேல் மனமகிழ் மன்றம் திறந்து தனியார் சாராயக்கடையை மறைமுகமாக திணிக்கும் நீங்கள் ஆதரிக்கும் அரசை உங்களால் கண்டிக்க முடிந்ததா?

8. தமிழ்நாடு முழுக்க நிகழும் சாதிய வன்கொடுமைகள், சாதிய ஆணவப்படுகொலைகள், காவல் துறையினரின் அதிகார அத்து மீறல்கள், தினம் தினம் நிகழும் கொலைகள், கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என தொடர்ந்து சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு சரி செய்ய நீங்கள் ஆதரித்த அரசு என்ன செய்தது?!

9. மிக மோசமான அளவில் தமிழகம் முழுதும் தங்கு தடையின்றி விநியோகம் மற்றும் நுகர்வுக்குள்ளாக்கப்படும் போதை பொருட்களை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்பாவிகள் மீது கஞ்சா பொய் வழக்கு போட்டு கஞ்சாவுக்கு எதிரான நடவடிக்கை என ஊர் உலகத்தை ஏமாற்றி போதை பொருள் விநியோகத்திற்கு எதிராக துளி கூட நடவடிக்கை எடுக்காத அரசை உங்கள் ஆதரவு எந்த விதத்தில் மாற்றி மக்களுக்கு நல்லது செய்தது?

10. ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற உங்களால் அரசை நிர்பந்திக்க முடிந்ததா? இல்லை உங்களால் தனி நபர் சட்ட மசோதாவை கொண்டு வந்து திமுகவின் பெரும்பான்மையோடு அதனை சட்டமாக்க முடிந்ததா?

11. 4½ ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராடிய போராட்டங்கள் பல்லாயிரக்கணக்கில் ...நீங்கள் ஓட்டு போட சொன்ன ஆட்சியில் எத்தனையாயிரம் போராட்டங்களை நீங்களே செய்கிறீர்களே ஏன்?!

இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ "ஏன்?" கள் உள்ளன. இருந்தும் இன்னமும் நீங்கள் திமுக வுக்கு வாக்களியுங்கள் என்கிறீர்கள் என்றால்? சந்தேகப்பட வேண்டியது திமுகவை அல்ல உங்களைதான்.

- சே ரா

https://www.facebook.com/share/16NozAMm6M/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு