மேற்கு வங்கத்தில் காவிக் கும்பலால் ராகுல்ஜி சிலை தகர்ப்பு!

செந்தளம் செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் காவிக் கும்பலால் ராகுல்ஜி சிலை தகர்ப்பு!

ராகுல் ஜி என்றாலே நமது நினைவுக்கு முன்னணியில் வந்து நிற்பது "வால்காவிலிருந்து கங்கை வரை" எனும் மனித சமூக வரலாற்றை பற்றி விவரிக்கும் அவரது நூல்தான்.சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்திய தத்துவயியல் பேராசிரியராய் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றை வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் கூறுதல் காவி கும்பலின் காதுகளில் எண்ணையை காய்ச்சி ஊத்துவது போலதான்.வரலாற்றை தங்கள் காவி அரசிலுக்கு ஏற்ப திரித்துப்புரட்டும் காவி கும்பல் முற்போக்கு எழுத்தாளர்களை கொலை செய்வதோடு இறந்து போனவர்களின் சிலையைக்கூட கொலை செய்ய வேண்டுமென கங்கனம் கட்டிக்கொண்டு திரிகின்றன.

லெனின் சிலையை உடைத்த பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார காவி கும்பல் இப்போது மேற்கு வங்கத்தில் ராகுல்ஜியின் சிலையை பெயர்த்தெறிந்திருக்கிறது.வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் தனது பயண இலக்கியங்களை படைத்த ராகுலசாங்கிருத்தயாயனின் 9 அடி உயர உருவச்சிலை சிலை மேற்கு வங்காள மாநிலம் ரணிகஞ்சில்  இரவோடு இரவாக அடித்து உடைத்து அகற்றியிருக்கிறது காவி கும்பல்.  ரணிகஞ்ச் சந்திப்பில் 1994-ஆம் ஆண்டு இச்சிலை நிறுவப்பட்டது. சிலையிருந்த இடத்தில் காவி கும்பலின் அட்டூழியத்தால் சிதைந்த பீடம் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது.தெரு விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் என அனைத்தையும் அனைத்து வைத்துவிட்டு சிலையை உடைத்தெறிந்திருக்கிறது சங்பாரிவார சங்கி கும்பல். ராகுல்ஜியின் சிலையை தகர்த்த காவி கும்பலை கண்டித்தும்  மீண்டும் அதே இடத்தில் சிலையை நிறுவ வலியுறுத்தி  மேற்கு வங்கத்தில்  முற்போக்கு சக்திகளால் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

செந்தளம் செய்திப்பிரிவு