உலகப் பட்டினிக் குறியீடு 2022

இந்தியப் பாசிஸ்ட்டுகளின் கோயபல்ஸ் பாணி பொய்ப் பிரச்சாரம்

உலகப் பட்டினிக் குறியீடு 2022

சில நாள்களுக்கு முன்பு உலக பட்டினிக் குறியீட்டுத் தரவரிசையில் இந்தியா பல்வேறு ஏழை நாடுகளுடன் கடைசி இடத்தை பிடிப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு இருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது.இந்த செய்தி வந்த அடுத்த சில தினங்களிலேயே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வ விமர்சன செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மோடி நாரதர் கலகமும், கோயபல்ஸ் பாணியிலான பொய்ப்பிரச்சாரமும் எதற்காக கட்டவிழ்த்துவிடப்படுகின்றன என்பதை சுருக்கமாக நடைமுறை உண்மைகளுடன் உரசிப் பார்ப்போம்.

இந்த ஆண்டிற்கான(2022) உலக பட்டினி குறியீட்டுத் தரவரிசை இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களையே(NFHS-5) அடிப்படையாக கொண்டு ஆராயப்பட்டுள்ளது.the Global Hunger Index, India is ranked 107th out of 121 nations.

பசிப்பிணியையும், பட்டினிக் கொடுமையின் தீவிர நோய்க்குறிகளை கண்டறிவதற்கு நான்கு குறிகாட்டிகளை பயன்படுத்தியுள்ளனர். அவை,

முதலாவது – ஒட்டுமொத்த மக்கள்தொகையில் எவ்வளவு பேர் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையுடன் இருக்கின்றனர் (under nourishment)

இரண்டாவது – குழந்தைகள் மத்தியில் காணப்படும் வயதுக்கேற்ற உயரமில்லாத நிலை (child stunting)

மூன்றாவது – குழந்தைகள் மத்தியில் காணப்படும் உயரத்திற்கேற்ற உடல் எடை இல்லாத நிலை (Child Wasting)

நான்காவது – ஐந்த வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு (Child Mortality)

NFHS-5 கணக்கெடுப்பு சொல்வதென்ன?

தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு என்பது மூன்றாண்டு காலகட்டத்தில் மத்திய அரசின் குடும்ப நல அமைச்சகம் சார்பாக நடத்தப்படக்கூடிய கள ஆய்வாகும். 2019-21 ஆம் காலகட்டத்தின் ஐந்தாவது கணக்கெடுப்பில்(NFHS-5) வெளியிடப்பட்ட நான்கு குறிகாட்டிகளுள் இரண்டு குறிகாட்டிகளின் அளவுகளை அப்படியே GHI தரவரிசைக்கு பயன்படுத்தியுள்ளார்கள். அதாவது, நாம் காணும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைக்கு கடுமையான வளர்ச்சி குறைபாடு(35.5%) இருப்பதாகவும், ஐந்தில் ஒரு குழந்தை(19.3%) ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் மெலிந்தபோய் மரணத்திற்கு தள்ளப்படுவதாகவும்(child wasting) இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது(NFHS-5). இவ்வாறு மெலிந்துபோய் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் என்று உலகளவிலான புள்ளிவிவரத் தரவுகளை கணக்கில் கொண்டு ஆய்வு செய்த GHI தரவரிசையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடுத்ததாக உயிருடன் பிறந்த 1000 குழந்தைகளில் சராசரியாக 42 குழந்தைகள் (4.19%) தங்களது ஐந்தாவது பிறந்த நாளை பார்ப்பதற்குள்ளாகவே மடிந்தவிடுகின்றனர் என்று NFHS-5 கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் சொல்லாப்போனால், பட்டினிக் குறியீட்டுத் தரவரிசைக்காக எடுத்துக்கொள்ளபடும் நான்காவது குறிகாட்டியான குழந்தைகளின் இறப்பு விகிதத்தை உயர்த்தியே கணக்கிட்டுள்ளனர். அவ்வகையில் 42 குழந்தைகள் இறந்து வந்ததாக கூறிய படுமோசமான அவல நிலையை 1000 குழந்தைகளில் 33 குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளதாக எடுத்துக்கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. உண்மையில் இந்த நல்ல காரியத்தை செய்ததற்கு மத்திய அரசு இந்த ஆய்வை வெளியிட்டவர்களுக்கு பாராட்டுகளையே வழங்கியிருக்க வேண்டும். மாறாக, கடித்து குதறுகிறது. மேலும் இந்த NFHS-5 தரவுகள் அனைத்துமே மிகச் சமீபத்திய தரவுகளாகவும், ஆகஸ்ட் 2022ல்தான் வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் புரிந்த கொள்ள வேண்டும். இவ்வாறு, நான்கு குறிகாட்டிகளில் மூன்று குறிகாட்டிகளுமே இந்திய அரசால் வெளியிடப்பட்டதாக இருக்கிறபோது, ஏன் இவர்கள் இதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்?

 global hunger index

சொற்பளவிலான 3000 நபர்களிடம் நடத்திய கருத்துக் கேட்பு மாதிரியை வைத்து நாட்டின் நிலைமையை எப்படிக் குறை கூற முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளது இந்த மோடி அரசு. உண்மை என்ன சொல்கிறது?

ஐ.நா.வின் உணவுப்பொருள் மற்றும் வேளாண்மைக் கழகம் இந்தியாவில் 16.3% மக்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற ஆய்வு முடிவுகளையே GHI தரவரிசையிலும் பயன்படுத்தியுள்ளனர். இந்த தரவைதான் இந்தியா கடுமையாக எதிர்த்துள்ளது. சொற்பளவிலான 3000 நபர்களிடம் நடத்திய கருத்துக் கேட்பு மாதிரியை வைத்து நாட்டின் நிலைமையை எப்படிக் குறை கூற முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளது இந்த மோடி அரசு. அவர்கள் வாதப்படியே பார்த்தாலும் கூட சென்ற மாதம் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கார்ப்பரேட்டுகளின் செல்வம் பன்மடங்கு வளர்ந்ததை நாட்டின் வளர்ச்சியாக காட்டி, ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற கோயபல்ஸ் பொய் பிரச்சாரத்தை இதே மோடி கும்பல் தானே கட்டவிழ்த்து விட்டிருந்தது. கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கு பொறுப்பேற்கத் துடிக்கும் இந்த மோடி கும்பல் மக்களின் துயர நிலைக்கு பொறுப்பேற்கத் தவறுவது என்னே… ஒரு அயோக்கியத்தனம்!. மேலும் இந்தக் குற்றச்சாட்டே அடிப்படையற்றதாகும். ஊட்டச்சத்துக் குறைப்பாட்டை அளவிடுவதற்கு பொதுமக்கள் கருத்தறியும் முறையை (Gallop – Opinion poll) GHI தரவரிசையில் பயன்படுத்தவில்லை. ஐ.நாவின் FAO ஆய்வறிக்கையின் புள்ளிவிவரத் தரவுகளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவும் பல நாடுகளைப் போல இந்தக் கழகத்தில் உறுப்பினராக இருந்து வருகிறது. அந்தந்த உறுப்பு நாடுகள் தந்தத் தகவலையே FAO வும் வெளியிட்டிருந்தது என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மோடி இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இது போன்ற தரவரிசைகளின் கருத்துகளுக்கு கண்டனங்கள் தெரிவிக்கும் வழக்கமே உருவாகியிருக்கிறதென்றும் அவர்கள் கூறுகின்றனர்.

 poor family, children, malnutrition, hunger, food

இந்தக் கழகம் (FAO) பல்வேறு ஆய்வு முறைகளை ஆய்வுகளுக்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறது. எனினும், இரண்டு அளவீட்டு முறைகள் உலகம் முழுவதும் பரவலாக ஏற்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் பொதுவான தன்மை (Prevalence of undernourishment) என்ற ஒன்றை மட்டுமே GHI தரவரிசைக்கு பயன்படுத்தியுள்ளனர். இது கருத்துக் கேட்பின் மூலம் உருவாக்கப்பட்டத் தகவல் அல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

இரண்டாவதாக, சோத்துக்கே வழியில்லாத மிதநிலை அல்லது தீவிரநிலையின் பொதுத் தன்மையை (prevalence of moderate or severe food insecurity – PMSFI) ஆராய்வதற்கே Gallop poll என்ற மக்கள் கருத்தறியும் முறை FAOவால் பயன்படுத்தப்படுகிறது என்று பிரபல பொருளாதார நிபுணரான ஜெயாதி கோஷ்(Jayati ghosh) கூறியிருந்தார். உண்மையில் சொல்லப்போனால், இந்தக் கருத்துக் கேட்பு முறையில் முடிவுகள், யதார்த்த உண்மைகளுக்கு மாறாக, இந்தியாவின் பட்டினி நிலையை சற்று குறைத்தே காட்டியுள்ளது. அவ்வகையில் பார்க்கும் போது, PMSFI தரவுகள் GHI தரவரிசைக்கு கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதை ஆய்வறிக்கையிலே குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் சோத்துக்கே வழியில்லாத நிலை பல காலமாக நீடித்து வருவதோடு மட்மல்ல தீவிரமடைந்து வருகிறதென்பதை உணவுரிமை இயக்கம் (Right to food campaign), அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், Gaon Connection போன்றவர்களால் இந்தியாவில் நடத்தப்பட்ட கட்சி சார்பற்ற கணக்கெடுப்பிலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

குழந்தைகளின் நிலையை வைத்து மட்டுமே எப்படி நாட்டின் நிலையை கூற முடியும். இது அறிவியல்பூர்மவமற்ற முறை மட்டுமல்ல பகுத்தறிவுக்கும் கூட ஒவ்வாத ஆய்வு முறையாகவே இருக்க முடியும் என மத்திய அரசு நாரதர் பாணியில் குழப்பியுள்ளது.

இந்தக் கேள்வியே முட்டாள்தனமானதுதான். புல்லறிவு படைத்த சங்கிகள், உலகம் முழுவதும் உள்ள மக்களின் உடல் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கு இந்த அளவுகோல்களையே (Stunting, Wasting & Mortality) இதுவரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்தும் பொய்யுரைத்துள்ளனர். இந்தப் பட்டினிக் குறியீட்டுத் தரவரிசை ஏதோ இந்தியாவிற்கு தனி அளவுகோல்களையும் மற்ற நாடுகளுக்கு தனி அளவுகோல்களையும் பயன்படுத்தியது போல ஓலமிடுகிறார்கள். Global Hunger Index 2022: India ranks 107th out of 121 countries

உலக பட்டினிக் குயியீட்டுத் தரவரிசையில் பயன்படுத்தியுள்ள ஆய்வுக் கூறுகளெல்லாம் ‘பசிக் கொடுமையின் பல அம்சங்களை’ படம் பிடித்துக் காட்டுகிறது என்றும், கலோரி பற்றாக்குறை மட்டுமல்ல நுண் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையையும் சேர்த்தே ஆய்ந்துள்ளது என்றும் தீபா சின்ஹா(அம்பேத்கர் பல்கலைக்கழத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர்) கூறியுள்ளார்.

இந்த அளவீட்டு முறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், இந்தியாதான் தனது நிலைபாட்டை நிரூபிப்பதற்கு மாற்று அளவீட்டு முறைகளை உருவாக்க வேண்டுமேயொழிய சிரிப்பூட்டக்கூடிய கேள்விகளை கேட்டு இந்திய மக்களின் (நாட்டின்) மானத்தை, நன்மதிப்பை (Image) காற்றில் பறக்கவிடக்கூடாது. இந்த புள்ளிவிவரத் தரவுகளை எதிர்ப்பது இருக்கட்டும், இந்தியாவிடம் கள நிலவரத்தை வெளிப்படையாக எடுத்துக்காட்டக் கூடிய வேறு  தரவுகள் ஏதும் சேகரிக்கப்படுவதில்லை. அதிகாரப்பூர்வமான முறையில், FAOவிடம் வருடா வருடம் கொடுத்து வந்த தகவல்களையும் சில ஆண்டுகளாக கொடுக்க மறுத்துவிட்டனர் என்ற துணிவிலேயே FAO தரவை கேள்விக்குள்ளாக்கத் துணிந்துள்ளனர். இந்த ஆய்வுத் திட்டத்தின் மூத்த கொள்கை அதிகாரி லாரா ரீனெர் கூறுகையில்உலக பட்டினிக் குறியீடு கடந்த ஆண்டு மதிப்பை வைத்து மட்டும் கணக்கிடப்படவதில்லை, மாறாக 2017 முதல் 2021ம் ஆண்டு வரையிலான புள்ளி விவரங்களை வைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு 4ஆண்டுகளின் மதிப்பீடுகளின் அடிப்படையாகவே கணக்கிடப்படுகிறதுஎனத் தெரிவித்து வாயடைக்கச் செய்துள்ளார். சொந்தமாக நாட்டின் நிலையை, மக்கள் படும் துயரை கூட அறிந்து கொள்ள விரும்பாத இந்த மக்கள் விரோத அரசு எப்படி மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற கேள்வி அடிப்படையில் எல்லோருக்கும் எழவே செய்கிறது.

இந்தியா பட்டினிக் குறியீட்டுத் தரவரிசையில் மட்டுமல்ல, பல்வேறு நிலைகளிலுமே பின்தங்கியே உள்ளது:

  1. பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 180 நாடுகளில் இந்தியா 150 இடத்தில் உள்ளது.
  2. பாலின ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருக்கும் நாடுகளின் பட்டியலில், 146 நாடுகளை கணக்கிட்டபோது இந்தியா 135 வது  இடத்தில் உள்ளது.
  3. காலநிலை பாதிப்பு அதிகமாக ஏற்படும் நாடுகளில் 7வது இடத்தில் இந்தியா உள்ளது. (இதில் முதலாவது இடம் என்பது தீவிர பாதிப்பையே குறிக்கும்)
  4. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த செயல்பாடுகளில் இந்தியா 180 நாடுகளில் கடைசி இடத்தை அதாவது 180 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. அப்போதும் இதே போல தவறான கணக்கீட்டு முறைகளின் மூலம் இந்தியாவின் பிம்பத்திற்கு, நன்மதிப்பிற்கு(Image) களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டு சதி நடக்கிறது என்று மோடி அரசு குற்றஞ்சாட்டியது. இந்தியாவின் “ஒரு நாள் மக்களாட்சித் தேர்தலில்” ஆட்சியைப் பிடித்துவிட்டால் வெற்றி பரணி பாடுகின்ற இந்த புழுத்துப்போன தரகு-முதலாளிய நாடாளுமன்ற கட்சிகள், தோற்றுப்போனால் வாக்கு இயந்திரத்தை குற்றஞ்சாட்டி ஒப்பாரி வைத்து ஓலமிடும். பல-கட்சி அரசியல் பாரம்பரியத்தில் முளைத்து வளர்ந்தள்ள பாஜகவும், மோடி போன்ற அதன் தாமரைக் கண்ணாளர்களும், இதே தந்திரத்தையே உலக அரங்கிலும் கையாண்டு வருகிறார்கள்.

ஒரு நிமிடம் இந்த நாடாளுமன்றம் செயல்பட மோடி கும்பல் 2.5 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது. நடப்பு நிதியாண்டில் மோடியின் மந்திரி சபையும், கேபினட் அமைச்சரவையும் செயல்படுவதற்கு 1,711.04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் பணத்தில் வயிறு வளர்க்கும் இந்த சிப்பந்திகள் யாருக்காக வேலை செய்து வருகிறார்கள்? பல்வேறு தரவரிசைகளிலும் மக்களை வீழ்ச்சிப் பாதையில் தள்ளிவிட்டு யாரோடு கூட்டு சேர்ந்துகொண்டு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள்? மோடி பேசும் வளர்ச்சியெல்லாம் யாருடைய வளர்ச்சி என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் மேலோட்டமாக அம்பலப்படுத்தவே செய்கின்றன.

முதலாளிகள் நிம்மதியாக நாட்டை சுரண்டி கொழுப்பதற்கும் கூட ஒரு தரவரிசையை உருவாக்கியுள்ளனர். Ease of doing business என்ற பட்டியலில் இந்தியா ஆண்டுக்கு ஆண்டு முன்னேறி வருகிறதென்பது உலகுக்கே தெரிந்த விசயம்தான். குறிப்பாக, 2014-ஆம் ஆண்டில் Ease of doing business தரவரிசையில் 142-வது  இடத்திலிருந்து இந்த ஆண்டு(2022) 63-வது இடத்திற்கு நாட்டை முன்னேற்றியுள்ளார். இந்தத் தரவரிசைகளெல்லாம் இரண்டு இந்தியா இருப்பதையே உறுதிபடுத்துகிறது. ஏழை இந்தியாவை பற்றி தரகு-முதலாளிய கட்சிகளுக்கோ அல்லது அதன் தொங்கு சதைகளாக விளங்கும் மாநில கட்சிகளுக்கோ எவ்வித அக்கறையும் இருந்ததில்லை.இருக்கவும் முடியாது என்பதே உண்மை.

RSS அமைப்பின் துணை அமைப்பான சுதேசி ஜக்ரன் மஞ்ச், “உலக பட்டினி குறியீட்டுத் தரவரிசையை பொறுப்பற்ற முறையில் வெளியிட்டு இந்தியாவின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் Welt hunger hilfe  என்ற தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென” மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. உ.பியில் 2017-ஆம் ஆண்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 100க்கு மேற்பட்ட குழந்தைகள் துடிதுடித்து இறந்து போனதை வெளிச்சத்திற்கு கொண்ட வந்த மருத்துவர் கபீல் கான் என்ற அரசு மருத்துவரை 500 நாட்களுக்கு மேலாக சாமியார் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாசிச  அரசு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது போல உலகின் எந்த மூலையிலும் இந்தப் பாசிச அரசின் தேச விரோத, மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக சிறு தகவல்கள் கூட மறைமுகமாக எவரும் வெளியிடக்கூடாதெனக் கூறி RSS-பாஜகவினர் தாங்கள்தான் ஹிட்லர் – முசோலினி பாசிச கும்பலின் நேரடி வாரிசுகள் என்பதை நிரூபித்துவிட்டனர்.

நாட்டில் உள்ள மக்களின் ஆரோக்கியத்திற்கும், குறிப்பாக குழந்தைகள் நலன் உட்பட மோடி கும்பல் ஓராண்டிற்கே ஒதுக்கிய தொகை 86,201 கோடியாக இருக்கிறது. அந்நியக் கார்ப்பரேட் நிறுவனமான ஃபாக்ஸ்கானுடன் சேர்ந்து முதலீடு செய்வதற்காக உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தா தரகு முதலாளிக்கு மட்டும் 76,000 கோடி நிதியுதவி அளித்துள்ளது. பணம் சாராத ஊக்கத்தொகைகளின் பண மதிப்பையும் சேர்த்தால் லட்சம் கோடியையும் விஞ்சிவிடும். 40 கோடிக்கும் மேல் உள்ள குழந்கைள் அனைவருக்கும் ஒதுக்கப்படக்கூடிய நிதியின் அளவும், ஒரே ஓர் ஆத்மநிர்பார் முதலாளிக்கு வாரி வழங்கியுள்ள நிதியின் அளவும் ஒரே அளவிலிருக்கும் போது யார் வாழ்வார்கள்? யார் வீழ்வார்கள் என்று குழந்தைகளிடம் கேட்டால் கூட சொல்லிவிடுவார்கள். இந்தப் பட்டினிக் குறியீட்டுத் தரவரிசையில் கணக்குப் பிழை இருக்கிறதென்றும், ஒரு பக்க சார்பாக கணக்கிடப்பட்டுள்ளதென்றும் குற்றஞ்சுமத்துவதற்கு முன்னால் இவர்கள் வகுத்த வரவு செலவு கணக்குத் திட்டத்தை(Budget) மீண்டும் எடுத்துப் பார்க்கச் சொல்ல வேண்டும். ஆண்டவர்களும் (காங்கிரஸ்), ஆள்பவர்களும் (பாஜக) செய்யும் பிழையென்பது அப்போது தெரியும்.

இதுமட்டுமல்ல, முதலாளித்துவ உற்பத்தி முறையின் படுபாதகமான பாதிப்புகளை மட்டுப்படுத்துவதற்கு தக்கவைக்கும் வளர்ச்சி இலக்குகளை (SDG), ஒவ்வொரு நாடுகளும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த முயல வேண்டும் என உலக வங்கி வடிவமைத்து தந்ததை மற்ற நாடுகளோடு சேர்ந்து இந்தியாவும் சிரமேற்கொண்டு ஏற்றுள்ள போதிலும், அதில் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறைகளும், குறிகாட்டிகளுமே GHI ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. இந்த அராஜகமான உற்பத்தி முறையினால் ஏற்பட்ட புண்கள், கோயபல்ஸ் பாணியிலான பிரச்சாரத்தினால் மூடிமுறைக்க முடியாதளவிற்கு தீவிரமடைந்துள்ளது என்பதையே இந்த உலக பட்டினி குறியீடு தெளிவுபடுத்துகிறது.