உக்ரைன் மக்களின் ரத்தம் குடிக்கும் பென்டகன்

உக்ரைனுக்கு கூடுதலாக 2.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள போராயுதங்களை அமெரிக்கா வழங்கவுள்ளது.

உக்ரைன் மக்களின் ரத்தம் குடிக்கும் பென்டகன்

ஜெலன்ஸ்கி அரசு உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்க தனது ஆதரவு நாடுகளை கோரி கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்கா உக்ரைனுக்கு கூடுதலாக 2.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள போராயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

செனற வாரம்தான் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 50 பிராட்லி வகை பீரங்கி வண்டிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கியது. 

தற்போது மேலும் 59பிராட்லி வகை பீரங்கி வண்டிகள், 90 ஆயுதப்படை தாங்கி தாக்குதல் பீரங்கிகள், அவெஞ்சர் வகை வான்வழி தாக்குதல் அமைப்புகள் மற்றும் இவைகளுக்கு தேவையான வெடிகுண்டுகளையும் வழங்குவதாக பென்டகன் அறிவித்துள்ளது. 

இதோடு மட்டுமின்றி நேட்டோ கூட்டமைப்பிலுள்ள பிற ஏகாதிபத்திய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. 

ரஷ்யா இந்த ஆயுத அதிகரிப்பை கண்டித்து வருவதுடன், அணு ஆயுத எச்சரிக்கையும் விடுத்து வருகிறது.

- செந்தளம் செய்திப்பிரிவு