மோடி கும்பலின் வாக்கு எந்திர மோசடியில் தொடர்புடைய ஜோர்ஜ் யார் ?

ஸ்டீபன் கிர்ச்கேஸ்னர்

மோடி கும்பலின் வாக்கு எந்திர மோசடியில் தொடர்புடைய  ஜோர்ஜ் யார் ?

'டீம் ஜோர்ஜ்' ன் முறைகேடுகளை ரகசிய நிருபர்கள் எவ்வாறு படம் பிடித்தனர்

"ஜோர்ஜ்" என்று தன்னை அழைத்துக் கொண்ட நபர் இரண்டு முக்கிய  வாடிக்கையாளர்களுடன் கைகுலுக்கியபோது, "கதவில் உள்ள வாசகம் என்ன சொல்கிறது என்று பார்த்தீர்கள், இல்லையா? அது ஒன்றுமில்லை. நாங்கள் அடையாளமற்றவர்கள்." என வேடிக்கையாக பேசிக் கொண்டனர்.

மறைமுக நிருபர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும், பிற ஆலோசகர்களை விடவும் விலையுயர்ந்த கடிகாரத்துடன் மிடுக்கான உடையணிந்திருந்தார். பல ஆன்லைன் சந்திப்புகளுக்குப் பிறகு டிசம்பர் இறுதியில் ஆலோசகர்கள் தாங்கள் தொடர்பு கொண்ட நபரை முதல் முறையாக நேரில் சந்தித்தனர். முந்தைய ஐந்து வீடியோ அழைப்புகளிலும் அவர் தனது கேமராவை அணைத்து வைத்திருந்தார்.

இப்போது நேரில் ஆரத்தழுவி வரவேற்றனர். ஆனால் இன்னும் பெயர்களை பரிமாறிக் கொள்ளவில்லை.

ஜோர்ஜ் தனது இரண்டு சக ஊழியர்களால் சுவரில் தொங்கவிடப்பட்ட திரையில் விளக்கவுரையைத் தொடங்கினார். ஜூம் கூட்டங்களில் ஆலோசகர்களுக்குக் காட்டப்பட்டதைப் போலவே இது இருந்தது: ஜோர்ஜ் எப்படி உலகெங்கிலும் இரண்டு டஜன் தேர்தல்களை ஹேக்கிங், தவறான தகவல்களைப் பரப்புதல் மற்றும் சூழ்ச்சி மூலம் கையாண்டார் என்று பெருமையாகக் கூறினார்.

ஜார்ஜ் மற்றும் அவரது குழுவினர், எப்படி இலக்கான ஜிமெயில் கணக்கிற்குள் ரகசியமாக நுழையமுடியும் என்று பீற்றிக் கொண்டார். அவருடைய விளக்கவுரையானது ரகசிய நிருபர்களால் படமாக்கப்பட்டது.

தி மார்கரின் கர் மெகிடோ, ரேடியோ பிரான்சின் ஃப்ரெட்ரிக் மெட்சூ, மற்றும் ஹாரெட்சின் ஓமர் பென்ஜாக்கப் என்ற மூனறு பத்திரிக்கையாளர்கள் ஆறுமாத காலமாக  ஜோர்ஜ்ஜின் நடவடிக்கைகளை கண்காணித்து ஆப்பிரிக்காவின் தேர்தல் ஒத்திவைப்பில் ஒரு வியாபாரி பின்னிருப்பதை கண்டனர். 

இது ஒரு விரிவான இரகசிய நடவடிக்கையாகும், இது தவறான தகவல் வெளியிடுவோர் மீது வெளிச்சம் பாய்ச்சுவதை நோக்கமாகக் கொண்டது, இது நிழலில் இயங்கும் வளர்ந்து வரும் தொழில்.

இஸ்ரேலில் உள்ள நிழலில் இயங்கும் நிறுவனம், மோடிக்காக தேர்தல்களில் தவறான தகவல்களை பரப்பியதாக விசாரணை நிருபரான மெகிடோ ஆதாரத்தை வழங்கினார். அவருக்கு பெயர் தெரியாது, மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் உட்பட அனைவரின் பெயரையும் ரகசியமாக  காக்கின்றனர்.

ஜோர்ஜ் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ரேடாரில் இயங்கிக்கொண்டிருந்தபோது, பல மின்னஞ்சல் கணக்குகள் மற்றும் இந்தோனேசியாவில் பதிவுசெய்யப்பட்ட ஃபோனைப் பயன்படுத்தி எதிர்வரும்  வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார், புனைப்பெயருக்குப் பின்னால் இருந்தவர் தனது 50வயதில் லிங்கிட்இன்(Linkedin)ல் மட்டும் கணக்கு வைத்திருந்த சாதாரண தொழிலதிபர் - பாதுகாப்பு மற்றும் வெடிமருந்துகளில் நிபுணர் என 2006 இல் வாஷிங்டன் போஸ்ட்டில் மேற்கோள் காட்டப்பட்டவர்.

எவ்வாறாயினும், ஏமாற்றுதல் மற்றும் ரகசியம் ஆகியவற்றில் அவரது திறமைகளைப் பற்றி அவர் பெருமையாகப் பேசினாலும், ஜோர்ஜ் அவரின் இரகசிய பொறியை சந்தேகிக்கவில்லை. அவர் விளக்கவுரைகளில் மும்மரமாக இருந்ததால், அவரின் தடயங்களை கண்டுக்கொள்ளவில்லை.

நிருபர்கள் பதிவு செய்த முந்தைய சந்திப்புகளில், ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் கீழ் பணியாற்றிய மற்றும் கடுமையான பழமைவாதியாக அறியப்பட்ட ரோஜர் நோரிகா என்ற மேற்குலகிற்கான முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரைப் பற்றி ஜார்ஜ் குறிப்பிட்டார்.

வாஷிங்டனிலுள்ள நோரிகாவின் ஆலோசனை நிறுவனமான விஷன் அமெரிக்காஸில் ஹனானின் வாழ்க்கை வரலாறு வெளிவந்தது, அது அவரை ஒரு கூட்டாளியாகவும் பட்டியலிட்டது.

நாங்கள் தொடர்பு கொண்டபோது, நோரிகா ஜோர்ஜின் அடையாளம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். "நான் தல் ஹனான் அல்லது வேறு யாருடனும் எந்த அரசியல் பிரச்சாரத்திற்காகவும் (வெளிநாட்டு அல்லது வேறு) எந்த வேலையும் செய்யவில்லை," என்று அவர் கூறினார். ஹனானின் முறைகேடுகளைப் பற்றி நோரிகாவுக்கு எந்த கண்ணோட்டமும் தெளிவுமில்லை.

நோரிகாவின் நிறுவனத்தின் இணையதளத்தில், ஹனானின் வாழ்க்கை வரலாறு குறிப்பில் அவர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு பயிற்சி அளித்ததாகவும், அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் நகர்ப்புற போர் முறைகள் குறித்து விளக்கமளித்ததாகவும் கூறிய இஸ்ரேலை தளமாகக் கொண்ட டெமோமனின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டதாக தெரிவிக்கிறது.

ஹனானுக்கான லிங்க்ட்இன் கணக்கு, மேரிலாந்தில் உள்ள கென்சிங்டனில் உள்ள சோல் எனர்ஜி என்ற நிறுவனத்தைக் குறிப்பிட்டது, எனவே டிசம்பரில், இரகசிய நிருபர்கள் அதன் லோகோவை ரகசிய அலுவலகத்தில் வெள்ளை பலகையில் கண்டபோது அவர்கள் ஒரு கணம் உற்சாகமடைந்தனர்.

தேடுதல் முடிவடைவதைப் போல உணர்ந்தோம். ஆனால், டிசம்பர் மாதம், மோடியின் அலுவலகத்தை விட்டு நிருபர்கள் வெளியேறியபோது, அவர்கள் இன்னும் ஒரு மிக முக்கியமான கேள்வியை தீர்க்கவில்லை: ஜோர்ஜ் யார்? அவர்கள் இப்போது அலுவலகத்தில் சந்தித்த ஜோர்ஜை, தல் ஹனானுடன் இணைத்த ஒரு அடையாளமற்ற ஆதாரம் உட்பட நிறைய தடயங்களும் கிடைத்தன. ஆனால் இன்னும், தைரியமாக கதையளக்கும் அந்த மனிதனின் முகமூடியை அவிழ்க்க அது போதுமானதாக இல்லை.

அந்தக் கேள்விக்கு ஹனான் தானே பதிலளிப்பார் என்ற எண்ணம் மிகவும் சாத்தியமற்றதாகத் தோன்றியது. (பின்னர், கருத்து கேட்கப்பட்டபோது, ​​ஹனான் விரிவான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை, ஆனால் "எந்த தவறும் செய்யவில்லை என்பதை நான்  மறுக்கிறேன்.")

இரகசிய செய்தியாளர்களுடனான சந்திப்பின் முடிவில் ஜார்ஜ் கூறிய கூற்றிலிருந்து இறுதி துப்பு வந்தது. தான் தூக்கியெறியப்பட்ட நிலையில் ஹனான் இப்போது செயல்படாத ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் கடந்தகால தொடர்பைக் கோரினார்.

இறுதியாக மர்மத்தை அவிழ்க்க வேண்டும். கசிந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மின்னஞ்சல்களில் புதைந்திருந்தது ஒரு கேள்வி. மர்மமான இஸ்ரேலியர் பற்றிய பதில்களை நிருபர்கள் மட்டும் தேடவில்லை. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவின் தலைமை நிர்வாகி அலெக்சாண்டர் நிக்ஸ், சக ஊழியரிடம் கேட்டிருந்தார்: "ஜோர்ஜ்ஜின் (இஸ்ரேல் பிளாக் ஓப்ஸ் நிறுவனத்திலிருந்து) உண்மையான பெயர், பதவி மற்றும் நிறுவனத்தின் பெயர் என்ன?"

அவரது சக ஊழியர் ஒரு நாள் கழித்து பதிலளித்தார்: "டால் ஹனான் டெமோமன் இன்டர்நேஷனலின் தலைமை செயல் அலுவலர்..."

- வெண்பா

( தமிழில்) 

மூலக்கட்டுரை: https://www.theguardian.com/world/2023/feb/15/disinformation-hacking-operative-team-jorge-tal-hanan#amp_tf=From%20%251%24s&aoh=16766273821215&referrer=https%3A%2F%2Fwww.google.com&ampshare=https%3A%2F%2Fwww.theguardian.com%2Fworld%2F2023%2Ffeb%2F15%2Fdisinformation-hacking-operative-team-jorge-tal-hanan