பற்றி எரியும் இலங்கை; பறந்தோடிய கோத்தபய இராஜபக்‌ஷே

உள்நாட்டு உற்பத்தியை அழித்து, அந்நியநாடுகளுக்கு சந்தையை திறந்துவிட்டதே வர்த்தகப் பற்றாக்குறையும்! கடன்களும்!

பற்றி எரியும் இலங்கை; பறந்தோடிய கோத்தபய இராஜபக்‌ஷே
இலங்கை அதிபர் மாளிகையை மக்கள் முற்றுகை

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். ஆனால் இன்று பல ஆயிரக் கணக்கான மக்கள் அலையென திரண்டு அதிபர் மாளிகையை சூழ்ந்தனர். அவர்கள் திரளுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு அதிபராக இருந்த கோத்தபய இராஜபக்சே தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டைவிட்டு பறந்தோடியுள்ளார். அதிபர் பதிவியை கோத்தபய இராஜபக்சே இராஜினாமா செய்த சில மணி நேரங்களில் அதிபரால் பணியில் அமர்த்தப்பட்ட பிரதமர் இரணில் விக்கிரமசிங்கேவும் பதவி விலகினார். இதனால் இலங்கையில் அரசியல் பொருளாதார நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ளது. 

”கோத்தா வீட்டுக்கு போ” (Gotha go home) என்ற ஒற்றை முழக்கத்தின் அடிப்படையில் பல மாதங்களாக நடந்து வந்த மக்கள் போராட்டத்தின் பலனாக நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார் கோத்தபய இராஜபக்சே. ஒரு மாதத்திற்கு முன்பு அவரால் பதவியில் அமர்த்தப்பட்ட இரணில் விக்கிரமசிங்கேவும் எந்த பெரும் மாற்றத்தையும் உருவாக்க முடியவில்லை; பொருளாதார நெருக்கடியையும் தணிக்க முடியவில்லை. இதன் விளைவு முன்னிலும் பலமாக மக்கள் போராட்டம் வெடிக்கத் துவங்கியது.

ஒரு வார காலமாக முற்றிலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப் பெறவில்லை; கிடைத்தாலும் விண்ணை முட்டும் விலை; கொரோனாவால் பாதிக்கப்பட்ட இறந்த எண்ணிக்கையைவிட அத்தியாவசிய மருந்து கிடைக்காமல் சிகிச்சையின்றி இறக்கும் உயிர் இழப்பு அதிகமாக உள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர். இரசியா உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு போரை தொடுத்தப் பிறகு, உக்ரைனுக்கு உதவுவதாக பல பில்லியன் டாலர்களை அள்ளிக் கொடுக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள், அத்தியாவசிய பொருட்கள்கூட கிடைக்காமல் அல்லல் படும் இலங்கைக்கு உதவ இதுவரை முன்வரவில்லை. 

இப்படி கடும் சிக்கிலில் தவித்து வரும் மக்களின் பிரச்சனைக்கான காரணங்கள் என்ன? எப்படி எதிர்கொள்வது? என்ன தீர்வு என்பதை கீழுள்ள கட்டுரைகள் ஆழமாக அளசுகிறது.

மேலும் படிக்க

இலங்கை பொருளாதார நெருக்கடி - பகுதி 1

இலங்கை பொருளாதார நெருக்கடி- பகுதி 2

இலங்கை பொருளாதார நெருக்கடி- பகுதி 3

இலங்கை பொருளாதார நெருக்கடி- பகுதி 4

  - செந்தளம் செய்திப் பிரிவு