மைக்ரோசிப் தொழில்நுட்பப் போர்: சீனாவின் புதிய உத்தி

Center for Strategic & International Studies

மைக்ரோசிப் தொழில்நுட்பப் போர்:  சீனாவின் புதிய உத்தி

2022 ம்  ஆண்டின்   இரண்டு குறிப்பிடத்தக்க நாட்கள்,  புவிசார் அரசியல் வரலாற்றில் நிச்சயமாக எதிரொலித்துக் கொண்டுள்ளது.  முதலாவது, பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு.  இரண்டாவது அக்டோபர் 7, அமெரிக்க அரசாங்கம் சீனாவின் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செமிகண்டக்டர் தொழில்நுட்ப துறையை இலக்காகக் கொண்டு  புதிய ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை இயற்றியது.  பெரும்பாலான அமெரிக்கர்கள் அக்டோபர் 7 கொள்கை மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி பரவலாக அறிந்திருந்தாலும், அது  அமெரிக்க-சீன உறவிலும் அதனுடன் சேர்த்த சர்வதேச அரசியலிலும் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்ததாகும்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் டோனி பிளிங்கன், புதிய கொள்கை இயற்றப்பட்ட பத்து நாட்களுக்குப் பிறகு ஆற்றிய உரையில் கூறியதாவது. “நாம் தற்போது  தீர்க்கமான தருணத்தில்  இருக்கிறோம் ” “பனிப்போருக்குப் பிந்தைய உலகம் முடிவுக்கு வந்துவிட்டது” “அடுத்து என்ன வரப்போகிறது என்பதை வடிவமைப்பதில் ஒரு தீவிர போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அந்த போட்டியின் மையத்தில் தொழில்நுட்பம் உள்ளது.” 

அக்டோபர் 7 கொள்கை ஒரு குறிப்பிட்ட தொழில்துறையை  இலக்காக  கொண்டது . AI பயன்பாடுகளுக்கான கணினி சில்லுகளின் ஏற்றுமதியையும், அவற்றை  வடிவமைக்கவும் தயாரிக்கவும் தேவையான பல்வேறு தொழில்நுட்பங்களின் தொகுப்பையும் மட்டுமே அது கட்டுப்படுத்தியது. இருப்பினும், புதிய ஒழுங்குமுறையும் அதன் அடிப்படை தர்க்கமும் குறைந்தபட்சம் மூன்று வழிகளிலாவது சீனாவுக்கான 25 ஆண்டு அமெரிக்க வர்த்தக மற்றும் தொழில்நுட்பக் கொள்கையின் முக்கிய திருப்பத்தைக் குறித்தது..

முதலாவதாக, சீனாவிற்கு மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்னுட்பத்தின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, ஏற்றுமதிகள் இராணுவ இறுதிப் பயன்பாடுகளுடன் தொடர்புடையதா அல்லது தடைசெய்யப்பட்ட இறுதிப் பயனர்களுடன் தொடர்புடையதா என்பதை அடிப்படையாகக் கொண்டு, புதிய கொள்கை அவற்றை ஒட்டுமொத்தமாக சீனாவிற்கு புவியியல் அடிப்படையில் கட்டுப்படுத்தியது.

இரண்டாவதாக, முந்தைய அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகள் சீனாவை தொழில்நுட்ப ரீதியாக முன்னேற அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்  , அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நீடித்த முன்னணியை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலும் , சீனாவின்  வேகத்தை கட்டுப்படுத்தும் வகையிலுமே  வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் , புதிய கொள்கை, மாறாக, சீனாவின் செமிகண்டக்டர் தொழில்துறையின் உச்ச தொழில்நுட்ப திறனை தீவிரமாக  சிதைத்துக்கொண்டிருக்கிறது. Biren, YMTC, SMIC மற்றும் SMEE போன்ற முன்னணி சீன செமிகண்டக்டர் நிறுவனங்கள் அனைத்தும் பல ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டன.

மூன்றாவதாக, முடிந்தவரை, செமிகண்டக்டர்  தொழில்நுட்பத்தில் சில மேம்பட்ட செயல்திறன் வரம்புகளை சீனா மீண்டும் அடையாமல் தடுக்க இந்தக் கொள்கை முயல்கிறது. கடந்த காலங்களில் செய்யப்பட்டது போல், செயல்திறன் வரம்புகளை திருத்துவதற்குப் பதிலாக, அந்த அளவுகோல்களை நிலையானதாக வைத்திருக்க விரும்புகிறது பிடென் நிர்வாகம். அதாவது உலகம் முன்னேறும்போது செயல்திறன் இடைவெளி அதிகரிக்கும், அனால் சீனா பின்தங்கிய நிலையிலேயே  சிக்கிக்கொள்ளும் .

அக்டோபர் 7 கொள்கையும், நட்பு நாடுகளை  சேர வற்புறுத்துவதற்கான தற்போதைய அமெரிக்க பிரச்சாரமும் சீன செமிகண்டக்டர் தொழில்துறைக்கு மாற்றியமைக்கப்பட்ட நிலப்பரப்பை பிரதிபலிக்கிறது. உலகளாவிய தொழில்நுட்ப போட்டியின் இந்த புதிய சகாப்தத்தில் சீனாவின் புதுப்பிக்கப்பட்ட  செமிகண்டக்டர் தொழில்நுட்ப   உத்தியைப் புரிந்துகொள்வதற்கான தடயங்களை இந்த அறிக்கை வழங்குகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், உலகளாவிய  செமிகண்டக்டர் தொழில்துறை நிர்வாகிகள், அமெரிக்க மற்றும் சர்வதேச அரசாங்க அதிகாரிகளுடன் டஜன் கணக்கான CSIS நேர்காணல்கள், அத்துடன் குறிப்பிடத்தக்க சீன அரசாங்க வெளியீடுகள், தலைமைத்துவ அறிக்கைகள் மற்றும் சீன நிபுணர்களின் வர்ணனை ஆகியவற்றின் பகுப்பாய்வு ஆகியவற்றை இது ஈர்க்கிறது.

பிரிவு 1  : 2018 மற்றும் 2022 க்கு இடையில் சீன அரசாங்கத்தின் முக்கிய வெளியீடுகள் மற்றும் கொள்கைகளை பகுப்பாய்வு செய்து, அக்டோபர் 7 ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு சீனாவின் எதிர்வினை புரிந்துகொள்ள தேவையான வரலாற்று சூழலை வழங்குகிறது.

பிரிவு 2 : அக்டோபர் 7 க்கு பின்  சீனாவின் தொழில்துறைக் கொள்கையில் ஏற்பட்ட  சவால், செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலியில் சீனாவின் தற்போதைய நிலையையும் , அக்டோபர் 7 அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் 2023 மார்ச் மாதம் நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அறிவித்த  கட்டுப்பாடுகள் ஏன் சீனாவின் தொழில்துறைக் கொள்கைக்கு இவ்வளவு குறிப்பிடத்தக்க சவாலை ஏற்படுத்துகின்றன என்பதையும்  விளக்குகின்றன.

பிரிவு 3 : அக்டோபர் 7 கட்டுப்பாடுகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில்,  செமிகண்டக்டர் தொழில்துறையில்   சீனாவின் வருங்கால  மூலோபாய நோக்கங்களை   பகுப்பாய்ந்து வழங்குகின்றது.

பிரிவு 4 : சீனாவின் பதிலடி -  அக்டோபர் 7 கட்டுப்பாடுகளுக்கு  சீனாவின் அரசாங்கமும் தொழில்துறையும் புதிய மற்றும் பழைய உத்திகள் மூலம் எவ்வாறு எதிர்கொள்கிறது  என்பதை பகுப்பாய்வு செய்து,  சீன செமிகண்டக்டர் தொழில்துறையின்  அஸ்திவாரத்தை  எவ்வாறு உருவாக்குகின்றது என்பதைக் விளக்குகிறது  .

பிரிவு 1: செமிகண்டக்டர்கள் பற்றிய சீனாவின் செயல்தந்திர உத்தியில் திருப்புமுனை

அக்டோபர் 7 அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்குப் பிறகான மாதங்களில், சீனாவின் போட்டி ஒப்பீட்டளவில் முடக்கப்பட்டது. பல்வேறு  ராஜதந்திர கூட்டணிகளில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை சீனா பகிரங்கமாக விமர்சித்தது. 1 டிரில்லியன் யுவானுக்கும் (143 பில்லியன் டாலர்) அதிகமான குறைக்கடத்தி தொழில்துறைக்கான  கூடுதல் மானிய முன்மொழிவுகளுக்காக உலக வர்த்தக கழகத்தில் அமெரிக்காவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது. அநாமதேய சீன ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ப்ளூம்பெர்க்கின் ஜனவரி செய்தி அறிக்கை, மானியத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று கூறியது. ஒட்டுமொத்தமாக, அக்டோபர் 7க்குப் பிறகான மாதங்களில் ஒட்டுமொத்த சீனப் பங்கு அமெரிக்காவுக்கு சமமானதாக இல்லை.

நிச்சயமாக, முக்கிய கொள்கைகளை உருவாக்குவதற்கு நேரம் எடுக்கும், மேலும் கடந்த இரண்டு மாதங்களில், அமெரிக்க மெமரி சிப் தயாரிப்பாளரான மைக்ரானின் இணைய பாதுகாப்பை குறித்த ஆய்வு மற்றும் சீனாவின் ஒட்டுமொத்த குறைக்கடத்தி உத்தியில் மாற்றம் போன்ற இரண்டு காரணங்களால் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் அதன் பங்கு குறைந்துள்ளது. இந்த அறிக்கையின் பிரிவு 4 இல் இவை மிகவும் ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அக்டோபர் 7 ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு பிறகு சீனாவின் போட்டி முடக்கப்பட்டதாகத் தோன்றுவதற்கான ஒரு பகுதி காரணம், சீனாவின் "பங்கு" ஏற்கனவே பல ஆண்டுகளாக மறைமுகமாக முன்னிலையில் இருந்து கொண்டிருந்ததுதான். சீனாவின் தலைமையைப் பொறுத்தவரை, செமிகண்டக்டர் செயல்தந்திர உத்தியை வடிவமைப்பதில் தீர்க்கமான தருணம் அக்டோபர் 2022 அல்ல, ஏப்ரல் 2018, ஒரு பெரிய சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ZTE க்கு எதிராக அமெரிக்கா மிகவும் கடுமையான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதித்தது. அக்டோபர் 7 ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பல வழிகளில் அமெரிக்கத் தரப்பில் மிகவும் தீர்க்கமான நடவடிக்கையாக இருந்தபோதிலும், ZTE உடனான வேதனையான அனுபவம், சீனாவின் தலைமையை செமிகண்டக்டர் தொழிற்துறையை பொருளாதார அடிப்படையில் அல்லாமல் தேசிய பாதுகாப்பு அடிப்படையில் பார்க்க வழிவகுத்தது. அக்டோபர் 7 கொள்கையில் இறுதியில் சேர்க்கப்பட்ட சிலவற்றை உள்ளடக்கிய அமெரிக்க நகர்வுகள் எதிர்காலத்தில் இன்னும் தீவிரமடையும் என்று (காலம், எல்லை மற்றும் கட்டுப்பாடுகளின் அதிநவீனம் குறித்து சீனா அதிர்ச்சியடைந்திருந்தாலும்) அவர்கள் நம்பினர். எனவே, எதிர்கால அமெரிக்க செமிகண்டக்டர் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மழுங்கடிக்க சீனாவின் குறைக்கடத்தி உத்தி ஏற்கனவே மறைமுகமாக தீட்டப்பட்டு வருகிறது.

செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியில் இருந்து அமெரிக்காவையும் அதனுடன் இணைந்த தொழில்நுட்பத்தையும் அகற்றுவதற்கான சீனாவின் முயற்சிகளின் தீவிரம் குறித்து அமெரிக்க மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் CSIS இடம், "அக்டோபர் 7க்கு முன்பே, சீனா அளவீடுகளை தாண்டி சென்றிருந்தது" என்றார்.

எனவே, ZTE க்கு எதிரான ஏப்ரல் 2018 குறைக்கடத்தி ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் சீனா தனது உத்தியை எவ்வாறு சரிசெய்தது என்பதைப் புரிந்துகொள்வது, அக்டோபர் 7 ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு சீனாவின் பதிலடியை மதிப்பிடுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

ZTE தடைகள் பற்றிய கதை சிக்கலானது. சுருக்கமாக பார்ப்போம்: அமெரிக்க சிப் தொழில்நுட்பம் கொண்ட தொலைத்தொடர்பு உபகரணங்களை ஈரானுக்கு விற்பதன் மூலம் ZTE சட்டவிரோதமாக அமெரிக்க பொருளாதாரத் தடைகளைத் தவிர்த்துள்ளது. மார்ச் 2016 இல், ZTE அமெரிக்க அதிகாரிகளால் பிடிபட்டு ஒரு வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, குற்றத்தை ஒப்புக்கொண்டு, மார்ச் 2017 இல் 1.2 பில்லியன் டாலர் அபராதம் செலுத்தி அமெரிக்க அரசாங்கத்துடன் பிரச்சனையை முடித்து கொண்டது. இருப்பினும், 2018ன் தொடக்கத்தில் ZTE மீண்டும் விதிமுறைகளை மீறி அமெரிக்க அரசாங்கத்திடம் மாட்டிக் கொண்டது.

ஏற்றுமதி கட்டுப்பாடுகளில், குறிப்பாக குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, மீண்டும் மீண்டும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் பொதுவாக ஒதுக்கப்படுகின்றன. ஏப்ரல் 2018ல், அமெரிக்கா சம்மட்டி அடி கொடுத்தது: அந்த நேரத்தில் சீனாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு உபகரண நிறுவனமான ZTE-க்கு அமெரிக்க அரசாங்கம் தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது. மற்ற கட்டுப்பாடுகளுடன், ZTE ஐ அதன் தொலைத்தொடர்பு தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வந்த அமெரிக்க செமிகண்டக்டர்களை வாங்குவதையும் கட்டுப்படுத்தியது. பல அமெரிக்க செமிகண்டக்டர்கள் சர்வதேச தொலைத்தொடர்பு தொழில்நுட்ப தரங்களில் இருந்ததால், அமெரிக்க தொழில்நுட்பத்திற்கு சாத்தியமான மாற்று எதுவும் இல்லை. ZTE இன் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தப்பட்டது, ஏனெனில் அவர்கள் அமெரிக்க சிப்கள் இல்லாமல் தங்கள் தயாரிப்புகளை உருவாக்க முடியாது.

சில மாதங்களில், ZTE இன் நிதிநிலைமை மோசமடைந்து விரைவான வளர்ச்சியிலிருந்து உடனடி திவால் நிலைக்கு மாறியது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டால் ZTE க்கு இறுதியில் உயிர்நாடி வழங்கப்பட்டது.

ZTE நெருக்கடிக்கு சீன தலைமை எவ்வாறு வினையாற்றியது? சீன தலைமையின் முடிவெடுக்கும் செயல்முறை பற்றி உறுதியான முடிவை அடைவது மிகவும் கடினமானது. ஏனெனில் அவர்கள் வெளிப்படையற்று இரகசியமாக இருக்க பழக்கப்பட்டுள்ளனர். சீனாவின் மேட் இன் சைனா 2025 கொள்கையின் 2015 வெளியீடு சர்வதேச பின்னடைவைத் ஏற்படுத்திய பிறகு, செமிகண்டக்டர்கள் உள்ளிட்ட தொழில்துறை கொள்கைசார் அரசாவணங்களின் மொழி,  தலைமைத்துவ உரைகள் அனைத்தும் இரகசியமாக மாறியது. மேட் இன் சைனா 2025 அதன்பிறகு சீன அரசாங்கத் தலைமைப் பேச்சுகளில் வெளிப்படையாகப் பேசப்படாவிட்டாலும், அது ஒரு முக்கிய தொழில்துறைக் கொள்கையாகவே உள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

இரகசியம் மற்றும் ஏய்ப்புத்தன்மை இருந்தபோதிலும், ZTE மீதான அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நேரடியாக சீன செயல்தந்திர உத்தியில் ஒரு பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்தது என்பதற்கு வலுவான மற்றும் வெளிப்படையாக கிடைக்கக்கூடிய மூன்று சான்றுகள் உள்ளன. முதலாவதாக, சீனா, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சியை உடனடியாகத் தொடங்கியது. இரண்டாவதாக, சீனத் தலைமையின் உரைகள் ZTE ஒரு திருப்புமுனையாக பார்க்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. மூன்றாவதாக, ZTE ஐத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் சீனா அதன் செமிகண்டக்டர் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தது.

சீன அரசாங்க தொழில்நுட்ப திணறல் பற்றிய  ஆராய்ச்சிகள்

2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம், சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி டெய்லி, சீனாவின் மிகவும் பாதிக்கப்படும் தொழில்நுட்ப திணறல் (Chokepoints) பற்றி விவரிக்கும் தொடர் கட்டுரைகளை வெளியிட்டது. (குறிப்பு: அதே சீன சொற்றொடரான “卡脖子” சில சமயங்களில் “கழுத்து சுருக்கு முடிச்சு” என்றும் மொழிபெயர்க்கப்படுகிறது). தொழில்நுட்ப முடிச்சுகள், சீனாவானது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சப்ளையர்களை தீவிரமாக சார்ந்துள்ளதையும் சீன மாற்றுகளை தயாரிப்பதும் கடினமாக இருப்பதையும் காட்டுகிறது.

பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையத்தின் பென் மர்பி இந்தத் தொடரின் நுணுக்கமான பகுப்பாய்வை வெளியிட்டார். அதில் அவர், "முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றவர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன" என்ற மிக முக்கியமான சொற்றொடர் மூலம் சீனாவின் பிரத்தியேக பிரச்சனையை  சுட்டிக்காட்டுகிறார். இதில் "மற்றவர்கள்" என்பது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள். "முக்கிய தொழில்நுட்பங்கள்" என்பது 35 அடையாளம் காணப்பட்ட திணறல்கள் (chokepoints) ஆகும், அவற்றில் 7 செமிகண்டக்டர் தொழில்துறையுடன் நேரடியாக தொடர்புடையது, இது செமிகண்டக்டர் சங்கிலியின் ஒவ்வொரு பிரிவிலும் பரவியுள்ளது. ஏப்ரல் 2018க்குப் பிறகு சீனத் தலைமைப் பேச்சுகளிலும் அரசு ஊடகங்களிலும் இந்த சொற்றொடர் அடிக்கடி வெளிப்படத் தொடங்கியது.

ஏப்ரல் 2018 ZTE நெருக்கடிக்குப் பிறகு சீனத் தலைவர்களின் உரைகள்

ஏப்ரல் 2018 இன் முக்கியத்துவத்திற்கான இரண்டாவது முக்கிய ஆதாரம் சீனத் தலைமைப் பேச்சுகளாகும். நவம்பர் 2018 இல், 13வது தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவில், சீன அறிவியல் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த டாக்டர். டான் டைனியூ, சீனாவின் மூத்த தலைவர்கள் பலருக்கு முன்பாக உரை நிகழ்த்தினார். அந்த உரையில் அவர் இவ்வாறு வாதிட்டார்.

ZTE மீதான அமெரிக்கத் தடையானது சுயசார்புள்ள உயர் மற்றும் அடிப்படை தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை நிரூபித்துள்ளது. இந்தப் பேரழிவு மீண்டும் நிகழாமல் இருக்க, முக்கிய மின்னணு பாகங்கள், உயர்தர சிப்கள் மற்றும் மென்பொருளை இறக்குமதி செய்வது பற்றி சீனா படிப்பினைக் கொள்ள வேண்டும்.

மேட் இன் சைனா 2025 உட்பட பல தசாப்த சீன தொழில்துறை கொள்கைகளுடனும் டேன் வாதிடுவது ஒத்துப்போகிறது. இருப்பினும், 2018 இல் ZTE அனுபவம் சீன தலைமையின் உத்தியில் எப்படி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பதை டானின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது.  தொழில்நுட்ப செயல்தந்திரங்களில் சீனாவின் நிலை ஏற்கனவே நீண்ட கால வலுவான பொருளாதார வளர்ச்சிக் கொள்கையாக மட்டும் இருந்தது, ஆனால் அது இப்போது அமெரிக்க பொருளாதார நெருக்கடிகளுக்கு ஈடுகொடுக்கும் விதமாக அவசர தேசிய பாதுகாப்பு முன்னுரிமையாகவும் மாறியுள்ளது.

டானின் சொல் அப்பட்டமாக இருந்தாலும், ZTE நெருக்கடியின்போது பேசிய ஜிங்பிங்'ன் உரைகளைப்போல சீன தொழில்நுட்ப சூழல் அமைப்புகளில் அந்நிய தலையீட்டை குறைத்து தேசிய பாதுகாப்பை அதிகரிப்பதை கருப்பொருளாக கொண்டுள்ளது.

நவம்பர் 2018 உரையில் ஜிங்பிங் பின்வருமாறு பேசியது குறிப்பிட்டத்தக்கது, “சர்வதேச அளவில், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் முக்கிய தொழில்நுட்பத்தைப் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. ஒருதலைப்பட்சவாதமும் வர்த்தகப் பாதுகாப்புவாதமும் உயர்ந்து, நம்மை சுயசார்பு பாதையில் பயணிக்க நிர்பந்திக்கின்றன." அதன் தொடர்ச்சியான பேச்சு சீனா தொழில்துறைக் கொள்கையின் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில் தணிக்கை (censored) செய்யப்பட்டது. சர்வதேச பதிப்புகளுக்கு, சீன அரசாங்க செய்தி நிறுவனங்கள் "சுய-சார்பு" என்ற சொற்றொடரை ஜிங்பிங் பயன்படுத்துவதை நீக்கின. இந்த சொற்றொடர் மாவோ கால முக்கியமான தொடர்பைக் கொண்டுள்ளது. முக்கிய தொழில்நுட்ப களங்களின் (Domains) சாலை வரைபடம், செமிகண்டக்டர் உள்ளிட்ட "முக்கிய சீன தயாரிப்புகளுடன் இறக்குமதியை மாற்றுவது" என்ற இலக்கை 2025 ஆம் ஆண்டுக்குள் அடைவது போன்றவை சீன வெளிநாட்டு தொழில்நுட்ப சார்பை குறைக்கும் மேட் இன் சீனா 2025 செயல்தந்திரத்திலும் எதிரொலிக்கிறது. தொழில்நுட்பத்தை மேம்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களை நிர்ப்பந்திப்பதன் மூலம் அறிவுசார் திருட்டை கட்டுப்படுத்தும் சீன முயற்சிகளையும் சுயசார்பு என்ற சொற்றொடர் நினைவூட்டுகிறது.

செப்டம்பர் 2020 இல், அமெரிக்க-சீன வர்த்தகப் போர் ஜிங்பிங் உள்ளிட்ட பிற சீன தலைவர்களை அதிரகசிய மொழிக்கு திரும்பச் செய்தது. ஜிங்பிங் ஓர் உரையை நிகழ்த்தினார், அதில் சீனாவின் மேம்பட்ட நவீனத் தொழில்நுட்ப தேவையை - சுயசார்பு தொழில்நுட்பத்திற்கான அவசரத் தேவையை - சீன 20 ஆம் நூற்றாண்டின் அணு ஆயுத மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கியத்துவத்துடன் ஒப்பிட்டுப் பேசினார், சுயசார்பென்பது கம்யூனிஸ்ட் கட்சி கொள்கையில் முக்கியமானது. ஜிங்பிங் மேலும் கூறியதாவது:

தொழில்துறையைப் பொறுத்தவரை, முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. சில முக்கியமான சாதனங்களுக்கான இறக்குமதியை நாம் நம்பியுள்ளோம். . . விரைவான முன்னேற்றங்களை உருவாக்கக்கூடிய மற்றும் சிக்கல்களை உடனடியாக தீர்க்கக்கூடிய தொழில்நுட்பங்களுடன் நாம் விரைந்து செல்ல வேண்டும். வெற்றிபெற நீண்ட காலம் தேவைப்படும்  தொழில்நுட்ப செயல்தந்திரங்களைப் பொறுத்தவரை, அவற்றை  முன்னோடியாக பயன்படுத்தப்பட வேண்டும். . . சீனா பல தொழில்நுட்ப திணறல் சிக்கல்களை எதிர்கொள்கிறது.

ஆனால் ஒட்டுமொத்த சீன செயல்தந்திரம் அமெரிக்க தொழில்நுட்ப சார்பிலிருந்து மீண்டு அதை தாண்டி செல்கிறது: சீனாவும் அமெரிக்கா சீனாவை சார்ந்து இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறது. ஏப்ரல் 10, 2020 அன்று, மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகார ஆணையத்தின் ஏழாவது கூட்டத்தில் ஜிங்பிங் ஓர் உரையை நிகழ்த்தினார், “நாம் சர்வதேச உற்பத்தி சங்கிலிகளின் சீன சார்பை இறுக்க வேண்டும், சக்திவாய்ந்த எதிர் நடவடிக்கைகள் மற்றும் அந்நிய விநியோக சங்கிலிகளை உடைப்பதன் மூலம் அதை உருவாக்க வேண்டும்" என்று கூறினார்.

சீனாவின் செமிகண்டக்டர் கொள்கையில் மாற்றங்கள்

ZTE சீன உத்தியில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கியது என்பதற்கான மூன்றாவது ஆதாரம் சீன நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் குறிப்பாக சீன அரசாங்கத்தின் கொள்கைகளிலிருந்து வருகிறது.

தனியார் துறையில், சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் அளவில்லா அரசாங்க நிதியுதவியுடன் - சிப்கள் மற்றும் சிப் தயாரிக்கும் உபகரணங்களை குவித்து, எதிர்காலத்தில் வரக்கூடிய தட்டுப்பாடுகளை சமாளிக்க தற்போதைய தேவையை விட அதிகமாக குவித்தன. செமிகண்டக்டர் உற்பத்தியாளர்கள், சீன வாடிக்கையாளர்களை "சந்தைகக்கு அப்பால் டிமாண்ட்டை உருவாக்குபவர்கள்" என்று வழக்கமாகக் குறிப்பிடுவதாக CSIS க்குத் தெரிவித்தனர். அதாவது வாடிக்கையாளர்கள் சந்தை நிலைமைகள் அல்லது லாபத்தைப் பெருக்குதல் ஆகியவற்றுடன் தொடர்பில்லாத செயல்தந்திர உத்திகளுக்காக வாங்குகிறார்கள்.

பொதுத்துறையில், சீன அரசாங்கம், சீன செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சிக்கு பெருமளவில் மானியம் வழங்குவதற்கான முந்தைய முயற்சிகளைத் தொடர்ந்ததோடு அதன் முக்கியத்துவத்தையும் மாற்றியது. 2014 இல் சீன அரசாங்கத்தால் 21 பில்லியன் டாலர் நிதியுடன் தொடங்கப்பட்ட தேசிய சிப் தொழில் (சீனாவின் "பெரிய நிதி" ஒதுக்கீடு என குறிப்பிடப்படுகிறது) 2019 இல் 35 பில்லியனுடன் டாலர் மேலும் உயர்த்தி வழங்கப்பட்டது.

அனைத்து சீன தொழில்துறை கொள்கைகளையும் போலவே, சீனாவின் உள்நாட்டு அரசுகள் மத்திய அரசின் குறைக்கடத்தி கொள்கையை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, இதில் அதிக நிதிச்சுமையும் அடங்கும். தேசிய அளவிலான பெரிய நிதிக்கு கூடுதலாக, சீனாவின் உள்ளூர் அரசாங்கங்கள் கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதிஒதுக்கீட்டில் 15 செமிகண்டக்டர் நிறுவனங்களை நிறுவியுள்ளன. அரசாங்க மானியங்கள், வரிச் சலுகைகள், பங்கு முதலீடுகள் மற்றும் குறைந்த வட்டிக் கடன்கள் உள்ளிட்ட பிற தொழில் ஆதரவுக் கருவிகளையும் சீனா முடுக்கிவிட்டுள்ளது. அமெரிக்க செமிகண்டக்டர் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் 2021 இல் இந்த நேரடி மற்றும் மறைமுக மானியங்கள் 50 பில்லியனன் டாலருக்கும் அதிகமான மதிப்புடையவை என்று கூறியுள்ளது.

ZTE அனுபவத்திற்குப் பிறகு, சீனாவின் அரசாங்க ஆதரவு அதிகரித்தது.  குறிப்பாக, செமிகண்டக்டர்களில் அமெரிக்க சார்பை குறைப்பதற்கு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மானியங்கள் அதிகரிக்கப்பட்டன. சந்தையில் அதிக லாபங்களை முதன்மைப்படுத்தாமல் செமிகண்டக்டர் சங்கிலியிலிருந்து தொழில்நுட்ப சார்பு சிக்கல்களை நீக்குவதற்கு சீன அரசு ஆதரவளித்தது.

இந்த செயல்தந்திர மாற்றத்தின் பெரும்பகுதி ZTE அனுபவத்திற்குப் பிறகமைந்தது. இது முறையாக சீன ஸ்டேட் கவுன்சிலின் ஜூலை 2020 ஆவண எண். 8 இல் "சிப் தொழிலை மேம்படுத்துவதற்கான புதிய சகாப்தத்தின் வெளியீடு" இல் எழுதப்பட்டது. ஆவண எண். 8 இன் பகுப்பாய்வில், Tai Ming Cheung, Barry Naughton மற்றும் Eric Hagt ஆகியோர், சீன அரசு "செமிகண்டக்டர் திட்டங்களுக்கு அளவில்லா ஆதரவை அளித்தது" என்றும், அனைத்து சீன உள்நாட்டு அரசுகளும் "செமிகண்டக்டர் துறையை ஊக்குவிக்க தங்கள் சக்திக்கு ஏற்ப அனைத்தையும் செய்ய" அறிவுறுத்தியது என்றும் எழுதினர். 

ஆவண எண். 8, சீன செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரிகள் மற்றும் பெருநிறுவன இலாப வரிகளிலிருந்து விலக்கு அளிப்பது, சிலவற்றுக்கு பத்து ஆண்டுகள் வரை வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது என நிதி மற்றும் பல்வேறு ஆதரவு நடவடிக்கைகளை செய்கிறது. அந்நிய செமிகண்டக்டர் தொழில்நுட்ப இறக்குமதிக்கான சீனாவின் தேவையை ஆவணம் ஒப்புக்கொள்கிறது, ஆனால் இது சுயசார்பு உத்தியில் உறுதியாக உள்ளது. "ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அரசு ஆதரவைப் பெறும் முக்கிய சிப் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக தற்காலிகமாக சாதனங்களை இறக்குமதி செய்ய வேண்டும்" என்று அது கூறுகிறது. செமிகண்டக்டர் உபகரண இறக்குமதியை தொழில்நுட்ப தன்னிறைவுக்கான பாதையில் ஒரு தற்காலிக பாதையாக சீனா கருதுகிறது.

ஆவண எண். 8 வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, சீனா தனது 14வது 5 ஆண்டு பொருளாதாரத் திட்டத்தை வெளியிட்டது, இது 2021-2025 ஆண்டுகளை உள்ளடக்கியது. ஆகஸ்ட் 2020 இல் 5 ஆண்டு பொருளாதாரத் திட்டத்தை விவாதிக்கும் உரையில், ஜிங்பிங் இவ்வாறு கூறினார்:

சர்வதேச பொருளாதாரம், தொழில்நுட்பம், கலாச்சாரம், பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆகியவை பல வழிகளில் அடிப்படை மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. உலகம் கொந்தளிப்பான மாற்றத்தின் சூழலுக்குள் நுழைகிறது. அதுவரை சிறிது காலத்திற்கு, பாதகமான வெளிப்புற சக்திகளைக் கொண்ட சூழலை எதிர்கொள்வோம். எனவே, தொடர்ச்சியான புதிய அபாயங்கள் மற்றும் சவால்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். . .

சீன சோசலிச அமைப்பின்  நன்மையை நாம் முழுமையாக செயல்படுத்த வேண்டும், அதாவது கடினமான பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தும் திறன் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களுக்கான கடுமையான போரில் சிறப்பாக ஈடுபடுவது. சீனா ஒரு பிரம்மாண்டமான சந்தையையும் முழு அளவிலான தொழில்துறை அமைப்பையும் கொண்டுள்ளது, இது புதிய தொழில்நுட்பங்களின் பாரிய பயன்பாடு மற்றும் விரைவான மறு செய்கையை வளர்ப்பதற்கு சிறப்பாக பயனளிக்கும். இத்தகைய வலிமையுடன், அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளை உற்பத்தி சக்திகளாக்குவதை துரிதப்படுத்தவும், நமது உற்பத்திச் சங்கிலியின் பாதுகாப்பை மேம்படுத்தவும் பயன்படுத்த முடியும்.

2020 அக்டோபரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 5 ஆண்டுத் திட்டத்தின் இறுதி, பொதுப் பதிப்பில் ஜிங்பிங்கின் உத்தி பிரதிபலிக்கிறது, இது செமிகண்டக்டர் தொழிலை முதன்மையான தொழில்நுட்ப முன்னுரிமையாக அறிவிக்கிறது. 5 ஆண்டு திட்டத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் அதிகாரப்பூர்வ சுருக்கம் அதை அப்பட்டமாக்கியது: சீனா "தொழில்நுட்ப தன்னிறைவை தேசிய வளர்ச்சியின் செயல்தந்திர தூணாக மாற்றும்" என்று கூறியது.

நிச்சயமாக, ZTE நிகழ்வு வெற்றிடத்தில் நிகழவில்லை, மேலும் சீன அரசாங்கத்தின் புதிய செமிகண்டக்டர் உத்தியில் இது ஒரே காரணியாகவும் இல்லை. டிரம்ப் நிர்வாகத்தின் பிற முயற்சிகள், ஹவாய் மற்றும் புஜியன் ஜின்ஹுவா மீதான அமெரிக்கத் தடைகள், டச்சு அரசாங்கம் தீவிர புற ஊதா லித்தோகிராஃபி இயந்திரங்களின் ஏற்றுமதியைத் தடுப்பது மற்றும் அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் உட்பட போட்டி கனமாக இருந்தன. ஆயினும்கூட, மேலே சுருக்கமாக கூறப்பட்ட மூன்று ஆதாரங்கள், சீன தேசிய பாதுகாப்புத் தலைமையானது அக்டோபர் 2022 க்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கும் பிரச்சனையில் கவனம் செலுத்தியது என்பதைக் காட்டுகிறது. ஜிங்பிங் உட்பட இவர்கள், அமெரிக்கா தொழில்நுட்ப சிக்கல்களை பயன்படுத்தி தங்களின் வலிமையான தொழில்நுட்ப நிறுவனங்களைக் கூட விரைவாகவும் தீர்க்கமாகவும் நெருக்கடிக்குள்ளாக்க முடியும் என்பதையும் அறிந்திருந்தனர். இவ்வாறு, பைடன் நிர்வாகம் அக்டோபர் 7, 2022 ஏற்றுமதி கட்டுப்பாடு கொள்கையை அறிமுகப்படுத்தியபோதே, சீனா அதன் செயல்தந்திர உத்திகளை ஏற்கனவே நடைமுறைப்படுத்த துவங்கியிருந்தது.

ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை ஐரோப்பா சார்ந்திருப்பதை அது ஆயுதமாக்கியது, ரஷ்யா இல்லாத எதிர்காலத்தை நோக்கி ஐரோப்பாவின் எரிசக்தித் துறையை மறுசீரமைப்பதற்கான முயற்சிகளைத் தூண்டியது போல், செமிகண்டக்டர் துறையிலும் தங்கள் உத்தியை மாற்றிக் கொள்ளாத நாடுகள் இதே அபாயத்தை எதிர்நோக்கும் நிலை உள்ளது. செமிகண்டக்டர் சங்கிலியில் தற்போது தங்கள் வெளியுறவுக் கொள்கையால் பயன்பெறும் நாடுகள், நாளை அதே கொள்கையாலேயே சந்தை மாற்று பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. 

ஆனால், அந்த சந்தை மாற்று இந்த வழக்கில் வலுவில்லாத காரணியாக இருந்தது. பைடன் பதவியேற்பதற்கு முன்பே, அக்டோபர் 7 ஏற்றுமதி கட்டுப்பாடுகள் போன்ற கொள்கையை இயற்றுவதற்கான பெரும்பாலான செலவை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஏற்கனவே ஏற்றுக்கொண்டனர். இங்கு முக்கியமானது என்னவென்றால், 2010களின் நடுப்பகுதியில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 2025 பொருளாதார மேம்பாட்டுக் கொள்கையின் கீழ், செமிகண்டக்டர் தன்னிறைவு உத்தியை சீனா ஏற்கனவே தீவிரமாகப் பின்பற்றி வந்தது. பின்னர், ஏப்ரல் 2018 இல், ZTE நெருக்கடி மற்றும் தொடர்புடைய அமெரிக்க நடவடிக்கைகள் சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலிருந்து செமிகண்டக்டர் துறையின் அவசர தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையையும் முக்கிய கவனத்தையும் அளித்திருப்பது சிறப்பானது.

பைடன் நிர்வாகம் பதவியேற்ற நேரத்தில், செமிகண்டக்டர் விஷயத்தில் அமெரிக்காவை ஒருபோதும் நம்ப முடியாது என்றும், சீன விநியோகச் சங்கிலியை விரைவில் உருவாக்க சீனா என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்றும் சீனாவின் தலைவர்கள் ஏற்கனவே நம்பினர். அத்தகைய மதிப்பீட்டைச் செய்வதன் மூலம், இந்த அறிக்கையில் மதிப்பாய்வு செய்யப்பட்ட வெளிப்படையாக கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்கள் மட்டுமல்லாமல், உளவுத்துறையின் மூலம் பல்வேறு ரகசிய தகவல்களையும் பைடன் அரசு பெற்றது.

பைடன் அரசின் நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாமல், எவ்விலை கொடுத்தாயினும் சீனா செமிகண்டக்டர் தொழில்நுட்ப சுயசார்பை தொடரப் போகிறது என்றால், அது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளிடமிருந்து வேறுபட்ட அணுகுமுறையை எதிர்கொள்ளவிருப்பது தவிர்க்கவியலாதது. சீனாவை அதன் "சுயசார்பு" செயல்தந்திர உத்தியிலிருந்து விலக்க முயற்சிப்பதற்கு பதிலாக, அமெரிக்கா இப்போது அந்த செயல்தந்திரத்தை முற்றிலுமாக வீழ்த்தும் நடவடிக்கையில்  ஈடுபட வேண்டியுள்ளது.

பிரிவு 2: அக்டோபர் 7க்குப் பிறகு சீன தொழில்துறைக் கொள்கை எதிர்கொள்ளும் சவால்கள்

உலகளாவிய செமிகண்டக்டர் சங்கிலி ஒப்பீட்டளவில் சிக்கலானது. சில நிறுவனங்கள் பல தொழில்களை செய்கின்றன, இன்னும் சிலமட்டும்தான் இந்த துறையில் பிரத்யேகமானவை. ஆனால் எந்த ஒரு நிறுவனமும் - உண்மையில் எந்த ஒரு நாடும் - தற்போது நவீன பொருளாதாரத்திற்குத் தேவையான அனைத்து வகையான செமிகண்டக்டர் சங்கிலியில் உள்ள அனைத்துப் பாத்திரங்களையும் சுயமாக செய்ய இயலாது. உலகளவில் பல்லாயிரக்கணக்கான முன்னணி சிப் உற்பத்தியாளர்கள் இருந்தாலும் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே தரமான நம்பகமான தொழில்நுட்ப திறன்களோடு இயங்குகின்றனர். 

மார்ச் 2023 இல் ஜப்பான் மற்றும் நெதர்லாந்தால் அமெரிக்க அக்டோபர் 7 ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது பற்றியும் CSIS அறிக்கைகளில் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைகள் சீனாவின் AI மற்றும் செமிகண்டக்டர் தொழில்களுக்கு ஏற்படுத்தும் சவாலையும், அத்துடன் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் கொள்கையைப் பின்பற்றுவதற்கான நியாயமான தேசியப் பாதுகாப்புக் காரணங்களையும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு இந்த பகுப்பாய்வுகளைப் படிக்குமாறு வாசகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அக்டோபர் 7 ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு பிறகு சீன தொழில்துறை கொள்கை சந்திக்கவிருக்கும் பல்வேறு சவால்களைப் பற்றி இந்தப் பகுதியில் கவனம் செலுத்தி பார்க்கவுள்ளோம். அமெரிக்கா, தைவான் மற்றும் கொரியா (அமெரிக்க நேரடி தயாரிப்பு விதியின் கட்டுப்பாட்டில் செயல்படும்) ஆகிய மூன்று நாடுகளும், செமிகண்டக்டர் சங்கிலியின் ஒவ்வொரு பிரிவிலும் சீனாவின் லட்சியங்களை சவால் செய்யும் வகையில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஏற்றுமதி கட்டுப்பாடுகள், மென்பொருள் வடிவமைப்பு, தயாரிப்பு பொருட்கள், கெமிக்கல் மற்றும் உற்பத்தி உபகரணங்களில் சீனாவை குறிவைக்கின்றன. மேம்படுத்தப்பட்ட சிப் - தயாரிக்கும் உபகரணங்களான எட்சிங், லித்தோகிராபி, டெபாசிஷன், அளவீடு உள்ளிட்டவற்றின் மீது அமெரிக்கா, டச்சு மற்றும் ஜப்பான் கூட்டாக தங்களது கட்டுப்பாடுகளை நிறுவி வருகின்றன.

நடைமுறையில், சீன சுயசார்பு கொள்கை இவ்வாறு பல்வேறு தொழில்நுட்பத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் சீனா தனது லாப நோக்கிலிருந்து மட்டுமல்லாமல் இந்த தடைகளையும் ஒரே நேரத்தில் கடக்க வேண்டியுள்ளது. மேம்பட்ட AI சிப் - வடிவமைப்பு நிறுவனத்தை உருவாக்குவதில் சீனா வெற்றி பெற்றாலும், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் மேம்பட்ட வெளிநாட்டு உபகரணங்கள் மற்றும் கெமிக்கல் மீதான தடைகளாலும் சீன நிறுவனங்களால் மேம்பட்ட சிப்களை உருவாக்க முடியாது. அமெரிக்காவின் உலகளாவிய சிப் உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு கட்டுப்பாடுகளால் உலகளாவிய சிப் நிறுவனங்களும் சீன சிப் வடிவமைப்புகளை ஏற்கும் நிலையில் இல்லை. 

சீன சிப் நிறுவனங்களுக்கு இந்த பிரச்சினை கடினமானது, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளில் (16nm லாஜிக், 18nm DRAM மற்றும் 128-லேயர் NAND) உள்ளடக்கிய செயல்திறன் வரம்புகளுக்கு அப்பால் சிப்களை உருவாக்கத் தேவையான மேம்பட்ட உற்பத்தி உபகரணங்களை அவை இறக்குமதி செய்ய முடியாது. ஒரு சீன செமிகண்டக்டர் உபகரண நிறுவனம் சுயமாக மேம்பட்ட உபகரணங்களை தயாரிப்பதில் வெற்றி பெற்றாலும் (அது கடினமான மற்றும் விலையுயர்ந்த பணியாக இருப்பினும்) அந்த உபகரணமானது கிட்டத்தட்ட பயனற்றது. எந்த வணிக ஜெட் விமானமும் இறக்கைகள், என்ஜின்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தரையிறங்கும் கியர் இல்லாமல் பறக்க முடியாது என்பது போலவே, செமிகண்டக்டர் தயாரிப்பு உபகரணங்களின் முழுதொகுப்பு மட்டுமே சிப்பை முழுமையாக உருவாக்க முடியும்.

மேலும், மேம்பட்ட சிப் உற்பத்திக்குத் தேவையான துல்லியம் மற்றும் நம்பகமான ஒரு முன்மாதிரி அமைப்பை உருவாக்குவதற்கும் செயல்திறன் கூடுதலான அமைப்புகளை உருவாக்குவதற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. எனவே, ஒரு மேம்பட்ட தொழில்நுட்பத்தில் தனிப்பட்ட சீன நிறுவன வெற்றிகள் வணிகச் சந்தையில் ஒரு முடுக்கத்தை ஏற்படுத்த முடியாது. செயல்திறன் கொண்ட சிப்களை உற்பத்தி செய்வதற்கு முன்னர் சீன செமிகண்டக்டர் முழு உற்பத்தி அமைப்பும் அக்டோபர் 7க்கு முன்பே தன்னிறைவை பெற்று இருந்திருக்க வேண்டும். இதுவே சீன செமிகண்டக்டர் தொழில்துறை கொள்கை எதிர்கொள்ளும் முக்கிய சவாலாகும். நிச்சயமாக, இது க்ரோனி முதலாளித்துவம் மற்றும் தகவல் சமச்சீரற்ற தன்மையின் விளைவாகும்.

தகவல் சமச்சீரற்ற தன்மை என்பது, நாட்டின் ஒட்டுமொத்த தொழில்நுட்ப மட்டத்தை (அரசாங்கம் விரும்பும் அளவுக்கு) முன்னேற்றுவதற்கு, எந்தெந்த நிறுவனங்கள் அரசாங்க மானியங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை திறம்பட பயன்படுத்த விரும்புகின்றன என்பதை அரசாங்கம் காண மறுத்தது.

குரோனி முதலாளித்துவம் என்பது எவ்வித முன் அனுபவமும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக திறனுமற்ற நிறுவனங்கள் தங்களை வெற்றிபெற்ற நிறுவனங்களாக பிம்பபடுத்தி ஆளும் வர்க்க கூட்டோடு மானியங்களையும் சலுகைகளையும் பெற்று உயிர்வாழும் அமைப்பு.

இந்த இரண்டு சவால்களைத் தீர்ப்பதற்கான பாரம்பரிய தொழில்துறைக் கொள்கை இயங்குமுறையானது "ஏற்றுமதி ஒழுக்கம்" ஆகும், இக்கொள்கை பாதுகாக்கப்பட்ட உள்நாட்டு சந்தைகளுக்கு விற்காமல் வெளிநாட்டு சந்தைகளில் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு முதன்மையாக வெகுமதி அளிக்கும் நிபந்தனைகளை அரசு ஆதரிக்க கூறுகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும பொருளாதார அளவிலும் முன்னேறிய வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இயல்பாகவே தங்கள் சப்ளையர்கள் கட்டுக்கோப்பான தரநிலைகளோடு நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பத்தில் சர்வதேச சிறந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கோருவார்கள். வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ஒரு சப்ளையரின் முன்னேற்றத்திற்கு நேரடியாகவே நிபுணத்துவம் மற்றும் பிற ஆதரவையும் வழங்க முடியும். இது தகவல் சமச்சீரற்ற பிரச்சனை (அதிகாரிகள் தேவையான சந்தை சமிக்ஞையை வழங்கும் தெளிவான ஏற்றுமதி அளவீடுகளுக்கு மானியங்களை சீரமைக்க முடியும் என்பதால்) மற்றும் குரோனி முதலாளித்துவ பிரச்சனை (அரசியல் தொடர்புகளுக்கு பதிலாக ஏற்றுமதி வெற்றிக்கு ஏற்ப தானாகவே மானியங்களை வழங்குவதன் மூலம்) தீர்க்கிறது.

20 ஆம் நூற்றாண்டில் ஜப்பான், தைவான் மற்றும் தென் கொரியாவின் வெற்றிகரமான தொழில்துறை கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்றுமதி ஒழுக்கம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. எவ்வாறாயினும், சீனாவின் நவீன ஏற்றுமதி ஏற்றம், 1995 இல் அதன் உறுப்பினர்களுக்கான ஏற்றுமதி மானியங்களைத் தடைசெய்த உலக வர்த்தக கழகத்தில் (WTO) சீனா சேர்ந்த பிறகு ஏற்பட்டது. சீனா பல்வேறு காலகட்டங்களில் அரசாங்கத்தின் - வரி தள்ளுபடிகள், குறைவான மதிப்புள்ள நாணயம், மற்றும் குறைந்த வட்டி கடன்கள் - ஆகிய பல்வேறு சலுகைகளை ஏற்றுமதிகளை ஊக்குவிக்க வழங்கியது. ஆனால் ஜப்பானிய, தென் கொரிய மற்றும் தைவானிய அணுகுமுறைகள் அதிக இலக்கு மற்றும் குறிப்பிட்ட செயல்திறன் அளவுகோல்களுடன் இணைந்த ஏற்றுமதி ஒழுக்கத்தையும் வலுவாக பின்பற்றி  வளர்கின்றன.

எனவே, சீனாவின் WTO-க்கு பிந்தைய தொழில்துறை கொள்கை அணுகுமுறை (குறிப்பாக 2006 க்குப் பிறகு) மாறியது. மானியங்கள் வழங்குவது மற்றும் பாதுகாப்பு ஆதரவுகளுக்கே உள்நாட்டு நிறுவனங்களை காட்டிலும் சீனாவில் உற்பத்தி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருந்தது. தென் கொரியா, ஜப்பான் அல்லது தைவானைக் காட்டிலும், சீனா தனது முக்கிய வளர்ச்சிக் காலங்களில் அந்நிய நேரடி முதலீட்டை நம்பியிருந்தது. வெளிநாட்டு மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக நிபுணத்துவம் ஆகியவற்றின் வருகை சீனாவில் செமிகண்டக்டர் உட்பட பல தொழில்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு நேர்மாறாக, ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவான் ஆகியவை உள்நாட்டு முதலீடு (நிதி அமைப்பின் கடுமையான கட்டுப்பாட்டின் மூலம்) மற்றும் உரிம ஒப்பந்தங்கள் மூலம் தொழில்நுட்ப பரிமாற்றங்களை அதிகம் நம்பியுள்ளன.

அதிர்ஷ்டவசமாக சீனாவைப் பொறுத்தவரை, அதன் உள்நாட்டுச் சந்தை இப்போது போதுமான அளவு பெரியதாக உள்ளது, தொழில்துறைக் கொள்கையின் சில பாரம்பரிய பலவீனமான அம்சங்கள் பிற நாடுகளில் இருந்ததை விட குறைவான காரணிகளாக உள்ளன. இணைய தொழில்நுட்பம் போன்ற அந்நிய போட்டிகளற்ற சில சீன தொழில்களில் கூட, உள்நாட்டு சந்தையில் நிலவிய போட்டி பலவீனமானவர்களை வீழ்த்தும் அளவுக்கு கடுமையாக உள்ளது, மேலும் சந்தை பல பெரிய அளவிலான நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. தென் கொரியா மற்றும் தைவானில் உள்ள செமிகண்டக்டர் தயாரிப்பாளர்கள், இதற்கு நேர்மாறாக, ஏற்றுமதியில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியின்றி, போதிய வருமானமின்றி உள்ளனர்.

அக்டோபர் 7 ஏற்றுமதி கட்டுப்பாடுகள் சீன செமிகண்டக்டர் தொழில்துறையின் முன்னேற்றத்திற்கு ஏன் இத்தகைய சவாலை முன்வைக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது அடிப்படையான பின்னணியாகும்: சீன சிப்மேக்கர்கள், சிப் உபகரண தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்க விரும்பும் அதிகாரிகளுக்கு, சர்வதேச சந்தைகளும் அவை  வெளிப்படுத்தும் ஆலோசனைகளுமே  சரியான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வளர்ச்சிப் பாதையை பின்பற்றுவதை உறுதிசெய்யும். 

அக்டோபர் 7 க்கு முன், சீனாவின் சிப் உற்பத்தித் தொழிலில் பகுதி அந்த பாதையில் செல்ல முடிந்திருக்கும், எடுத்துக்காட்டாக, லித்தோகிராஃபியில் பின்தங்கிய நிலையில் மேம்பட்ட எட்சிங் கருவிகளில் முன்னேற்றம் அடைந்திருக்கலாம். இருப்பினும், இப்போது, சீனா 16 nm சிப் அல்லது அதைவிட சிறந்த (அல்லது அதிக நினைவாற்றல் கொண்ட) சிப்களை உற்பத்தி செய்ய தொடங்கும் முன் சீனா தனதே கடினமான ஒவ்வொரு தொழில்நுட்பத் தடைகளையும் உடைக்க வேண்டும்.

மோசமான விஷயம் என்னவென்றால், சீன செமிகண்டக்டர் உபகரண நிறுவனங்கள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் டச்சு நிறுவனங்களால் வழங்கப்படும் நிபுணத்துவம் மற்றும் ஆலோசனையின்றி முற்றிலும் செய்ய வேண்டியிருக்கும். அத்தகைய தொழில்நுட்ப பரிமாற்றங்களை ஏற்றுமதி உரிமத் தேவைகளுக்கு உட்பட்டு செய்கிறது, இதனால் நடைமுறையில் தடை செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக, சீனாவுக்கான சிப்மேக்கிங் உபகரணங்களை தயாரிக்க பிற எந்த வெளிநாடுகளும் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் மேம்பட்ட சிப் மேக்கிங் உபகரண உற்பத்தியாளர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்காக அவர்கள் தங்களுது நீண்டகால உறவை துண்டித்து கொள்வது ஆபத்தானது. 

சீன சிப்மேக்கர்களின் (அல்லது "பேப்ஸ்") வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். பல சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சீனாவில் அசெம்பிள் செய்வதால், பல "உள்நாட்டு" சிப்கள் உண்மையில் உலக சந்தை மற்றும் சர்வதேச வாடிக்கையாளர் தேவையை ஒத்துள்ளன. இருப்பினும், இதிலும் கூட நிலைமை மோசமாகிவிட்டது.

2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், ஐபோன்களில் பயன்படுத்துவதற்காக சீனாவின் YMTC இலிருந்து மேம்பட்ட NAND மெமரி சிப்களை வாங்கும் முயற்சியில் ஆப்பிள் இருந்தது. ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அடுத்து ஆப்பிள் ஆர்டரை ரத்து செய்தது. சீன SMIC இன் வருவாயில் சுமார் 20% பங்கு வகிக்கும் Qualcomm மட்டும், அக்டோபர் 7க்கு பிறகு வரம்புகளைக் காட்டிலும் குறைவான செயல்திறன் சிப்களுக்கான சப்ளைகளுக்கு SMIC ஐ கூட கைவிடலாமா என்று பரிசீலித்து வருகிறது. கம்ப்யூட்டர் தயாரிப்பாளரான டெல் 2024 ஆம் ஆண்டிற்குள் சீன சிப்கள் வாங்குவதை நிறுத்தும் திட்டத்தை அறிவித்தது. சீனாவின் குறைக்கடத்தித் தொழில் அரசாங்கத்தால் உந்தப்பட்டு பெருகி வெளிநாட்டு நிறுவனங்களை ஒடுக்குவதால், இந்த உலகளாவிய வெளியேற்றம் துரிதப்படுத்தப்படும்.

சீனாவின் மேம்பட்ட (பாரம்பரிய ஒன்றல்ல என்றாலும்) சிப்மேக்கிங் துறையில், ஏற்றுமதி ஒழுக்கம் (சீன பண்புகளை உள்ளடக்கியது என்றாலும்) இப்போது அதனிடமில்லை. அதாவது, சீனா முற்றிலும் சுயசார்பு பொருளாதார நிலைக்கான முயற்சியில் உள்ளது. இது நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தாலும் மிகவும் ஆபத்தானது மற்றும் அதிக விலை கொண்டது. சீனாவின் உள்நாட்டு குறைக்கடத்தி சந்தை மிகப்பெரியது. ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளபடி, அந்த "உள்நாட்டு" தேவையின் பெரும்பகுதி சர்வதேச இயல்புடையது, ஏனெனில் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக சீனாவில் அசெம்பிள் செய்யப்படும் தயாரிப்புகளுக்கு இடைநிலை பொருளாக இந்த செமிகண்டக்டர்கள் உள்ளது. அதனால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்த உள்நாட்டு சீன சிப் விற்பனை குறைய வாய்ப்புள்ளது. ஏற்றுமதி ஒழுக்கம் இல்லாமல், தகவல் சமச்சீரற்ற தன்மை மற்றும் குரோனி முதலாளித்துவத்தின் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான தெளிவான பாதை சீனாவுக்கு இல்லை.

குறைக்கடத்தி துறையில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் சீனாவின் அரசாங்கம் மோசமான சாதனையைப் பெற்றுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், புதிய போட்டியாளர்களை இரட்டிப்பாக்கும் செயல்தந்திர உத்தியின் அடிப்படையில் இந்தத் துறை பணத்தால் நிரப்பப்படுகிறது. சிப் வடிவமைப்பு போன்ற குறைந்த  மூலதன முதலீடுகளுள்ள குறைக்கடத்தி தொழில்துறை ஏற்றுமதி ஒழுக்கத்துடன் இணைக்கப்படும் போது இது ஒரு சாத்தியமான உத்தியாகும். ஆனால் சிப் ஃபேப்ரிகேஷன் மற்றும் செமிகண்டக்டர் உபகரண உற்பத்தி போன்ற தொழில்துறையின் உயர் மூலதன முதலீடு பிரிவுகளில், வெற்றியாளர்களை முன்கூட்டியே தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதற்கான செலவுகள் அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம். எனவே, சீனா மிகவும் விலையுயர்ந்த சில பந்தயங்களை சந்திக்க வேண்டியிருந்ததோடு சீன அரசாங்கம் தேர்ந்தெடுத்த பெரும்பாலான "நிறுவனங்கள்" அளவில்லா அரசாங்க ஆதரவுடன் தாங்களும் திவாலாவதைப் பார்க்க வேண்டியிருந்தது. 3,470 சீன சிப் நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் (அதாவது அக்டோபர் 7 ஆம் தேதிக்கு முன்பே) மூடப்பட்டன, அது 2020 ஆம் ஆண்டில் 1,397 ஆக இருந்தது.

பரவலான ஊழல் உதவாது. இந்த திவாலான சிப் நிறுவனங்களில் பல ஊழல், நிதி மோசடிகளால்  கேடுகெட்ட குப்பைகளாக சீரழிந்தன. சீனாவின் செமிகண்டக்டர் "நிதி மோசடிகளில்" உயர்மட்ட தலைவர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டில் 2022 இல் கைது செய்யப்பட்டனர்.

இந்த பிரிவுகளின் உயர் மூலதன முதலீட்டு தேவைகள் ஏற்கனவே சீனாவின் நிலையான ஓட்டத்தையும் கடினமாக்கிவிட்டது. சீனாவின் குரோனி முதலாளித்துவமும் ஊழல்களும் - மேம்பட்ட திறன் சிப் பிரிவுகளிலிருந்த கொஞ்சம் நஞ்சம் ஏற்றுமதி ஒழுக்கத்தையும் மொத்தமாக இழப்பது - போன்ற சவால்களை மோசமாக்கும். மேம்படுத்தப்படாத பிரிவுகளில், சீன சிப் உபகரண உற்பத்தியாளர்கள் தரமான சிப் தயாரிப்பு வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டிக்கும் ஆட்பட்டுள்ளனர்.

சீனா அநேகமாக இந்த அமைப்பில் அதிக பணத்தை செலுத்த தயாராக உள்ளது, ஆனால் முன்னணி நிறுவனங்களை உருவாக்குவதை விட ஊழல் அதிகாரிகளை வளப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளதால் கூடுதல் பணத்தின்  உண்மையான மதிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. ஒரு அமெரிக்க அரசாங்க அதிகாரி சிஎஸ்ஐஎஸ்ஸிடம், "சீன குறைக்கடத்தி மானியங்கள் ஏற்கனவே தொழில்துறை உற்பத்திக்கு தேவையான வரம்பை கடந்துவிட்டது" என்று கூறினார்.

இந்த தலைவலி கொடுக்கும் பிரச்சனைகள் இருந்தபோதிலும், சீனா இதை கைவிடப் போவதில்லை. 20 ஆம் நூற்றாண்டு ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவான் ஆகியவை சிறந்த தொழில்துறை கொள்கையைக் கொண்டிருந்தன, ஆனால் 21 ஆம் நூற்றாண்டு சீனாவிடம் உலக பணக்கார நாடாக மாறும் பிடிவாதம் மட்டுமே உள்ளது. மின்சார கார்கள் போன்ற பல துறைகளில், சீனா சிறப்பான பொறுமையோடு உலக அளவில் போட்டிப்போடும் சீன நிறுவனங்களை உருவாக்குவதற்காக வியக்கத்தக்க தொகைகளை வீணடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், சில சமயங்களில், இந்த பொறுமை பலனைத் தந்துள்ளது: "சீன BYD, டெஸ்லா கார் நிறுவனத்தை சிறப்பாக முந்துகிறது" என்ற தலைப்பில் சமீபத்திய எகனாமிஸ்ட் கட்டுரை ஒன்று இருந்தது.

மொத்தத்தில், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக செமிகண்டக்டர்களில் தன்னிறைவைத் தொடரும் சீனாவின் அடிப்படை உத்தியானது ஏப்ரல் 2018க்குப் பிறகு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இருப்பினும், அக்டோபர் 7 சர்வதேச உறவுகளில் ஒரு முக்கியமான தருணம், இது சீனா எதிர்பார்த்ததை விட விரைவாக  குறைக்கடத்திகளுக்கான சீனாவின் தொழில்துறை கொள்கைக்கு பெரும் சவால்களை முன்வைக்கிறது. புதுப்பிக்கப்பட்ட புதிய செயல் தந்திர உத்திகளுடன் சீனா செயலாற்றும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கான சில கூறுகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. அந்த செயலாற்றல் அடுத்து வரும் பிரிவு 3 இன் மையமாகும்.

பிரிவு 3: அக்டோபர் 7 தடைக்கு எதிரான சீனாவின் போர்தந்திர அடிப்படையிலான திட்ட இலக்குகள்

அக்டோபர் 7 தடைக்கு பிறகு சீனா நான்கு விதமான திட்ட இலக்குகளை போர்த்தந்திர அடிப்படையில் வகுத்து செயல்பட்டு வருகிறது:

1. அந்நிய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு பலியாகும் பாதகமான நிலையை குறைத்தல்

2. அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் பொருளாதார தடைகளை முறியடித்தல்

3. சர்வதேச பொருளாதாரம் சீனாவைச் சார்ந்திருக்கும் நிலையை அதிகரித்தல்

4. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பலன்களை பொருளாதரம் மற்றும் பாதுகாப்புத் துறையில் பயன்படுத்துதல்

அந்நிய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு பலியாகும் பாதகமான நிலையை குறைத்தல்

பொருளாதார தடைகள் சம்பந்தப்பட்ட விசயங்கள் கூடுமானவரை பிரிவு-1 ல் விளக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் சொல்லியாக வேண்டிய கூடுதலான ஒரு விசயமும் உள்ளது: தடாலடியாக அமெரிக்காவுடன் சேர்ந்து அதன் நட்பு நாடுகளும் கூட குறைகடத்தி ஏற்றுமதியின் மீது தடை விதிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. 2020-ல் எண்ணெய் எரிவாயு இறக்குமதி செய்த செலவை விட அதிகமாக அதாவது 350 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான குறைகடத்திகளை சீனா இறக்குமதி செய்துள்ளது. இப்பெரும் அளவிலான அந்நிய சிப்களும், தொழில்நுட்பங்களின் இறக்குமதியும் தடாலடியாக நிறுத்தப்பட்டால் பொருளாதாரப் பேரழிவே ஏற்படக்கூடும்.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பலதரப்பட்ட சிப்கள் மீது தடை விதித்தபோது பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும்.  ரஷ்யாவுடன் “நிபந்தனையற்ற முறையில்” நட்புறவை பேணி வரும் சீனா முன்வந்து ரஷ்யாவுக்கு தேவையான சிப்களை வழங்கி உதவியது. சீனா தைவான் மீது ஆக்கிரமிப்பு போர் நடத்தினாலோ அல்லது தைவானுடனான பிற நாடுகளின் தொடர்பை முடக்க முயன்றாலோ சீனாவிற்கும் இதே போன்று முழுவீச்சிலான சிப் ஏற்றமதி தடை விதிக்கப்பதற்கும் வாய்ப்புள்ளது. 2027 க்குள்ளாக தைவானை ஆக்கிரமிப்பது என்ற இலக்கை சீன இராணுவத்திற்கு ஜிங்பிங் தந்துள்ளார் என்ற செய்தியும் வெளிவந்தது.

வருங்காலங்களில் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் பொருளாதார தடைகளை முறியடித்தல்

அக்டோபர் 7-ல் அமெரிக்கா விதித்த தடையைத் தொடர்ந்து சீனா எப்படியெல்லாம் எதிர்வினையாற்றப்போகிறதோ என்பதில் தான் விவாதங்கள் காரசாரமாக நடந்து கொண்டிருந்தது. பிரிவு 4 ல்  இது பற்றி கூடுதலாக விவாதிக்கப்பட்டுள்ளது; சீனா தக்க பதிலடி தரும் என்பதோடு தொடர்ந்து பதிலடி தருவதற்கு தயாரகவே இருக்கும். கொடுக்கப்படும் பதிலடி வாழ்வா சாவா என்ற போராட்டமாக இருக்குமா அல்லது தனது போர்தந்திர இலக்கை அடைவதற்கான வழியாக இருக்குமா என்பதை மையமாகக் கொண்டே காரசாரமான விவாதங்கள் நடந்தன. செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைகடத்தி தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை சீனாவின் மையமான நோக்கம் என்பது அமெரிக்காவை பழிக்குப் பழி வாங்குவதல்ல மாறாக தனது போர்த்தந்திர நலன்களுக்கு இத்தொழில்நுட்பங்களை இலாவகமாக பயன்படுத்திக் கொள்வதே சீனாவின் நோக்கமாகும். வருங்காலங்களில் அமெரிக்கா மற்றும அதன் நேச நாடுகள் விதிக்கும் தடைகளை முறியடிப்பதே சீன எதிர்வினையின் முக்கிய நோக்கமாக இருக்கிறதே தவிர பழிக்குப் பழியல்ல.

டிரம்ப் ஆட்சியிலிருந்த போது விதிக்கப்பட்ட தடையை விட அக்டோபர் 7(2022) அன்று விதிக்கப்பட்ட ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் என்பது ஒட்டுமொத்தமாக குறைகடத்திகள் சம்பந்தமான பொருட்கள் மீது பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தியது எனலாம். அமெரிக்காவிற்கு எதிரான சீன நடவடிக்கைள் அதிகரித்து வந்ததற்கு எதிர்வினையாகவே கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா பக்கமிருந்து விதிக்கப்படும் பொருளாதார தடைகளும் கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளது. சீனா எதை தனது போர்தந்திர நலன்களுக்கு அடிப்படையானது எனக் கருதி வருகிறதோ அதை உடைக்கும் வகையில் தான் அக்டோபர் 7 தடை அமைந்துள்ளது.  அமெரிக்காவின் தாக்குதல்களை முறியடிப்பது அல்லது சலுகைகள் கேட்டு சமாதானம் பேசுவது என்ற இரண்டு வழிகள் மட்டுமே சீனாவிற்கு இருக்கிறது. அமெரிக்காவின் மேலாதிக்க போக்கிற்கு தக்க பதிலடி கொடுப்பது என்ற வழியையே சீனா தேர்ந்தெடுத்துள்ளது. அதற்கான வேலையிலும் சீனா இறங்கியுள்ளது. இதற்கு முன்பு ஏற்பட்ட முரண்பாடுகளில் இல்லாத அளவிற்கு, சீனாவிற்கும் கூட இதில் பாதிப்பு ஏற்பட்டாலும்,  அமெரிக்காவிற்கு அதிக பாதிப்பை உண்டு பன்ன வேண்டும் எனும் வகையில் சீனாவின் பதில் தாக்குதலுக்கான தயாரிப்புகள் இருந்து வருகிறது.

அந்நிய நாடுகள் சீனாவைச் சார்ந்திருக்கும் நிலையை அதிகரித்தல்

குறைகடத்திகளை அதிகம் வாங்கும் ஒரு நாடு என்ற முறையில் தான் தற்போது உலக நாடுகள் சீனாவை சார்ந்துள்ளன. 350 பில்லியன் டாலர்கள் என்ற அளவிற்கு சீனாவின் இறக்குமதி இருக்கிறதென்றால் அந்த அளவிற்கு உலக நாடுகள் குறைகடத்திகளை சீனாவிற்கு விற்பனை செய்கின்றன என்று அர்த்தமாகும். குறைகடத்திகள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு பொதுவாகவே அதிக பணம் தேவைப்படும்; இந்நிலையில் சிப் விற்பனை தடைபட்டுப்போனால் பண வரவும் நின்றுவிடும். அமெரிக்காவைச் சேர்ந்த குறைகடத்தி தொழிற்துறை சம்மேளனத்தின் புள்ளிவிரத்தின்படி சீனாவில் என்னென்ன முறையிலெல்லாம் சிப்கள் இறக்கமதியாகின்றன என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

1. சீனாவைத் தலையிடமாகக் கொண்டு எலக்ட்ரானிக் சாதனங்களை(செல்பேசிகள், கணினிகள், அரவை இயந்திரங்கள்) தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் 26 சதவீத சிப்களை இறக்குமதி செய்கின்றன;

2. பாகங்களை ஒன்று சேர்க்கும் நிறுவனங்கள்(அந்நிய நிறுவனங்கள் உட்பட) 35 சதவீத சிப்களை இறக்குமதி செய்கின்றன;

3. இறுதிநிலையில் மின்னணு சாதனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மூலமாக 24 சதவீத சிப்கள் சீனாவிற்கு இறக்குமதியாகின்றன.

2021ல் உலகளவில் 26 சதவீதமளவிற்கு குறைகடத்தியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாதனங்களை அதிகளவில் வாங்கி குவித்த நாடாக சீனா இருந்து வருகிறது.

இருந்தபோதிலும், கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள், மற்றும் அக்டோபர் 7 தடை போன்றவற்றால் சிப் இறக்குமதி மட்டுமல்லாது சிப் தயாரிப்பதற்கு தேவைப்படும் இயந்திறங்களின் இறக்குமதியும் கணிசமான அளவிற்கு சரிந்தது. மீன்பிடித்தொழில், ஒயின் தயாரித்தல் மற்றும் அமெரிக்காவில் பிரபலாமான NBA கூடைப்பந்தாட்ட நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதற்கு சீனாவில் தடை விதித்தது போன்று தடை விதிப்பதையே ஒரு அயலுறவுக் கொள்கையாக மாற்றுவதற்கு சீனா விரும்புகிறது எனலாம். சீனா விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சீன சந்தைகளில் அந்நியப் பொருட்களை விற்பதற்கோ வாங்குவதற்கோ அனுமதி அளிக்கப்படும் என்ற உத்தியை ஒரு அயலுறவுக் கொள்கையாக மாற்ற வேண்டும் என சீனத் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசத் துவங்கிவிட்டனர்.

மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதை பயன்படுத்தி விதிக்கப்படும் நிபந்தனைகள் ஓரளவிற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதனால் தான் சீனா ஏற்றுமதியில் தனது பிடியை பலப்படுத்த முயன்று வருகிறது. “நாம் சர்வதேச அளவிலான உற்பத்தி சங்கிலித் தொடர்,  சீனாவைச் சார்ந்து இயங்கிவரும் நிலைமையை மேலும் வலுப்படுத்த வேண்டும்; தேவை எழும் போது வேண்டுமென்றே அந்நிய நாடுகளுக்கு சரக்குகள் வழங்குவதை நிறுத்துவது போன்றவற்றின் மூலமும் வலுவான தடை விதிப்பதன் மூலம் பதிலடிகள் தருவதற்கான திறனையும், அந்நிய நாடுகளின் தடைகளிலிலிருந்து தற்காத்து கொள்ளுவதற்கான திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.” என்று 2020 ஏப்ரலில் ஜிங்பிங் பேசியிருந்தார்.

உலகளவில் சிப் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியமான நாடாக சீனா உருவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட 9 சதவீதமளவிற்கு 2020-ல் சீனாவிலிருந்து சிப் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலைமை கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட ஆண்டுகளில் கணிசமான அளவிற்கு சரிந்தது. 28 நானோமீட்டர் அல்லது அதைவிட பெரியளவிலான வடிவமைப்பை கொண்ட பழமைவாய்ந்த லெகசி(legacy) சிப் தயாரிக்கும் திறன் மட்டுமே சீனாவிடமுள்ளது. பழமைவாய்ந்த சிப் தயாரிப்பு தொழிலில் இதுவரை சீனா மட்டுமே அதிக முதிலீடுகளை போட்டுள்ளது. பழமைவாய்ந்த லெகசி சிப்கள் தான் அதிகப்படியான தொழிற்துறைகளுக்கு அவசியமான சாதனமாக விளங்குகிறது; இதன் தேவை மென்மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பழமைவாய்ந்த லெகசி சிப் தயாரிப்பில் சீனா தனது மேலாதிக்கத்தை நிறுவுவதில் வெற்றிபெறும் என்றால், வாகன தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிப்கள் போன்று முக்கிய தொழிற்துறையில் சீனா தனது செல்வாக்கை திணிப்பதற்கான வாய்ப்பு கைவரப்பெறும்.

உலகளவில் அருமண் கனிம வளச் சுரங்கத்தொழிலில் 60 சதவீதமளவிற்கும், குறிப்பாக அதன் சுத்திகரிப்பு தொழிலில் 80 சதவீதமளவிற்கு சீனாவின் ஆதிக்க பிடியின் கீழ் உள்ளதால், குறுகிய காலத்திற்காவது தனது செல்வாக்கை பிற நாடுகளின் திணிப்பதற்கான கருவியாக இந்த துறை சீனாவிற்கு விளங்குகிறது என்றவாறு மிக அதிகமாக இது பற்றி விவாதித்து வந்துள்ளனர். அருமண் கணி வளங்கள் மீதான சீனாவின் ஆதிக்கமும், குறைகடத்திகள் மீதான அமெரிக்காவின் ஆதிக்கமு;ம ஒன்றல்ல; இரண்டிற்கும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின்மை, தொழில்நுட்பங்களை பெறுவதில் இருக்கும் பல்வேறு தடைகள் போன்றவையே சீனாவின் குறைகடத்தி சார்பு நிலைக்கான காரணமாக விளங்குகிறது. இதற்கு மாறாக, அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அருமண் கனி வளங்களைப் பெறுவதில் சீனாவைச் சார்ந்திருப்பதற்கு மாற்று வழிகளைத் தேடுவதில் அரசியல் ரீதியிலான முன்முனைப்பு இல்லாதிருப்பதே ஒரே காரணமாகும்.

எரிவாயு எண்ணெய்க்காக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை மட்டுமே அதிகம் சார்ந்திருந்தது. அதனால் ஏற்பட்டது போன்றதொரு நெருக்கடி நிலையையே அருமண் கனி வளங்களை பெறுவதற்காக சீனாவைச் சார்ந்திருப்பதால் அமெரிக்காவும் எதிர்கொண்டு வருகிறது. ரஷ்யாவைத் தவிர பிற நாடுகளிலிருந்து எரிவாயு எண்ணெய்யை பெறுவதற்கான பணபலமும், புதிதாக கப்பல் முனையங்கள் கட்டியமைப்பதற்கான தொழில்நுட்ப பலமும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்தது. “வர்த்தகத்தின் மூலமாக சமதானத்தை பேணுவது” என்ற உத்தியை பின்பற்றியதால் சொல்லிக்கொள்ளுமளவிற்கு ரஷ்ய சார்பு நிலையை குறைபதற்கான மாற்று வழிகளை அவர்கள் தேடவில்லை. எனினும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் துவங்கியதும் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி ஒரு திட்டவட்டமான அரசியல் முன்முனைப்பு எடுக்கப்பட வேண்டும் என்பதை அவசியமாக்கியது. 2010-ல் ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்யப்படவேண்டிய அருமண் கனிமங்களை சீனா தடை செய்தபோது ஏற்பட்ட அதே நிலை தான் இன்றும் ஏற்படும். அருமண் கனி வளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான சீனாவின் எந்தவொரு முடிவுகளும் புதிய சுரங்கங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களை வளர்த்தெடுப்பதற்கான தீப்பொறியாக அமைந்துவிடும். அவ்வாறு அருமண் கனிம வளங்களை பெறுவதற்கான மாற்று வழிகளை வளர்தெடுப்பதென்பது நினைத்தமாத்திரத்தில் உடனடியாக செய்யக்கூடிய விசயமல்ல. நெருக்கடி இல்லாத சமயங்களில் உரிய அனுமதி பெற்று சுரங்கம் தோண்டி, சுத்திரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு அதிக காலம் எடுக்கும் என்றபோதிலும் சீனத் தடை போன்ற நெருக்கடியான காலங்களில் இந்தப் பணிகளை துரிதப்படுத்த முடியும்.

இந்த நாடுகளைப் போன்று சீனாவால் குறைகடத்தி தயாரிப்பிற்கான மாற்று வழிகளை அவ்வளவு சுலபமாக வளர்த்தெடுக்க முடியாது. பத்தாண்டுகளுக்கு மேலாக இதற்காகவே கடுமையாக முயன்று வருகிறது. ஏப்ரல் 2018(ZTE நிறுவன நெருக்கடி)க்குப் பிறகு இந்தப் பிரச்சினை நியாயமான, அவசர அவசியமான தேசப் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையாக பார்க்கப்பட்டு அளவிட முடியாத அளவிற்கு பணபலத்தையும், பிறவற்றையும் முதலீடு செய்துள்ளது. அவ்வாறு இருந்தபோதிலும், கொஞ்சம் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. மாறாக சீனாவின் துப்புக்கெட்டத்தனமும், ஊழலுமே மிஞ்சியது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பலன்களை பொருளாதரம் மற்றும் இராணுவத்தில் பயன்படுத்துதல்

ஜிங்பிங் உட்பட சீனாவில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சிறந்த விளங்குவதே நாட்டின் வருங்காலத்தின் பொருளாதார, இராணுவம் மற்றும் புவிசார் அரசியல் மேலாதிக்கத்திற்கான அடித்தளமாக விளங்கும் என்று நம்புகின்றனர். அவர்கள் சரியாகத்தான் கூறுகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக இராணுவம், உளவு, கண்காணிப்பு மற்றும் கருத்தியல் ரீதியில் செல்வாக்கு செலுத்துதல், சமீபத்தில் நடந்த உக்ரைன் போர் என அத்துனை களங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பிரம்மாண்டமாக பயன்படுத்தப்பட்டு ஒரு நாட்டின் தேசப் பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. இராணுவ அளவில் சீனாவைக் காட்டிலும் ஒரு படி மேலாக தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கு செயற்கை நுண்ணறிவு முக்கியத் தொழில்நுட்பமாக பயன்படும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையை சேர்ந்த பல தலைவர்கள் வெளிப்படையாக கூறி வந்திருக்கிறார்கள். சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு புதிதுபுதிதாக படைக்கும் திறன் பெற்று புரட்சியை ஏற்படுத்தி வருகிறது; இத்துறையில் தொடர்ச்சியாக நடந்து வரும் அசுர வளர்ச்சி இப்போதைக்கு நிற்கப்போவதில்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

வருங்காலங்களில் சீனா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இராணுவத்தில் பயன்படுத்துவது உட்பட அத்தொழில்நுட்பத்தில் முன்னேறுவதை தடுப்பதற்காகவே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த குறைகடத்தி தொழில்நுட்பங்கள் மீது அக்டோபர் 7 தடையின் மூலம் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்று CSIS தளத்தில் வெளியிடப்பட்ட முந்தைய அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் தேசப் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் தாக்கம் என்னவென்பது குறித்து அமெரிக்காவின் தேசப் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு நடத்தி ஓர் அறிகையை சமர்ப்பித்திருந்தது. 18 மாதங்களுக்கு முன்பாகவே அந்த ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத்தான் அக்டோபர் 7 தடையின் மூலம் அமெரிக்கா அமல்படுத்தி வருகிறது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

சுருக்கமாக, குறைகடத்திகள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிப்பதே அனைத்து பிரச்சினைக்குமான தீர்வு என்று பைடன் அரசாங்கம் நம்பியது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் சீனாவை முன்னேறவிடாமல் தடுப்பதன் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் நாடுகளின்  இராணுவ பிரச்சினை தீர்க்கப்படுகிறது.

ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளையும் தாண்டி அந்நிய நாடுகளை சார்ந்து நில்லாமல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதே சீனா முன்னிருக்கும் சவாலாகும். சீனாவும் பதிலடியாக கட்டுப்பாடுகள் விதிப்பது ஒரு வழிமுறையாக இருந்தாலும் சிறந்த தீர்வாக இருக்காது. சீனாவின் போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த திட்ட இலக்குகளை அடைவதற்கு பிரதானமாக என்னென்ன முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது என்பது பற்றி பிரிவு 4-ல் பார்க்கலாம்

பிரிவு 4:புதிய மற்றும் பழைய செயல்தந்திரங்களை சேர்த்து புதுப்பிக்கப்பட்ட போர்த்தந்திர கொள்கையின் மூலம் சீனா பதிலடி தருகிறது 

ஒட்டுமொத்தமாக பார்க்கையில் சீனாவின் பொதுவான இலக்கும், போர்த்தந்திரமும் பரந்தளவில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும் கூட, புதிய செயல் தந்திரங்களை சேர்ப்பதன் மூலமும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயல்தந்திரங்களை தீவிரப்படுத்துவதற்கும் சீனா திட்டமிட்டுள்ளது. பலதரப்பட்ட அளவிலான செயல்தந்திரங்களை சீனா முன்னெடுத்து வந்தாலும், ஐந்து பிரதானமான செயல் தந்திரக் கொள்கையை பற்றி மட்டும் இப்பகுதியில் விரிவாக ஆராய்வோம்.

1. புதிய தடைகளை முறியடித்து அந்நியத் தொழில்நுட்பங்களை தொடர்ந்து பெற முயல்வது.

2. அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் ஒற்றுமையை சீர்குலைப்பது

3. தொழிற்துறை சார்ந்த உளவு வேலைகளின் மூலமும், திறன் பெற்ற தொழிலாளர்களை விலைக்கு வாங்குவதன் மூலமும் அந்நிய நாடுகளின் தொழில்நுட்பத்தை கைப்பற்றுதல்

4. சீனக் கம்பெனிகள் சீனத் தயாரிப்புகளை மட்டுமே வாங்குவதற்கு நிர்பந்திப்பதன் மூலம் சீனாவிற்கு சரக்கு மற்றும் சேவைகளை விற்கும் அமெரிக்க கம்பெனிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்துதல்

5. அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுள் மீது தகுந்த பதிலடித் தரும் வகையில் கட்டுபாடுகள் விதித்தல்.

 புதிய தடைகளை முறியடித்து அந்நியத் தொழில்நுட்பங்களை தொடர்ந்து பெற முயல்வது

அக்டோபர் 7 தடையின் போது, பிரதானமாக அமெரிக்கா நான்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது; அதில் சிப் தயாரிக்கும் இயந்திரங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகள்தான் அமல்படுத்துவதற்கு மிகவும் எளிதானதாகும். அந்த இயந்திரங்கள் அளவில் பெரியதாக இருக்கும், விலையும் மிக அதிகமானதாக இருக்கும், விற்பனைக்கு பிந்தைய வாடிக்கையாளர் சேவையும் இந்த இயந்திரங்களுக்கு தேவைப்படும். இதனால் தான் இந்த இயந்திரத்தின் மீதான தடையை நடைமுறைப்படுத்துவது எளிதானதாக இருக்கிறது. இதற்கு மாறாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கென்றே தயாரிக்கப்படும் சிப்கள் அளவில் சிறியது, எடைகுறைவானது, மேலும் விற்பனைக்கு பின்பு எந்தவொரு வாடிக்கையாளர் சேவையும் அதற்கு வேண்டியதில்லை. இதன் காரணமாக இந்த சிப்கள் அதிகம் கள்ளத்தனமாக கடத்தப்படுவதற்கு எளிதானதாக விளங்குகிறது. சிப்களை கள்ளத்தனமாக கடத்தி சீனாவுக்குள் கொண்டு வருவதென்பது நெடுங்காலமாக நடந்து வருகிறது என்ற நிலையில் அக்டோபர் 7 தடைக்கு பிறகு எந்தவொரு கடத்தல் சம்பவம் இன்னும் உறுதிப்படப்படவில்லை. டிசம்பர் 2022ல், கர்ப்பினி பெண் போல நடித்து 202 சிப்களை கடத்த முயன்றதாக சீனக் சுங்க அதிகாரிகள் ஒரு பெண்ணை கைது செய்துள்ளனர். இறக்குமதி மீது விதிக்கப்பட் சுங்கத் தீர்வையை தவிர்ப்பதற்காகவே அவர் முயன்றுள்ளார் என்றும் அமெரிக்க விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தவிர்ப்பதற்காக அல்ல என்றும் பின்னர் தெரிய வந்தது.

சீனா “நிச்சயமாக” விதிக்கப்பட்ட ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்கு முயன்றுவருகிறது அல்லது கள்ளக் கடத்தல் மூலமாகக் கூட இறக்குமதி செய்ய முயலுகிறது என்று CSIS மையத்திடம் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். சிறிய அளவில் இவ்வாறு செய்வது எளிதானது தான்; ஆனால் பெரிய பெரிய சிக்கலான களங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கு தேவையான அளவில் கடத்திக் கொண்டு வருவதென்பது கடினமான காரியமாகும். உலகளவில் பார்க்கும் போது வெகு சில நிறுவனங்களே குறிப்பாக பிரமாண்டமான அளவில் மேகக் கணிமச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தரவு சேமிப்பு வசதிகளை வழங்கும் நிறுவனங்கள்தான் அதி நவீன AI சிப்களுக்கான வாடிக்கையாளராக இருக்கிறார்கள். இங்ஙனம், “உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்” என்ற KYC முறையின் மூலம் கார்ப்பரேட் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சரிபார்ப்பது மிக எளிதானதாக மாறிவிடுகிறது. போலி நிறுவனங்களை(shell companies) உருவாக்கி சிறிய அளவிலான இறக்குமதியை அதிகமாக செய்து மொத்தமாக ஒன்றுகுவிப்பதன் மூலம் கட்டுப்பாடுகளை ஏய்ப்பதற்கு வாய்ப்புள்ளது. எனினும், இது அதிகம் நேரம் பிடிப்பதோடு கடினமான காரியமுமாகும். ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கறாறாக அமல்படுத்துவதற்கு உளவுத்துறையின் உதவியையும் அமெரிக்க அரசாங்கம் நாடியுள்ளது. இதன் மூலம் கள்ளக் கடத்தல்காரர்களை பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகலாம்.

சிப்களை வாங்குவது போலி நிறுவனங்களா இல்லையா என்பது உட்பட பிற ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளுக்கு உட்பட்டு தான் வர்த்தகம் நடக்கிறதா என்று கார்ப்பரேட் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சரிபார்ப்பதில் ஈடுபட்டு வரும் அந்நிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை சமீப வாரங்களில் சீனா எடுத்து வருகிறது. சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடும் சீனா நிறுவனங்கள் குறித்தான தகவல்களைத் திரட்டுவதற்கு அமெரிக்காவும் அந்நாட்டு நிறுவனங்களும்  முயன்று வருகிறார்கள். இதன் மூலம் சீன நிறுவனங்களுடனான வர்த்தகத்தை தவிர்ப்பதற்கான வாய்ய்புகளை அதிகப்படுதிக்கொள்ள முடியும்; வழக்கம் போல சீனா கெடுபிடியை அதிகரிப்பதன் மூலம் எதிர்வினையாற்றி வருகிறது. அந்நிய நிறுவனங்களின் கண்காணிப்பிற்கு எதிரான கெடுபிடியை சீனா மேலும் அதிகரிப்பதற்கே வாய்ப்புள்ளது.

உடனடியாக இந்த தடையிலிருந்து தப்பிப்பதற்கு சீனாவிடம் ஓர் பிரம்மாஸ்திரம் உள்ளது. மேகக் கணிமைத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிற நாடுகளிலுள்ள AI  சிப்களை இயக்குவதன் மூலம் இந்த தடையை முறியடிக்க முனைந்துள்ளது. சீனாவில் உள்ள AI கம்பெனிகள் மட்டுமே தடையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது; பிற நாடுகளில் உதாரணத்திற்கு இந்தியாவில் துணை நிறுவனங்களை வைத்துள்ள ஒரு சீனக் கார்ப்பரேட் நிறுவனம் தமக்கு தேவையான AI சிப்களை இறக்குமதி செய்து கொண்டு மேகக் கணிமத் தொழில்நுட்பத்தின் மூலம் சீனாவில் இருந்துகொண்டு இயக்குவதற்கு வசதி ஏற்படுத்தித் தர முடியும். முந்தைய CSIS அறிக்கையில் கணித்தபடி இது உண்மையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சிப்களின் செலாக்கத் திறன் மற்றும் பரஸ்பர தகவல் பரிமாற்ற வேக அளவுகளில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; அதாவது இரண்டில் ஏதாவது ஒன்று மட்டுமே வேகமாக இருக்கும் அல்லது இரண்டுமே சுமாரான வேகம் கொண்டதாக இருக்கும் சிப்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா எந்த கட்டுப்பாடுகளும் விதிக்காததால் செயல்திறன் பாதிப்பு இருந்த போதிலும் சீன AI நிறுவனங்கள் இவற்றை இறக்குமதி செய்து கொள்ளும். செயற்கை நுண்ணறிவுக் கணினிகளுக்கு சிப்களை வழங்கி வரும் முன்னணி நிறுவனமாக Nvidia நிறுவனம் இருந்து வருகிறது; இந்நிறுவனம் உருவாக்கி வரும் சிறந்த AI சிப்களில் குறைந்த தகவல் பரிமாற்ற வேகங் கொண்ட சிப் வகையினங்களையும் தயாரித்துள்ளது; இது போன்ற சிப்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. இவ்வறு திறன் குறைந்த சிப்களை பயன்படுத்துவதற்கும், பிற நாடுகளில் விற்கப்படும் திறன்மிகுந்த சிப்களை பயன்படுத்துவதற்கும் இடையிலான செயல் திறன் வேறுபாடு 10 சதவீதத்திற்கும் குறைவு தான் என்று செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் சென்டர் ஃபார் கவர்னன்ஸ் ஆஃப் AI என்ற ஆய்வு மையத்தைச் சேர்ந்த லென்னர்ட் ஹெய்ம் மதிப்பிட்டு கூறியுள்ளார். வளமான கட்டமைப்புகளை கொண்டுள்ள சீன AI நிறுவனங்களுக்கும், தேசப் பாதுகாப்பு சார்ந்த அமைப்புகளுக்கும் நிச்சயமாக இந்த சிப்களே போதுமானது தான்.

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் ஒற்றுமையை சீர்குலைப்பது

உலகளவில் பார்க்கும் போது, அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து மற்றும் தென் கொரியா முதலான நான்கு நாடுகளே சிப்களைத் தயாரிக்கத் தேவையான பெரும்பகுதியான இயந்திரங்களை விற்பனை செய்து வருகின்றன. அக்டோபர் 7 தடை விதிக்கப்பட்டதுடனேயே எதிர்பார்த்தது போல இயந்திரங்களை வாங்குவதற்கு சீன நிறுவனங்கள், அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளின் பின்னால் சுற்ற ஆரம்பித்துவிட்டன. அமெரிக்கா தடை விதித்ததை போன்று மற்ற நாடுகள் செய்ய கூடாது என்று சீன அரசாங்கம் நாசூக்காக எச்சரிக்கையும் விடுக்கத் தொடங்கியது. நெதர்லாந்து மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இப்போதும் கூட சீனா கொடுத்த வந்த அழுத்தம் குறைந்தபாடில்லை. அமெரிக்கா விதித்ததை போன்றதொரு ஏற்றுமதி தடையாணைக்காக தயாரிக்கப்பட்ட சட்ட முன்வரைவை ஜப்பான் அரசாங்கம் மக்கள் கருத்து கேட்பிற்கு முன்வைந்திருந்த நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் சின் கங் அவர்கள் ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் யோசிமாச ஹயாசியிடம் கூறியதாவது,

“அமெரிக்கா முன்னர் ஒரு முறை ஜப்பானின் குறைகடத்தி தொழிற்துறை வளர்ச்சியை வேண்டுமென்றே கட்டுப்படுத்துவதற்காக அச்சுறுத்தும் நடவடிக்கைளில் ஈடுபட்டது. இன்றும் அதே சூழ்ச்சியைத் தான் சீனாவிற்கும் செய்கிறது. உங்களைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி நீங்கள் பிறரையும் நடத்த வேண்டும் என்று பழமொழி சொல்கிறது. அமெரிக்கா கடந்த காலங்களில் இழைத்த அநீதிகளையும், ஆறாத வடுக்களையும் எண்ணிப் பாருங்கள், அமெரிக்கா போன்ற அக்கிரமக்காரர்களுக்கு ஜப்பான் ஒருபோதும் உதவக்கூடாது. சீனாவை முடக்குவதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிகளும் சுயசார்பிற்கான, சுய வளர்ச்சிக்கான பாதையில் மேலதிக உறுதியோடு செல்வதற்கான தூண்டுதலாகவே அமையும்.”

இதே போல, மார்ச் 20 அன்று  நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்றிற்கு அந்நாட்டிற்கான சீனத் தூதர் பேட்டியளித்த போது, “அமெரிக்கா போல நெதர்லாந்து ஏற்றமதி கட்டுப்பாடுகள் விதித்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். என்ன மாதிரியான பதிலடிகள் தரப்படும் என்று இப்போதே நான் சொல்லப்போவதில்லை, எனினும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை ஒருபோதும் எங்களால் கைகட்டி வாய்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பது மட்டும் உறுதி” என்று கூறியிருந்தார்.

 அமெரிக்காவின் பின்னின்று ஜப்பானும், நெதர்லாந்தும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு திட்டம் தீட்டியுள்ள நிலையில் சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் இவர்களுக்கானதாக மட்டும் இருக்கவில்லை. மாறாக, இன்னும் இவர்கள் அணியில் சேராது வெளியிலிருக்கும் ஜெர்மனி, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் பல்முனை ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க முனைந்தால் சீனா என்னென்ன வகையில் எதிர்வினையாற்றும் என்பதை அவர்களுக்கு காட்டும் வகையில் தான் சீனாவின் அச்சுறுத்தல்கள் இருந்து வருகிறது.

அமெரிக்காவின் பின்னின்று ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தகுதியான, மிக முக்கியமான நாடாக தென் கொரியா விளங்குகிறது. சிறிய நாடாக இருந்தாலும், உலகளவில் 5 சதவீத அளவிற்கான குறைகடத்தி சந்தையை கையில் வைத்துள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை தயாரித்து வரும் நாடாக திகழ்கிறது. மற்ற மூன்று நாடுகளோடு ஒப்பிடுகையில் பொதுவாக தென் கொரியாவின் சிப்கள் மிகவும் முன்னேறியது என்று சொல்ல முடியாது என்றாலும் கூட சீனாவின் சிப்களை விட தென் கொரிய நாட்டின் சிப்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகவும் முன்னேறிய சிப்கள் தான்.

சீன குறைகடத்தி தொழில்துறையுடன் தென் கொரிய நிறுவனங்கள் விற்பனையாளர் என்ற அளவில் மட்டுமல்லாது வாங்குபவராகவும் இருந்து வருவதால் மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்கின்றன. சிப் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் உலகின் முன்னணி நிறுவனங்களான சாம்சங், SK Hynix என்ற இரண்டு தென் கொரிய நாட்டு நிறுவனங்களும் அதி நவீன சிப்களை தயாரிப்பதற்காக பில்லியன் டாலர்கள் கணக்கில் சீனாவில் முதலீடு செய்து தொழிற்சாலைகளை கட்டியமைத்துள்ளனர். அதி நவீன சிப்கள் என்பதால் அமெரிக்கா விதித்த ஏற்றுமதி தடை வகையினங்களுக்கு கீழ் தான் இவையும் வரும். அவ்வளவு எளிதாக இந்த நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறிவிட முடியாது; சீனாவில் உள்ள ஏற்றுமதி கட்டுப்பாடுகள் சட்டத்தை மீறி பில்லியன் டாலர்கள் மதிப்பில் தயாரிக்கப்படும் இயந்திரங்களை சீனாவிற்கு வெளியே கொண்டு செல்ல முடியாது என்பதே இங்கே நகை முரணாக இருக்கிறது.

எவ்வளவு சவால்கள் இருந்தபோதிலும், அமெரிக்கா அக்டோப்ர் 7 அன்று விதித்த தடையின் மூலம் தென் கொரிய நாட்டின் குறைகடத்தி தொழிற்துறைக்கு சாதகமான சில வாய்ப்புகளும், நலன்களும் உருவாகவே செய்துள்ளன. NAND அதிவிரைவு மெமரி சிப்களைத் தயாரிக்கும் YMTC நிறுவனம் மற்றும் DRAM எனப்படும் இயங்கநிலையிலான RAM சிப்களைத் தயாரிக்கும் CXMT முதலான சீன நிறுவனத்திற்கும் இத்தடை பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். தென்கொரிய நிறுவனங்களுக்கு முக்கிய போட்டியாளராக இந்நிறுவனங்களே இருந்த வருகிறது. அக்டோபர் 7 தடைக்கு பிறகு சாம்சங் மற்றும் SK Hynix நிறுவனங்களின் பங்குகள் கனிசமாக உயர்ந்தது.

தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு குறைகடத்தி நிறுவனங்களும் சீனாவில் தங்களது தொழிற்சாலை உருவாக்கி உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கொரியாவிலே கட்டியமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டில் சீனாவை விஞ்சும் அளவிற்கு குறைகடத்திகளை தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்களையும், உபகரணங்களையும் தென் கொரியா வாங்கி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை இதன் மூலம் சரிசெய்யப்படும் என்பதால் மறைமுகமாக, இது தென் கொரியா அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகவே அமையும்; தென் கொரியா அரசாங்கம் ஏற்றுமதி செய்யும் மொத்த சரக்குகளில் குறைகடத்திகள் மட்டுமே கிட்டத்தட்ட 20 சதவீதமளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தொழில் நிலையங்களை சீனாவிலிருந்து தென்கொரியாவிற்கு இடமாற்றுவதென்பது தென் கொரிய அரசிற்கு மட்டுமல்ல சாம்சங் மற்றும் SK Hynix என்ற இரண்டு நிறுவனங்களுக்குமே ஆகச் சிறந்த நன்மையை தரக் கூடிய விசயமாகும். சீனாவில் இயங்கக்கூடிய சாம்சங் மற்றும் SK Hynix தொழில்நிலையத்தில் பணியாற்றக்கூடிய திறன்மிக்க தொழிலாளர்களை YMTC மற்றும் CXMT போன்ற சீன நிறுவனங்கள் விலைக்கு வாங்கிக்கொண்டுக் தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சியை கண்டுள்ளன என்று குறைகடத்தி துறையில் பணியாற்றக்கூடிய வல்லுநர்கள் CSIS தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தனர். அதிநவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கொண்டு சிப்களை தயாரிப்பது எப்படி என்று சீனாவில் இயங்கும் சாம்சங் மற்றும் SK Hynix ஆலையைச் சேர்ந்த பணியாளர்கள்தான் போட்டி நிறுவனமாக இருக்கக்கூடிய சீன நிறுவனங்களுக்கு சென்று கற்றுக்கொடுக்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் துளியும் கூட தென் கொரிய நிறுவனங்கள் சீனாவில் இயங்குவதை விரும்பவே விரும்பாது.

சீனாவும் சரி அமெரிக்காவும் சரி இரண்டு நாடுகளுமே ஏற்றுமதி கட்டுப்பாடு தொடர்பான விசயத்தில் தென் கொரியாவை தங்கள் பக்கம் இழுப்பதற்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். எவ்வாறிருப்பினும், அமெரிக்காவின் பக்கம் செல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது. மேற்சொன்ன பலன்கள் நீங்கலாக, சமீப காலங்களில் அமெரிக்காவுடனும், ஜப்பானுடனும், தென்கொரியாக நெருக்கமான தொடர்புகளை பேணி வருவதும் கூட அமெரிக்காவின் பக்கம் செல்வதற்கு ஒரு காரணமாக அமையலாம்.

தொழிற்துறை சார்ந்த உளவு வேலைகளின் மூலமும், திறன் பெற்ற தொழிலாளர்களை விலைக்கு வாங்குவதன் மூலமும் அந்நிய நாடுகளின் தொழில்நுட்பத்தை கைப்பற்றுதல்

குறைகடத்திகளை கொண்டு சிப்களை தயாரிக்கும் தொழில்நுட்பம் தோன்றிய காலத்திலிருந்தே தொழில் இரகசியங்களை வேவு பார்ப்பது, திருடுவது போன்ற நடைமுறைகள் இருந்து வருகிறது. “சட்ட விரோதமாக தொழில் இரகசியங்களை திருடுவதற்கு என்னென்ன வழிகளெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்ற நாங்கள் கருதிவந்தோமோ அதையெல்லாவற்றையும் விஞ்சும் அளவிற்கு” குறைகடத்திகளை கொண்டு சிப்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை திருடுவதற்கு சோவியத் ரஷ்யா கடுமையாக முயன்று வருகிறது என்று 1977 ல் வெளியிடப்படாத சிஐஏ அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. “செய்நுட்ப அறிவு, தயாரிப்பதற்கான பயிற்சியோடு அதற்கான இயந்திரங்களும் சோவியத் ரஷ்யாவின் கைக்கு கிடைத்ததென்றால் ஜப்பான், அமெரிக்காவிற்கு அடுத்து தொகுப்பு சுற்றுகள் எனப்படும் ICகளை உற்பத்தி செய்யும் முன்னணி நாடாக உருவாகிடும்” என்று அதே அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதன் காரணமாகவே தொழில் இரகசியங்களை திருடுவதற்கான சோவியத் ரஷ்யாவின் முயற்சிகளை முறியடிப்பதென்பது அமெரிக்காவிற்கு மிக முக்கியமான பிரச்சினையாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக இயந்திரங்களும் சரி, செய்நுட்ப அறிவும்(Know-how) சரி சோவியத் ரஷ்யாவிற்கு கிடைக்கவில்லை.

இத்துறையில் தேவைப்படும் செய்நுட்ப அறிவை படித்து தெரிந்து கொள்வதற்கு புத்தகங்கள் ஏதும் எழுதப்படவில்லை என்பதோடு விளக்குவதற்கு எளிதானதும் அல்ல; மாறாக திறன் பெற்ற ஆலைகள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து நடைமுறை பயிற்சியில் அனுபவங்களை பெறுவதன் மூலம் மட்டுமே கற்க முடியும் என்பதால் தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதற்கு பிற நிறுவனங்களின் தொழில் ரகசியங்களை வேவு பார்த்து திருடுவது சிறந்த வழியாக இருக்கும் என்று சொல்லப்படும் கருத்தை சிப் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றக்கூடிய சில வல்லுநர்கள் மறுக்கின்றனர்.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ASML என்பது சிப்கள் மீது காணப்படும் அச்சுருக்களை அச்சிடும் ஒரு லித்தோகிராஃபி நிறுவனமாகும். இந்நிறுவனத்தைச் சேர்ந்த தலைமை நிதி அதிகாரி ரோஜர் தாசன் சமீபத்தில், “ASML நிறுவனத்தின் தொழில்நுட்ப செய்முறைக்கென்று எந்த ஃபுளுபிரிண்ட்களும் இல்லை. பணியாளர்களின் அனுபவ அறிவைக் கொண்டே தயாரிக்க முடியும். மேலும் சிப்கள் தயாரிப்பதற்கு ஃபுளுபிரிண்ட்கள் மட்டுமே போதாது; அது சம்பந்தப்பட்ட அத்துனை அக-புற காரணிகளும் தேவைப்படும்; தயாரிப்பதற்கு தேவையான ஒட்டுமொத்த உள்ளீடு சங்கிலித் தொடரும் தேவைப்டும்… இதுபோன்ற ஒன்றை நீங்கள் காப்பியடிக்க நினைத்தால் பத்தாண்டுகளோ அல்லது அதற்கு மேலோ கூட ஆகலாம்” என்று கூறியிருந்தார்.

தாசன் சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை; ஆனால் ASML நிறுவனத்தின் ஃபுளுபிரிண்ட்கள் மட்டுமல்லாது பிறவற்றையும் களவாடுவதற்கு சீனா முயன்று வருகிறது என்பது மட்டும் உறுதி. ஆண்டுதோறும் ASML நிறுவனத்தின் தகவல் கட்டமைப்பு மற்றும் அறிவுசார் சொத்துக்கள் மீது ஆயிரக்கணக்கிலான இணைய தாக்குதல்கள் நடந்துவருகிறது; இதன் காரணமாக வேறுவழியின்றி இணைய பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பிற்கான செலவினங்களை இனிவரும் ஆண்டுகளுக்கும் பயன்படும் வகையில் “கணிசமாக இரண்டு இலக்க” சதவீதமளவிற்கு அதிகரித்துள்ளோம் என்று ASML நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்ச் மாதம் கூறியிருந்தார். சீனப் போட்டி நிறுவனங்களுக்கு விற்பதற்காக ASML நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் பணியாளர் ஒருவர் கணினியைக் கொண்டு இயந்திரங்களை இயக்குவதற்கு தேவைப்படும் மூலக் குறியீடுகளை(Source code) திருடிச் சென்றதாக 2018ல் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. “சீன அரசாங்கதிற்கு தொழில்நுட்பங்களை திருடித் தருவதே அவர்களின் திட்டம்” என்று இந்த வழக்கை நடத்தி வரும் ASML நிறுவனத்தின் முக்கிய வழக்கறிஞர் ஒருவர் கூறியிருந்தார். 

நெதர்லாந்து நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட ஆண்டு அறிக்கையில்(2023) வழக்கறிஞர் கூறியதை ஒப்புக்கொண்டதோடு, “நெதர்லாந்து நாட்டின் பொருளாதார நலனிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக” சீனா விளங்குகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. “நெதர்லாந்திலிருந்து தொழில்நுட்பங்களை திருடுவதற்கு அவர்கள் அனுதினமும் முயன்று வருகிறார்கள்” என்று புலனாய்வு அமைப்பின் தலைமை அதிகாரி 2023-ல் அசோசியேடட் பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இணையத்தைப் பயன்படுத்தி திருடுவது அல்லது பணியாளர்களை விலைக்கு வாங்குவதன் மூலம் திருடுவது போன்று ஏதோவொரு வழியில் தொழில்நுட்ப திருட்டில் தெனாவெட்டாக அனுதினமும் சீனா ஈடுபட்டு வருவது ASML என்று ஒரு சிப் தயாரிக்கும் நிறுவனத்திடம் மட்டுமல்ல. மாறாக, புஜியன் ஜின்குவா என்று சீன நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரான் என்ற சிப் தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து பெருமளவில் தொழில்நுட்ப அறிவை திருடியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப திருட்டின் மூலம் சிப் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்த முடியாது என்று கூறிவந்ததற்கு மாறாக, புஜியன் ஜின்குவா என்ற நிறுவனம் மைக்ரான் நிறுவனத்தின் “1x-nm” தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடகடவென்று DRAM உற்பத்தி பிரிவை துவங்கிவிட்டது.

உண்மையில் சொல்லப்போனால் தைவானில் உள்ள சிப் தயாரிப்பு தொழில் நிலையங்களே அதிக சிக்கல்களை எதிர்நொக்கியுள்ளது. தைவனில் உள்ள பொறியாளர்களுக்கு 500 சதவீதம்(5 மடங்கு) அதிகமாக ஊதியம் தருவதற்கு சீன நிறுவனங்கள் தயாராக உள்ளன என்று தைவானைச் சேர்ந்த அதிகாரிகள் CSIS மையத்திடம் கூறினர். “சீனாவில் சென்று பணியாற்றுவதென்பது நிரந்தரமான பணியாக இருக்காது. உங்கள் உழைப்பையும், திறமையையும் ஒட்டச் சுரண்டிவிட்டு உங்களை பணியிலிருந்து தூக்கியெறிந்து விடுவார்கள். அதன் பிறகு சீனாவில் பணியாற்றியதை காரணம் காட்டி எந்தவொரு தைவான் நிறுவனமும் உங்களுக்கு வேலை கொடுக்காது” என்று மற்றொரு அதிகாரி எச்சரிக்கை செய்து பேசியிருந்தார். தைவானில் பெயருக்கு போலி நிறுவனங்களை(shell companies) உருவாக்கி அதில் அந்நாட்டு தொழிலாளர்களை பணியமர்த்திக் கொள்கிறார்கள்; பின்னர் தைவானிலிருந்த படியே தங்களது அறிவையும் திறமையை மட்டும் சீனாவிற்கு கடத்துகிறார்கள். இதுபோன்ற உத்தியை கையாள்வதன் மூலம் தைவான் நாட்டில் உள்ள திறமையான தொழிலாளர்களை அதிக ஊதியத்திற்கு பணியமர்த்துவதனால் சந்திக்க நேரிடம் அவப்பெயரிலிருந்தும் தப்பித்துக் கொள்ள முடிகிறது.

தொழில் ரகசியத் திருட்டு, திறமை திருட்டு போன்ற சீனாவின் தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக புதிய சட்டம் ஒன்றை தைவான் அரசாங்கம் இயற்றியுள்ளது. பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய குற்றங்களையும், கள்ளத்தனத்தையும் துரித கதியில் விசாரித்து தீர்வு காண்பதற்காக இதற்கென்றே பிரத்யேகமாக ஒரு நீதிமன்றம் உருவாக்குவதற்கு இந்த சட்டத்தில் இடமிருக்கிறது.

தொழில் ரகசியங்களை திருடுவது, திறமையான பணியாளர்களை விலைக்கு வாங்குவதையும் தாண்டி பிற வழிகளிலும் அந்நிய நாட்டு தொழில்நுட்பங்களை கைபற்றுவதற்கு சீனா முயன்று வருகிறது. இதற்காகத் தனிதிட்டமிடலும், தனி கட்டமைப்புகளும் உருவாக்குவதன் மூலம் எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு அந்நிய தொழில்நுட்பங்களை கைபற்றுவதற்கு சீனா முயன்று வருகிறது. அந்நிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களையும், சீனாவில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களையும் கொண்டே சீன நிறுவனங்கள் சிப்களை தயார் செய்கின்றன. ஒரே தொழிலாளர்கள்தான் இரண்டு இயந்திரங்களையும் இயக்குகிறார்கள். இவ்வாறு இரண்டு இயந்திரங்களையும் இயக்கும் ஒரே தொழிலாளர்கள் சீனத் தொழில்நுட்பங்களை எப்படி மேம்படுத்துவது என்பதை அனுபவத்தின் மூலமாக அறிந்து ஆலேசனைகள் வழங்குவார்கள் என்று இத்துறையில் தொழில் அனுபவம் வாய்ந்த பலர் அளித்துள்ள பேட்டிகளில் கூறியுள்ளனர்.

சீனக் கம்பெனிகள் சீனத் தயாரிப்புகளை மட்டுமே வாங்குவதற்கு நிர்பந்திப்பதன் மூலம் சீனாவிற்கு சரக்கு மற்றும் சேவைகளை விற்கும் அமெரிக்க கம்பெனிகளை முடக்குதல்

தங்களது தொழில்நுட்ப தரத்தை மேம்படுத்த முனையும் சீன நிறுவனங்களுக்கு இரண்டு மிகப் பெரிய சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. அதாவது பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதோடு அரசின் மூலமாகவும் அதிக நிதியுதவியும் வழங்கப்படுகின்றன. முதல் அம்சத்தைப் பொறுத்தவரை, சிறந்த சிப்களை சிறந்த முறையில் எப்படி தயாரிப்பது ( அல்லது குறைந்தபட்சம் சிறந்த முறையில் எப்படி தயாரிப்பது) என்ற வழிமுறைகளை அந்நிய நாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டதால் எளிதாக அவர்களை காப்பி செய்தால் மட்டும் போதும். எனவே சிறந்த வழிமுறை எதுவோ அதை பின்பற்றி தலைசிறந்த சிப்களை தயாரிப்பதற்கான ஆராய்ச்சி மேம்பாட்டு பணியில் கவனம் செலுத்த முடியும். செயல் திறன் மற்றும் நம்பகத்தன்மையில் அந்நிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இணையானதாக சீன தயாரிப்புகள் இல்லையென்றாலும் கூட அரசின் நிதியுதிவியின் மூலம் குறைந்து விலைக்கு அவர்களால் விற்பனை செய்ய முடியும் என்பதே இரண்டாவது சாதகமான அம்சமாகும். 

அந்நிய நிறுவனங்களின் இயந்திரங்கள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்ததோடு மட்டுமல்லாது அதன் செயல்திறனும் அசாத்தியமானதாக இருந்து வருகிறது. இவை இரண்டுமே சீன நிறுவனங்களிடம் இல்லை என்பதுதான் மிகப்பெரிய பாதகமான அம்சமாகும். இந்தக் குறைபாடு காரணமாக சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சிப் தயாரிக்கும் இயந்திரத்தை அந்நாட்டைச் சேர்ந்த சிப் வடிவமைப்பு செய்யும் நிறுவனங்களே (fab) கூட வாங்க முன்வரமாட்டார்கள்.

அதிநவீன சிப்கள் மட்டுமல்லாது பழமைவாய்ந்த லெகசி சிப் தயாரிப்புகள் என இரண்டிலும் சீனா முன்னேறுவதை முடக்குவதற்காகவே அக்டோபர் 7 தடை விதிக்கப்பட்டது. அதிநவீன சிப் தயாரிப்புகளில் மிக மிக நுண்ணிய அளவிலான சிறப்புக்கூறுகளுடன் (nodes) வடிவமைப்பதற்கு அதி நவீன இயந்திரங்கள் தேவைப்படும். அதி நவீன இயந்திரங்களும் கருவிகளும் முழுமையாக சீனாவிடம் இல்லாதவரை அவர்களால் குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வந்து தடம் பதிப்பதென்பது இயலாத காரியமாகும். பழமைவாய்ந்த சிப் தயாரிக்கும் இயந்திரங்களை சீனாவிடம் விற்பதற்கு எந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இவ்வாறு விற்கப்படும் இயந்திரங்களும் கூட அதி நவீன சிறப்புக்கூறுகளை (nodes) கொண்டு சிப்கள் தயாரிக்க முயலும் சீன நிறுவனங்களுக்கு பயன்படாதவாறு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் அடங்கியுள்ளது. சீன நிறுவனங்களை விட தரத்திலும், செயல்திறனிலும் அந்நிய நிறுவனத் தயாரிப்புகள் மேம்பட்டதாக இருக்கிறது. இவ்வகையில், பழமை வாய்ந்த சிப் தயாரிப்புகளிலும் கூட குறைந்த விலையில் அதிக எண்ணிக்கையிலான சிப்களை தயாரிப்பதென்பது சீனாவிற்கு கடினமான விசயமாக விளங்கும்.

சுருக்கமாக சொல்வதானால், பல்வேறு நாடுகளில விற்கப்பட்டு, பல முறை பயன்படுத்தப்பட்டு பெறப்படும் அனுபவங்களில்லாமல் சீன நிறுவனங்களால் தரம் வாய்ந்த இயந்திரங்களை உருவாக்குவதென்பது இயலாத காரியமாகும். இது மட்டுமல்லாது சீன இயந்திரங்களை வாங்குவதற்கான ஈர்ப்பும் குறைவாகவே இருப்பதால் விற்பனை மற்று பயன்பாட்டின் மூலம் பெறப்படும் அனுபவங்களிலிருந்து கூட சொல்லிக்கொள்ளும் வகையில் சீனாவால் எதையும் சாதிக்க முடியாது.

இந்த வீழ்ச்சி வலையிலிருந்து மீள்வதற்காக சீன நிறுவனங்கள் தயாரித்த இயந்திரங்களை சிப் வடிவமைப்பு செய்யும் (fabs) பிற சீன நிறுவனங்களையே வாங்குவதற்கு கட்டாயப்படுத்துலாம் என சீனத் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஜிங்பிங் ஆற்றிய உரையிலிருந்து:

“நாம் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான தேவையை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துவதே இந்த உத்தியின் அடிப்படை அம்சமாகும். தயாரிப்பது முதல் விற்பனை செய்வது, பயன்படுத்தச் செய்வது வரை என நாம் உற்பத்தி செய்யும் பொருட்களின் ஒவ்வொரு கட்ட நகர்வுமே நம் நாட்டை சார்ந்தியங்கும் வகையில் அமைவதை உறுதிபடுத்த வேண்டும்; அதன் மூலமே ஒரு நேர்மறையான நமக்குச் சாதகமான கருத்தறியும் வசதியை நம்மால் உருவாக்க முடியும். விநியோகச் சங்கிலித் தொடரின் முழுக்கட்டமைப்பையும் சீரமைப்பதற்கு குறிப்பான திட்டவகைப்பட்ட வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும். தரத்திலும் சரி அளவிலும் சரி உச்சபட்ச நிலையை உற்பத்தியில் மட்டுமல்லாது, சந்தைத் தேவையை பூர்த்தி செய்வதிலும் எட்டுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்.”

சீன அரசாங்கம் தனது இலக்குகளை எட்டிவிடுமா என்றால் கடந்த கால நிகழ்வுகள் எட்டமுடியாது என்பதையே காட்டுகிறது. இந்த ஆண்டிற்குள்ளாக மீமிகை புறஊதாக் கதிர்களைக் கொண்டு சிப்கள் மீது காணப்படும் அச்சுருக்களை அச்சிடும் லித்தோகிராஃபி இயந்திரங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி அதிநவீன சிப்களை தயாரிப்பதற்கான வழிமுறையில் இந்தாண்டிற்குள்ளாக (2023) நிபுனத்துவம் பெற வேண்டும் என்று மேட் இன் சீனா, 2025 கொள்கையின் திட்ட வரைபடத்தில் கூறப்பட்டிருந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பு ASML என்ற நெதர்லாந்து நாட்டு கம்பெனி எந்த மாதிரியான இயந்திரங்களை உற்பத்தி செய்து வந்ததோ அந்த இயந்திரங்களை தான் சீனாவில் முன்னணி லித்தோகிராஃபி நிறுவனமாக அறியப்படும் ஷாங்காய் மைக்ரோ எலக்ரானிக்ஸ் எக்யுப்மன்ட் (SMEE) குழுமம் உருவாக்கி வருகிறது. இவ்வாறு அவர்கள் உருவாக்கி வரும் இயந்திரங்கள் கூட விற்பனைக்கு தயாரானதாக இல்லாமல், ஆய்வக மாதிரி இயந்திரமாகவே (prototype) இருந்து வருகிறது. ஆனால் ASML நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எண்ணிக்கையிலான உற்பத்தியிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Huawei போன்ற சில பெரிய, அதிகார பலமிக்க சீன நிறுவனங்களும் மற்ற நாடுகளைச் சார்ந்து இல்லாமல், சீனாவிலேயே “தங்களுக்குத் தேவையான அனைத்தையும்” தயாரிக்க விரும்புகின்றன. "Huawei ஐப் பொறுத்தவரை, சீன சிப் தொழில்துறை தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், தன்னை வலுப்படுத்தவும், தன்னைச் சார்ந்து இருக்கவும் முயலும் அனைத்து விஷயங்களுக்கும் நாங்கள் துணை நிற்போம்" என்று இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் Huawei நிறுவன அதிபர் கூறியிருந்தார். 14 நேனோ மீட்டர் அல்லது அதை விட பெரியளவிலான சிறப்புக் கூறுகளை (nodes) கொண்ட சிப்களை தயாரிப்பதற்கான மென்பொருளை புதிதாக வடிவமைப்பதற்காக மற்ற சீன நிறுவனங்களுடன் கைக்கோர்துள்ளோம் என்று Huawei நிறுவனம் சமீபத்தில் கூறியிருந்தது. இந்த ஆண்டிற்குள் மென்பொருளை வடிவமைக்கவிருப்பதாக Huawei நிறுவனம் கூறயுள்ளது, ஒரு வேளை அவர்கள் அதில் வெற்றியடைந்தால் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க நிறுவனங்களுடன் சீனத் தயாரிப்புகளும் போட்டியிடும் நிலை உருவாகும்.

இத்துறையில் தொழில் அனுபவம் வாய்ந்த நிபுனர்களுடன் CSIS மையம் நடத்திய கலந்தாய்வில் தெரியவந்துள்ளது யாதெனில், 90 நேனோ மீட்டர் அல்லது அதைவிட பெரியளவிலான நோடுகளை கொண்ட சிப் தயாரிக்கும் இயந்திரங்களை பெருமளவில் சீன நிறுவனங்களே தயாரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எப்படி இருந்தபேதிலும், மூன்று ஆண்டிற்குள்ளாக 28 நேனோ மீட்டர் அளவிலான நோடுகளை கொண்ட சிப்கள் தயாரிக்கும் இயந்திரங்களை குறைந்தபட்சம் 5 சதவீதமளவிற்கு கூட சீன நிறுவனங்களால் உற்பத்தி செய்ய முடியுமா என்பதே சந்தேகம் தான் என்று நிபுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

“சீனத் தயாரிப்புகளையே வாங்குக” என்ற பெயரில் சிப் தயாரிக்கும் இயந்திரங்களை மட்டுமல்லாது சிப்களை வாங்கினாலும் கூட சீனத் தயாரிப்பாகவே இருக்க வேண்டும் என்றளவிற்கு சீன அரசாங்கத்தின் அழுத்தம் விரிவடைந்துள்ளது. கட்டுமான துறைக்கு தேவைப்படும் இயந்திரங்களை தயாரித்து வரும் Xuzhou கன்ஸ்ட்ரக்ஷன் மிஷினரி குரூப் என்ற நிறுவனத்தை பார்வையிட சென்றபோது ஜி ஜின்பிங் அவர்கள், “உங்கள் கிரேனில் பயன்படுத்தப்படும் சிப்கள் எல்லாம் நம்மூரில் தயாரிக்கப்பட்ட சிப்கள் தானா?” என்று கேட்டுள்ளார். கார் தயாரிக்கும் சீன நிறுவனங்களையும் கூட சீனாவில் தயாரிக்கப்பட்ட சிப்களையே அதிகம் பயன்படுத்துமாறு சீன அரசாங்கம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறது. பொதுவாகவே வாகனங்களுக்கு பழைமைவாய்ந்த லெகசி நோடு சிப்களே பயன்படுத்தப்பகிறது என்றாலும் கூட வெறுமனே 5 சதவீதமளவிற்குத்தான் சீனாவில் தயாரிக்கப்பட்ட சிப்களை சீன கார் தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

சீனாவிற்கு தேவையான விநியோக சங்கிலித் தொடரமைப்பை நினைத்த மாத்திரத்தில் உடனடியாக உருவாக்கிவிட முடியாது என்பதும் சீனத் தலைவர்களுக்குத் தெரிந்த விசயம் தான். இருந்தபோதிலும், உள்நாட்டில் சந்தைத் தேவையை அதிகப்படுத்துவதற்கான அழுத்தம் தரப்படும் அதே வேளையில், பழைமைவாய்ந்த சிப் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் சிப்களின் விநியோகத்தை அதிகப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். சொல்லப்போனால் இது அவர்களின் புதிய செயல் தந்திரமாகவே தெரிகிறது.

அமெரிக்க அரசாங்கம் செய்து வரும் விசயங்களோடு ஒப்பிடுகையில் சீன அரசாங்கம் செய்து வரும் விசயங்களெல்லாம் சிறியவை தான் என்று அமெரிக்க குறைகடத்தி தொழிற்துறையில் பணியாற்றக்கூடிய வல்லுநர் ஒருவர் CSIS அமைப்பிடம் கூறினார். “அமெரிக்க சிப்களை பயன்படுத்தாதீர் என்று சீன நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவு போடுவது வீண்வேலை” என்று அவர் கூறினார். “ஏற்றுமதி கட்டுப்பாடுகள் போன்றவற்றின் மூலம் அமெரிக்க பொருட்களை வாங்கவிடாமல் செய்வதற்கு அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகளால் சீன நிறுவனங்கள் ஏற்கனவே கதிகலங்கி போயுள்ளனர். எனவே, சீன அரசாங்கம் தனியாக அமெரிக்க பொருட்களை வாங்காதீர் என்று அழுத்தம் தர வேண்டியதேயில்லை; ஏனெனில் வாங்க முடியாது என்பது தான் இருக்கிற ஒரே வழி” என்று அவர் கூறினார்.

தொகுத்து சொல்வதென்றால், சீனாவில் உள்ள பீகிங் பல்கலைகழகத்தில் பணியாற்றக்கூடிய பேராசிரியர் லு பெங் அவர்கள் முன்மொழிந்த திட்டத்தையே சீனா செயல்படுத்தி வருகிறது என்பதே மேற்கண்ட கூற்றுகள் மூலம் நாம் அறிய வரும் செய்தியாகும். “அனைத்து நிலையிலும் தற்சார்பு உற்பத்தி” என்ற உத்தியையே சீனா கடைபிடிக்க வேண்டும் என்றும் இதை இரண்டு கட்டங்களாக சாதிக்கலாம் என்றும் 2023-ல் அளித்த நேர்காணலில் கூறியிருப்பார்.  முதற்கட்டமாக, சீனாவின் “உற்பத்தி பிரிவிகள் எதுவுமே அமெரிக்க பொருள்களை சார்ந்து இருக்கக்கூடாது”; முதலில் தேவையான அனைத்து பொருள்களையும் முடிந்தவரை உள்நாட்டிலே வாங்க முயல வேண்டும்; பிறகு அமெரிக்காவின் நட்பு நாடுகளிடம் வாங்க வேண்டும்; வேறுவழியே இல்லை என்றபோது மட்டுமே அமெரிக்காவடம் வாங்க வேண்டும். இரண்டாவது கட்டமாக, “அந்நிய நாட்டு இயந்திரங்கள், கருவிகள் வாங்கவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு அவற்றை உள்நாட்டிலே தயாரிப்பதற்கு முயலுதல் வேண்டும்”. பெரும்பாலான சீனாவின் முந்தைய கொள்கைகள் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தது. இதற்கு மாறாக, உற்பத்தியில் ஈடுபடக்கூடிய ஒவ்வொரு சீனக் கம்பெனியும் உற்பத்தியின் ஒவ்வொரு பகுதியையும் பரஸ்பரம் ஒன்றிணைப்தற்கும், ஒருங்கினைப்பதற்கும் முயல வேண்டும் என்ற ஆலோசனையையும் அவர் முன்வைத்தார். 

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுளுக்கு தகுந்த பதிலடித் தரும் வகையில் கட்டுபாடுகள் விதித்தல்

சீனாவும் தனது பங்கிற்கு பதிலடித் தருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதே இறுதியாகவும், முக்கியமாகவும் சொல்ல வேண்டிய விசயமாகும். இதுவரையில் பார்த்தவரை, இரண்டு துறைகளில் இது வெளிப்படுகிறது.

அமெரிக்க குறைகடத்தி தொழில் நிறுவனங்கள் சீன நிறுவனங்களோடு செய்து வரும் எல்லா ஒன்றிணைவு மற்றும் கையகப்படுத்தல்களையும் (mergers and acquisitions) முடக்குவதற்காக டிரஸ்ட்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் சட்டங்களை முதலில் அமல்படுத்துவதற்கு முயலுகிறது. இதற்கு முன்பு கூட, அரிதினும் அரிதாக, சில நேரங்களில் இந்த சட்டத்தை சீனா பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்களின் கையப்படுத்தலை முறியடித்துள்ளது. ஆயிரம் கையகப்படுத்தல்கள், இணைவுகளை தொடர்ச்சியாக சீனா கண்கானித்து வந்த போதும், வெறுமனே மூன்றை(0.01 சதவீதத்திற்கும் குறைவு) மட்டுமே முடக்கியுள்ளது…  குறைகடத்திகள் போன்று சீனாவின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படும் தொழில்நுட்பத் துறைகளில் தான் கிட்டத்தட்ட கடந்த பத்தாண்டுகளாக நடந்த அனைத்து இணைவுகள் மற்றும் கையகப்படுத்தல்களை சீனா தடுத்தி நிறுத்தியுள்ளது; நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளது; கைவிடும்படி செய்துள்ளது” என்று Skadden என்ற சட்ட ஆலோசனைகள் வழங்கும் நிறுவனம் டிசம்பர் 2022ல் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐந்து மாதங்களுக்கு பிறகு (மே 2023), அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் எடுக்கும் எந்தவொரு இணைப்பு நடவடிக்கைகளும் கனிசமான அளவிற்கு தடுத்து நிறுத்தப்படுகிறது அல்லது காலந்தாழ்த்தப்படுகிறது என்று வால் ஸ்டீரிட் ஜார்னல் என்ற அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. ஏகபோகங்களுக்கு எதிரான, டிரஸ்ட்டுகளுக்கு எதிரான சட்டத்தை அமெரிக்க குறைகடத்தி நிறுவனங்களுக்கு எதிராக சீனா கடுமையான நிலையிலிருந்து மிகக் கடுமையாக பயன்படுத்தத் துவங்கியிருக்கிறது.

மெமரி சிப் தயாரிப்புகளில் ஈடுபடும் அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனமான மைக்ரான் மூலம் இணையவழியாக ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா என்பது தொடர்பான சோதனையை சீனா முடுக்கிவிட்டுள்ளது. ஸ்டான்போர்ட்டு பல்கலைகழகத்தின் இணையவழி கொள்கை ஆய்வு மையத்தின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சீனாவின் டிஜிட்டல் கொள்கைகள் தொடர்பான ஆராய்ச்சி திட்டத்தின் தலைவரான கிரகாம் வெப்ஸ்டர் என்பவர் மைக்ரான் பிரச்சினையை பற்றி ஆராய்ந்தபோது, “மைக்ரான் கம்பெனி சீனாவின் நலனிற்கு எதிரானது என்று தொடர்ச்சியாக கூறப்பட்டு வருவதை புரிந்துகொண்டால் தான் இந்த இணையப்பாதுகாப்பு சோதனையையும் புரிந்து கொள்ள முடியம்” என்று கூறினார்.

இந்த சோதனையில் மைக்ரான் கம்பெனி பிடிபட்டால், சீன சந்தையிலிருந்து முற்றிலுமாக தூக்கியெறியப்படும்; இதனால் ஆண்டிற்கு 3.3 பில்லியன் டாலர்கள் அளவிற்கான விற்பனை இழப்பும் ஏற்படும். “அமெரிக்க சார்புத் தன்மைக்கு எதிரான” அணுகுமுறையில் தொடர்ந்து உறுதியாக பயனிப்பதோடு, மைக்ரான் நிறுவனத்தை வெளியேற்றுவதன் மூலம் அந்நிறுவனத்திற்கு போட்டியாக உள்ள தென்கொரிய நாட்டின் சாம்சங் மற்றும் SK Hynix நிறுவனங்களுக்கு சாதகமான நிலைமையை உருவாக்கித் தர முடியும். அமெரிக்காவின் பின்னின்று ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தால் பின்விளைவுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று தென் கொரியாவை அச்சுறுத்தி வரும் அதே நிலையில் தான் சீனா தந்திரமாக தன் நிலைக்கு உடன்படுவதற்காக இது போன்ற ஆசைகாட்டும் நடவடிக்கைகளையும் எடுக்க முனைகிறது.

டிரஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள், மைக்ரான் நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவிற்கு எதிராக கடந்த காலங்களில் எடுத்த நடவடிக்கைகளைக் காட்டிலும் உதாரணத்திற்கு ZTE நிறுவனம் நெருக்கடிக்குள்ளான போது எடுத்து நடவடிக்கைகளை காட்டிலும் இது சற்றே அதிக கடுமையான பதிலடியாகத்தான் விளங்குகிறது. அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் விதித்த தடையை, இனி வருங்காலங்களில் விதிக்க நினைத்தால் என்ன நடக்கும் என்பதை தகுந்த பதிலடிகள் மூலம் உணர்த்துவதே அவசியமானது என சீனா உறுதியாக நம்புகிறது.

அருமண் கனி உலோகங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தல் போன்று பிற வழிகளிலும் பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்புகளை சீனா ஆராயக்கூடும். இதுபோன்றதொரு நடவடிக்கைகளை இதுவரை சீனா எடுக்கவில்லை, ஏனெனில் இதனால் சீனாவிற்கு நன்மையை விட அதிகத் தீமையே ஏற்படும்.

முடிவுரை

அமெரிக்கா-சீனா இடையிலான உறவுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய தருணமாக அக்டோபர் 7 அமைந்துவிட்டது. சீனாவுடனான சார்புத்தன்மையை குறைத்து கொள்வதுடன் சீனாவின் தாக்குதல்களில் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறையை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் முன்னெடுத்துள்ள இந்த திடீர் கொள்கை மாற்றித்திற்கு ஏற்ப உலக நாடுகள் தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக் கொண்டு வருகின்றன. சீனாவும் இந்த புதிய நிலைமைகளுக்கு ஏற்ப தன்னை சீரமைத்து வருகிறது. இருந்தபோதிலும் சிலர் கூறியது போல பெரியளவிற்கான எதிர்வினை ஏதும் சீனாவின் பக்கமிருந்து வரவில்லை. குறைந்தபட்சமாக குறைகடத்தி தொழில்துறையை பாதிக்கும் வகையில் பைடன் அரசால் விதிக்கப்பட்ட ஏற்றுமதி கட்டுப்பாடுகள் கிட்டத்தட்ட கச்சிதமாகவே நடந்தேறியுள்ளது என்பதே இதன் மூலம் உறுதியாகிறது. அமெரிக்காவின் நேச நாடுகளும் அமெரிக்காவின் திட்டத்திற்கு துணை நிற்பதற்கு திட்டமிட்டு வருகின்றனர். மேட் இன் சீனா போன்று மீமிகையான தற்சார்பு இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வரும் சீனாவால் இந்தத் தடையிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளது.

சீன இராணுவத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவிடாமல் தடுத்தல் என்று முக்கியமான இலக்கை எட்ட முடியாது என்பதே அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த புதிய ஏற்றுமதி தடைக் கொள்கையில் மிக முக்கியமான பிரச்சினையாக விளங்குகிறது. சீனாவிற்கு எதிரான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை செம்மையாக அமல்படுத்தும் திறனை மேம்படுத்த வேண்டும்; கள்ளக்கடத்தல் மூலமாக பெறுவதை தடுக்க வேண்டும்; மேகக் கணிமைத் தொழில்நுட்பத்தின் மூலமாக சீனா செயல்படுவதை சமாளிப்பதற்கான வழியையும் கண்டறிய வேண்டும். இவையனைத்தையும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுத்தும் போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சீனா இராணுவம் பயன்படுத்த விடாமல் செய்துவிடலாம். இதில் ஆராய்வதற்கு ஒன்றேமே இல்லை. மிக வேகமாக மாறும் இயல்பு கொண்டதாக தொழிலநுட்ப சந்தைகள் விளங்குகின்றன. எனவே, மாறிவரும் இயல்புகளுக்கு ஏற்ப ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கான கொள்கைகள் மாற்றப்படும் போது மட்டுமே தக்க பலனை எதிர்பார்க்க முடியும்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச அளவிலான பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து வரும் CSIS ஆய்வு மையத்தில் (Centre for Strategic and International Studies) செயல்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான வத்வாணி மையத்தின் இயக்குநராக கிரிகோரி சி. ஆலன் இருந்து வருகிறார்.

இந்த ஆய்வுக்கென்று தனியாக யாருடைய நிதியுதவியும் பெறப்படவில்லை. CSIS ஆய்வு மையத்திற்கு பொதுவாக வழங்கப்படும் நிதியுதிவைப் பயன்படுத்தியே இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையின் முன்வரைவுகளுக்கான ஆலோசனைகளை வழங்கிய ஜெரார்ட் டிபிப்போ, எமிலி பென்சன் மற்றும் மைக்கேலா சிமோனியோ ஆகியோருக்கு கட்டுரையாளர் நன்றி கூறுகிறார்.

ஆய்வுக்கான ஆலோசனைகளை வழங்கிய பென் மர்பிக்கும், ஆய்வுப் பணிகளுக்கு உதவிய அகில் தடானி மற்றும் கோனர் சாப்மேன் ஆகியோருக்கும் கட்டுரையாளர் நன்றி கூறுகிறார்.

- தரணி - வெண்பா - விஜயன்

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.csis.org/analysis/chinas-new-strategy-waging-microchip-tech-war

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. 

இந்த கட்டுரை அமெரிக்க ஆதரவு நிலையிலிருந்து எழுதப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் துறையில் சீனாவின் மேட் இன் சீனா 2025 திட்டத்தை கைவிட்டு அமெரிக்கா கட்டுப்பாடுகளுக்கு அடிபணிந்து செல்வதே சீனாவுக்கு நன்மை பயக்கும் என ஆலோசனை வழங்குவதாக உள்ளது.

செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம். 

– செந்தளம் செய்திப் பிரிவு