சீனாவுடன் சவுதி அரேபியா 7 பில்லியன் டாலர் நாணய மாற்று ஒப்பந்தம்

தமிழில் : வெண்பா

சீனாவுடன் சவுதி அரேபியா 7 பில்லியன் டாலர் நாணய மாற்று ஒப்பந்தம்

சீனாவும் சவூதி அரேபியாவும் சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான நாணய மாற்று ஒப்பந்தத்தை போட்டுள்ளன, இது உலகெங்கிலும் உள்ள நாடுகள் டாலரிலிருந்து (Green back) விலகியதால் பணமதிப்பிழப்பு போக்கில் அடுத்த நகர்வைக் குறிக்கிறது.

இந்த மூன்று வருட ஒப்பந்தம் அதிகபட்சமாக 50 பில்லியன் யுவான் அல்லது 26 பில்லியன் ரியால்களை அனுமதிக்கிறது.

ஒப்பீட்டளவில் சிறியதாக தெரிந்தாலும், சவூதி அரேபியா உலகின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதியாளராக இருப்பதாலும், பெரும்பாலான உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் டாலரில் நடத்தப்படுவதாலும் இந்த ஒப்பந்தம் பெரியதாக இருக்கும்.

ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டிய சீன வர்த்தகத் தரவுகளின்படி, ரஷ்யா சீனாவின் பிரதான எண்ணெய் சப்ளையர் என்றாலும், சீனா 2022 இல் 65 பில்லியன் டாலர் மதிப்புள்ள சவுதி கச்சா எண்ணெயையும் இறக்குமதி செய்தது. இது சீனாவிற்கான சவுதியின் மொத்த ஏற்றுமதியில்  83%  சதவிகிதமாகும்.

டாலரை அகற்றும் முயற்சியில் யுவானின் சர்வதேசமயமாக்கலை அதிகரிக்க சீனா பரந்தளவிலான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த மாதம், சீனாவைத் தவிர மற்ற நாடுகளுடனான ரஷ்யாவின் வர்த்தகங்களில் 25% சதவிகிதம் ரென்மின்பியுடன் நடந்ததாக RBC தெரிவித்தது. செப்டம்பர் மாத JP Morgan அறிக்கை, டாலரைத் தவிர மற்ற நாணயங்களுடன் எண்ணெய் வர்த்தகம் அதிகமாக நடைபெற்று வருவதாக கூறியது.

ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, சீனாவின் நாணய  பரிமாற்ற வரிகளின் நிலுவை செப்டம்பரில் 117.1 பில்லியன் யுவான் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

அர்ஜென்டினா போன்ற நாடுகளுடன் இந்த ஆண்டு  நாணய மாற்று ஒப்பந்தங்களில் சீனா கையெழுத்திட்டுள்ளது.  கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, 4 டிரில்லியன் யுவான் மதிப்பிலான  29 நாணய மாற்று ஒப்பந்தங்களுடன் சீன மத்திய வங்கி முதலிடத்தில் உள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை பாண்டா பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சீன சந்தைகளை அணுக ஊக்குவித்துள்ளது. பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்காக பெரு, மலேசியா போன்ற நாடுகளுக்கு யுவான் மதிப்பில் கடன்களை சீன வங்கிகள் வழங்கியுள்ளன.

- வெண்பா (தமிழில்) 

மூலக்கட்டுரை: https://markets.businessinsider.com/news/currencies/dedollarization-china-yuan-dollar-currency-swap-renminbi-saudi-arabia-oil-2023-11