பொது சிவில் சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதிலுள்ள குறைகளை களைய வேண்டும் - காங்கிரசு கட்சி

தமிழில் : வெண்பா

பொது சிவில் சட்டத்தை  நாங்கள்  எதிர்க்கவில்லை. அதிலுள்ள குறைகளை களைய வேண்டும் - காங்கிரசு கட்சி

பொதுசிவில் சட்டத்தை தேர்வுக்குழுவிற்கு அனுப்ப காங்கிரஸ் முன்மொழிவு

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபையில் சென்ற வாரம் பொது சிவில் சட்ட மசோதா மீதான விவாதம் மீண்டும் தொடங்கியது, எதிர்க்கட்சி (காங்கிரஸ்) உறுப்பினர்கள் சட்டத்தை சபையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதற்கான கோரிக்கையை முனவைத்தனர்.

பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதாவை தாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் அதன் விதிகள் விரிவாக ஆராயப்பட வேண்டும். அப்போதுதான் அதிலுள்ள குறைபாடுகள் முன்பாகவே அகற்றப்படும் என்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கிச்சா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திலக் ராஜ் பெஹர் சபையில் விவாதத்தை மீண்டும் தொடங்கினார். அரசியலமைப்பின் 44 வது பிரிவு பொதுசிவில் சட்டம்  ஒரு மாநிலத்திற்கு மட்டுமல்ல நாடு முழுவதும் பொருந்தும் என்கிறது  என்றார்.

"நாங்கள் மசோதாவையோ அல்லது அதன் நிறைவேற்றத்தையோ எதிர்க்கவில்லை, ஆனால் அது நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அது சபையின் தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

ஜஸ்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆதேஷ் சிங் சவுகான், இந்த மசோதா பழங்குடியின மக்களை அதன் வரம்பில் இருந்து விலக்குகிறது, ஆனால் அதே நேரத்தில் இது முழு மாநிலத்திற்கும் பொருந்தும் என்று கூறுகிறது. இது முரண்பாடாக உள்ளது என  சுட்டிக்காட்டினார்.

"உத்தரகாண்ட் பழங்குடியினரை அதன் வரம்பிற்கு வெளியே நிறுத்தினால், அது மாநிலம் முழுமைக்கும் விரிவடைவானது என்று எப்படி கூற முடியும்? எனவே, இந்த மசோதாவை அவையின் தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்" என்று சவுகான் கூறினார்.

அன்றைய சபை நிகழ்ச்சி நிரலின்படி, முதல்வர் புஷ்கர் சிங் தாமி மசோதாவை நிறைவேற்ற முன்மொழிவார்.

- வெண்பா (தமிழில்) 

மூலக்கட்டுரை: https://www.deccanherald.com/india/uttarakhand/not-opposed-to-ucc-bill-but-says-opposition-congress-in-state-2883756