தேர்தல் 2024ஐ அட்டவணைப்படுத்துதல்: அனைத்துக் கட்சிகளும் எப்படிச் செயல்பட்டன என்பதன் விவரம்

தி வயர்

தேர்தல் 2024ஐ அட்டவணைப்படுத்துதல்: அனைத்துக் கட்சிகளும் எப்படிச் செயல்பட்டன என்பதன் விவரம்

பெரும்பாலான கட்சிகள் கிராமப்புறங்களில் மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்றுள்ளன என்பதை கட்சி வாரியான செயல்பாட்டுத் தரவு வெளிப்படுத்துகிறது.

இது 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றிய தொடர் கட்டுரைகளின்  ஒரு பகுதியாகும்.

பாஜக வென்ற 240 இடங்களில், வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் மட்டும் 61.25% சதவிகிதம் இடங்களை பெற்றுள்ளது. மேற்கே பிராந்தியத்தில், வெறும் 34 இடங்கள் (14.1%) மட்டும் வென்று 2019ஐ விட மிகவும் பின்தங்கியுள்ளது. இமயமலையையொட்டியப் பகுதிகளில், இதுவரை இல்லாத அளவுக்கு 90%க்கும் அதிகமான இடங்களைப் பிடித்துள்ளது.

காங்கிரஸ் வென்ற 99 இடங்களில், 40 இடங்களை (40% சதவிகிதத்திற்கும் மேல்) தெற்கு பிராந்தியத்தில் இருந்து திரட்டியுள்ளது. முந்தைய இரண்டு தேர்தல்களைப் போலல்லாமல், காங்கிரஸ் வடக்கு, மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் முறையே 17, 14 மற்றும் 12 வெற்றிகளுடன் அதன் செயல்பாட்டை மேம்படுத்தியுள்ளது. இருப்பினும், இமயமலையையொட்டியப் பகுதிகளில் அதன் செயல்பாடு பூஜ்ஜியம்; அங்கு பாஜக 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.. மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் காங்கிரஸ் தொடர்ந்து மோசமாகவே வெற்றி பெற்று வருகிறது. இந்த பகுதிகளில் முறையே 3 மற்றும் 5 இடங்களை மட்டுமே வென்றுள்ளது..

2024 ஆம் ஆண்டில் மத்திய பிராந்தியத்தில் பாஜக தனது வாக்குவங்கியை (55% க்கு மேல்) தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதே பொழுதில் கிழக்கு பிராந்தியத்தில் அதன் வாக்குவங்கியை  1% சதவிகிதம் மேம்படுத்தியுள்ளது. இருப்பினும், அதன் பிற கோட்டைகளான வடமேற்கு (18%), வடக்கு (கிட்டத்தட்ட 8 %) மற்றும் மேற்கு (கிட்டத்தட்ட 5%) பகுதிகளில் அதன் செல்வாக்கு கடுமையாக வீழ்ந்துள்ளது. ஆனால் அது வடகிழக்கு (17%) மற்றும் தெற்கு பிராந்தியங்களில் (10%) அதன் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

அனைத்து கட்சிகளும் கிராமப்புற தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், சமாஜ்வாடி கட்சி எந்த நகர்ப்புற தொகுதியிலும் வெற்றி பெறாமல் தரவரிசையில் தனித்து நிற்கிறது. உத்தரபிரதேசத்தில் 37 இடங்களை வென்று அதன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்திய போதிலும், நகர்ப்புறங்களிலிருந்து அது பூஜ்ஜியத்தை ஈர்த்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியும் கூட நகர்ப்புறங்களில் பூஜ்ஜியத்தைப் பெற்றன. ஏனெனில் அது நகர்ப்புற தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுக் கொடுத்து கிராமப்புறங்களில் மட்டுமே போட்டியிட்டது.

கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் காங்கிரஸ் தனது செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் 10% சதவீதத்திற்கு மேலும் நகர்ப்புற இடங்களில் 8% சதவீதத்திற்கு மேலும் பெற்றுள்ளது. மறுபுறம், பாஜக இந்த இரண்டு இடங்களிலும் சிறிது சரிவைக் கண்டுள்ளது. இருப்பினும் 2019 உடன் ஒப்பிடுகையில் அதன் வாக்குவங்கியை பெரும்பாலும் தக்க வைத்துள்ளது.

பாஜக வென்ற இடங்களில் 23% சதவிகிதத்திற்கும் அதிகமானோர் பட்டியல் (31) மற்றும் பழங்குடி (25) சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து வென்றுள்ளனர். காங்கிரஸ் வென்ற தொகுதிகளில் 32% சதவிகிதத்திற்கும்  அதிகமானவை அதேபோன்ற தொகுதிகளாகும்.

காங்கிரசை விட பாஜகவின் வெற்றி 15.77% சிறப்பாக இருந்தது. காங்கிரஸ் 11.08% சதவீதத்துடன் சற்று பின்தங்கியுள்ளது. அவர்கள் குறைவான இடங்களைப் பெற்றிருந்தாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (16.86%), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (16.25%), திராவிட முன்னேற்றக் கழகம் (21.19%) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (21.88%), தெலுங்கு தேசம் கட்சி (16.79%) போன்றவை குறைந்த இடங்களில் வென்றிருந்தாலும்  அவர்களின் வெற்றிப் பங்கை சிறிதளவு உயர்த்தியுள்ளன.

அதிக அளவிலான தொகுதிகளில் வெறும் 5% சதவிகித வாக்கு வித்தியாசத்தில் மட்டும் வெற்றி பெற்றதானது தேர்தல் களத்தில் எவ்வாறு கடுமையான போட்டி நிலவியது என்பதை பிரதிபலிக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) பெற்ற 293ல் 11 தொகுதிகளை 1% சதவிகிதத்திற்கும் குறைவான வித்தியாசத்திலேயே வென்றுள்ளது.  “இந்தியா” கூட்டணி பெற்ற 234ல் 10 தொகுதிகளை 1% சதவிகிதத்திற்கும் குறைவான வித்தியாசத்திலேயே வென்றுள்ளது. அதேபோல், NDA 52 இடங்களையும் இந்தியா 53 இடங்களையும் 1 முதல் 5% சதவிகிதம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளன. NDA 60 இடங்களையும் இந்தியா 62 இடங்களையும் 5 முதல் 10% சதவிகிதம் வாக்கு  வித்தியாசத்தில் வென்றுள்ளன. 

மொத்தமாக பார்த்தால், NDA அதன் கிட்டத்தட்ட 42% இடங்களை 10%க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வென்றுள்ளது. அதேபோல் இந்தியா கூட்டணி அதன் வெற்றிகளில் 53% க்கும் மேலான தொகுதிகளை  இதே வித்தியாசத்திலேயே பெற்றுள்ளது.

(பவன் கொறடா)

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை : https://m.thewire.in/article/politics/charting-the-election-2024-a-breakdown-of-how-all-the-parties-performed?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR0LlYwcIN7vaYRMlSFTShfTXCZPOX10s27psX-8dNUwsOZRDz4C_oU-SnU_aem_AV42U03N_cHmg-3uHy25yStGoL3-FvatvOgaoMxE1KffJ1vN3OKCTN6mOtsxzX8hv_j8SC9iECDgqRJ0D78AQ9cY