மின்மயமாக்கல் எனும் பெயரில் சென்னை போக்குவரத்து கழகத்தை கார்ப்பரேட்மயமாக்கும் திமுக அரசு
குட் ரிட்டர்ன்ஸ் தமிழ்
சென்னை-யின் மாபெரும் திட்டத்தைக் கைப்பற்ற 3 நிறுவனங்கள் போட்டி.. வெல்வது யார்..?
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் போக்குவரத்துத் துறை தலைகீழாக மாற்றும் முக்கியமான எலக்ட்ரிக் பஸ் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என மக்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் முக்கியமான அப்டேட் வந்துள்ளது. பெங்களூர் உட்பட நாட்டின் முக்கியமான நகரங்களில் எலக்ட்ரிக் பஸ் பயன்பாடு மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள வேளையில், தற்போது சென்னையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC), உலக வங்கி நிதியுதவியுடன் புதிய மின்சார பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், குறைந்த தரைதள உயரம் கொண்ட 500 மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தைக் கைப்பற்றச் சென்னை நிறுவனம் ஒன்று உட்பட மொத்தம் 3 நிறுவனங்கள் போட்டிப்போடுகிறது.
இந்த 500 பேருந்துகள் சென்னையில், கிராஸ் காஸ்ட் கான்டிராக்ட் என்ற முறையில் இயங்கப்பட உள்ளது. அதாவது இதில் போட்டிப்போடும் நிறுவனம் 500 பேருந்துகளை வாங்கி, அதை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, இயங்கி, மெயின்டெயின் செய்யப்பட வேண்டும்.
இந்த மாபெரும் ஒப்பந்தத்தைப் பெற மூன்று நிறுவனங்கள் போட்டியில் கலந்து கொண்டுள்ள உள்ளன. அவை, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஏரோ ஈகிள் ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னையைச் சேர்ந்த ஓஎச்எம் குளோபல் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த ஈவி டிரான்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஈவிஇ) ஆகியவை ஆகும்.
இதில், ஓஎச்எம் குளோபல் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் என்பது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். அதே போல், ஈவிஇ நிறுவனம் தெலுங்கானாவின் பிரபலமான மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்பராஸ்டக்சர் நிறுவனத்தின் (MEIL) துணை நிறுவனமாகும்.
உலக வங்கி நிதியுதவி இயக்கப்பட்டும் இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், குறைந்த செலவில் இயங்கக்கூடிய 100 ஏசி மற்றும் 400 ஏசி அல்லாத மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்ய MTC திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான விவரங்கள் ஜூன் 26ம் தேதி திறக்கப்பட்டுள்ளன.
தற்போது அரசு திட்டமிட்டபடி நடந்தால், இந்த ஒப்பந்தம் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் வழங்கப்படும். அதற்குப் பிறகு, ஆறு மாதங்களில் மின்சார பேருந்துகளை நிறுவனங்கள் டெலிவரி தொடங்கும். எனவே, அடுத்த வருட மார்ச்-ஏப்ரல் மாதங்களில் முதல் மின்சார பேருந்துகள் இயக்கத்துக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த Gross Cost Contract மாதிரியின் கீழ், ஒப்பந்தத்தை வெல்லும் நிறுவனம் மின்சார பேருந்துகளைச் சொந்தமாக வாங்கி, அதை இயக்கி, நிர்வாகம் செய்ய வேண்டும். இதை ஒரு குறிப்பிட்ட தொகைக்கும், காலத்திற்கும் பேருந்துகளை இயக்கப்படும்.
பேருந்து வழித்தடங்களை MTC நிர்ணயிக்கும், அதேபோல் பயணிகள் கட்டணத்தையும் MTC தான் வசூலிக்கும். இந்த குறிப்பிட்ட ஒப்பந்த காலத்திற்கு முன்பே நிர்ணயம் செய்யப்பட்ட கிலோமீட்டர் அடிப்படையிலான கட்டணத்தை ஒப்பந்ததாரர்கள் பெறுவார்கள். இந்த கட்டணம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
இத்திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ. 959 கோடி ஆகும், இதில் 70 சதவீத தொகையை உலக வங்கி வழங்குகிறது, எஞ்சியுள்ள தொகையை மாநில அரசு அளிக்கிறது.
- குட் ரிட்டர்ன்ஸ் தமிழ்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு