வெகுஜனங்களிடையே கட்சியின் பணி

லெனின்

வெகுஜனங்களிடையே கட்சியின் பணி

விலை : ரூ.220

நூலாசிரியர்: லெனின்

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 272 

நூல் குறிப்பு:

தொழிலாளர் இயக்கமும் சோஷலிசமும் ஒன்றுசேர்ந்ததுதான் சமூக ஜனநாயகம் எனப்படுவது. சமூக ஜனநாயகத்தின் பணி செயலின்றி சும்மாயிருந்து தொழிலாளர் இயக்கத்தின் தனிப்பட்ட ஒவ்வொரு கட்டத்திலும் அதற்குச் சேவை ஆற்றுவதல்ல. இயக்கம் முழுவதன் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதும், இந்த இயக்கத்துக்கு அதன் இறுதி நோக்கத்தையும் அதன் அரசியல் பணிகளையும் சுட்டிக்காட்டுவதும், அதன் அரசியல், சித்தாந்தச் சுயேச்சை நிலையைப் பாதுகாப்பதும்தான் சமூக ஜனநாயகத்தின் பணி. சமூக ஜனநாயகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படுமாயின் தொழிலாளர் இயக்கம் சிறுமையுற்று விடுகிறது, தவிர்க்கமுடியாதபடி பூர்ஷ்வாத் தன்மையதாகி விடுகிறது. பொருளாதாரப் போராட்டத்தை மட்டும் நடத்திச் செல்வதன் மூலம் தொழிலாளி வர்க்கம் தனது அரசியல் சுயேச்சை நிலையை இழந்து விடுகிறது; பிற கட்சிகளுக்கு வால் பிடித்துச் சென்று, "தொழிலாளர்களுடைய விடுதலையைத் தொழிலாளர்களேதான் போராடிப் பெற்றுக் கொண்டாக வேண்டும்"  என்னும் மாபெரும் கோட்பாட்டுக்குத் துரோகமிழைக்கிறது. தொழிலாளர் இயக்கம் சோஷலிசத்திலிருந்து விலகி நின்று இரண்டும் தனித் தனியே சொந்த பாதையிலே சென்ற காலகட்டம் ஒவ்வொரு நாட்டிலும் இருந்துள்ளது. சோஷலிசம், தொழிலாளர் இயக்கம் இவை இரண்டையும் இந்தத் தனிமைப்பாடு ஒவ்வொரு நாட்டிலும் பலமிழக்கவே செய்துள்ளது. சோஷலிசமானது தொழிலாளர் இயக்கத்துடன் இரண்டறக் கலக்கையில் மட்டும்தான் எல்லா நாடுகளிலும் இரண்டுக்கும் நிலையான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. சோஷலிசம், தொழிலாளர் இயக்கம் இவை இரண்டின் இந்த இணைப்பானது ஒவ்வொரு நாட்டிலும் வரலாற்று வழியில், அந்தந்த நாட்டுக்குரிய தனி முறைகளில், காலம், இடம் ஆகிய நடப்பு நிலைமைகளுக்கு ஏற்ப உருவாயிற்று. ருஷ்யாவில் சோஷலிசத்தையும் தொழிலாளர் இயக்கத்தையும் இணைப்பதன் அவசியம் தத்துவார்த்தத்தில் நெடுங்காலத்துக்கு முன்பே பறைசாற்றப்பட்டிருந்த போதிலும், நடைமுறையில் இவ்விணைப்பு இப்பொழுதுதான் உருவாக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் கடினமான ஒரு நிகழ்ச்சிப் போக்கு. ஆகவே இது நடைபெறுகையில் ஊசலாட்டங்களும் ஐயப்பாடுகளும் ஏற்படுவதில் வியப்பு ஏதுமில்லை.  

தொடர்புக்கு: +91 96003 49295