அமெரிக்கா விரும்பிய வர்த்தகப் போரில் சீனா ஏற்கெனவே வெற்றி பெற்று வருகிறது
ப்ளூம்ஃபெர்க் - தமிழில்: வெண்பா
பொருளாதாரப் போரின் புதிய சகாப்தம் மிகவும் தீவிரமடைந்த தருணமாக இந்தச் சமீப வாரங்களை வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்யலாம். செப்டம்பர் மாத இறுதியில், தடைசெய்யப்பட்ட சீன நிறுவனங்களின் துணை நிறுவனங்களுக்கு குறைக்கடத்திகள் (semiconductors) மற்றும் சிப் தயாரிக்கும் கருவிகள் வழங்குவது தொடர்பாக அமெரிக்க வர்த்தகத் துறை கடுமையானதொரு நடவடிக்கையை (crackdown) அறிவித்தது. பதிலுக்கு, சீனா பிரம்மாண்டமான அளவில் களமிறங்கியது, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரிய வகை கனிமங்களில் (rare-earths) சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்டது.
ட்ரம்ப் நிர்வாகத்தில் சமீபத்தில் பணியாற்றிய டீன் பால் எழுதியதன் படி, “பூமியில் உள்ள எந்தவொரு நாடும் நவீன பொருளாதாரத்தில் பங்கேற்க முடியாதபடி தடுக்கும் அதிகாரத்தை” சீனா நிலைநிறுத்தியுள்ளது. ஏனெனில், இது மூலோபாயத் தொழில்களுக்கு (strategic industries) அடிப்படையாக இருக்கும் பரந்த அளவிலான தனிமங்களை பிற நாடுகள் அணுக முடியாத அளவுக்கு அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை “ஒழுக்கக்கேடான விதிமீறல்” என்று அழைத்ததுடன், சீனாவுக்கு எதிராகப் புதிய தடைகள் (sanctions) மற்றும் அதிக வரிகளை (heavy tariffs) விதிப்பதாகவும் டிரம்ப் அச்சுறுத்தினார். அவை செயல்படுத்தப்பட்டால், அந்த நடவடிக்கைகள் உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு இடையேயான வர்த்தகத் தடையை (de facto trade embargo) மீண்டும் உருவாக்கும்.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.bloomberg.com/opinion/features/2025-10-19/us-china-trade-war-xi-is-winning-against-trump
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு