அடையாள அரசியலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பலவீனமும்
JK சந்திரசேகர்
தோழர் J K Chandrasekar பதிவிலிட்ட பின்னூட்டம்
கம்யூனிஸ்டு கட்சியிலுள்ள பலரும் இந்தியாவில் பெரியாரையும், அம்பேத்கரையும் தவிர்த்து விட்டு மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று வாதிடுகின்றனர்.
25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னால் கம்யூனிஸ்டு கட்சிகள் இவ்வாறு பெரியார் அம்பேத்கரை முன்னிறுத்தவில்லை, அவ்வளவு ஏன் அப்போது தமிழ்நாட்டில் கரு நிலையிருந்த தலித் இயக்கங்களே அவுவளவாக அவர்களை முன்னுறுத்தவில்லை, இன்னும் சொல்லப் போனால் பெரியாரை திராவிட இயக்கங்கள் கைவிட்டு விட்டிருந்தனர்,
தலித் இயக்கங்கள் குறிப்பாக விசிக பெரியாரை சாடி தங்களுடைய இதழ்களில் 2000த்தின் தொடக்கத்தில் எழுதி வந்தனர்.
50 ஆண்டுகளுக்கு முன்னால் இவர்களை முன்னிறுத்தாமல்தான் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றார்கள்,
கடந்த 25, 30 ஆண்டுகளில் அடையாள அரசியல் முன்னிலைப்படுத்தப்படும் போது வழக்கத்திற்கு மாறாக பெரியாரும், அம்பேத்கரும் பெரிய அளவில் முன்னிறுத்தப்படுகிறார்கள், வெகுஜன அபிப்ராயத்தில் இவர்களுடைய புகழ் பரவியதும், கம்யூனிஸ்டுகளும் தூக்கிச் சுமக்கிறார்கள்,
அதில் சில பேர் பெரியாரையும், அம்பேத்கரையும் தவிர்த்து விட்டு மார்க்சியத்தையே நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது என்கிற அளவுக்குப் போய்விட்டனர். 30 , 40 ஆண்டுகளுக்கு முன்னால் காந்திய சிந்தனையை உள்வாங்காமல் இந்தியாவில் மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று பேசிய கம்யூனிஸ்டுகள் இருந்தனர்.
இப்போது காந்தியை தூக்கிவிட்டு அந்த இடத்திற்கு பெரியாரையும், அம்பேத்கரையும் கொண்டு வந்துள்ளனர்.
இவர்களெல்லோரும் தங்களுடைய சொந்த தத்துவத்தின் மீது நம்பிக்கை வைக்காமல் வெகுஜன அபிப்ராயத்தில் எது பாப்புலராக உள்ளதோ அதன் பின்னால் செல்கின்றனர்.
இது கும்பலுக்கு வால் பிடிக்கும் போக்காகும். மேலும் மார்க்சியத்தை திரிக்கிற போக்குமாகும்.
பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகளோடு நடைமுறைப்பிரச்சினைகளில் இணைந்து பணியாற்றுவது வேறு, தத்துவத்தையே கொண்டு வந்து மார்க்சியத்தோடு இணைக்க வேண்டுமென்பது வேறு.
இவ்வாறு தத்துவத்தையே இணைக்கச் சொல்பவர்கள் பெருகி வருவது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெருத்த பின்னடைவையும்
பலவீனத்தையுமே தரும்.
சொந்த தத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து செயலாற்றுங்கள் தோழர்களே!
Chandran Dhamodaran
https://www.facebook.com/share/16jLTd9ceZ/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு