சவூதி அரேபியாவின் கிழக்கு - நோக்கு கொள்கையை இயக்குவது எது?
தமிழில் : சேரன்
பகுப்பாய்வு:. வாஷிங்டன் உடனான உறவு, கசப்பான திருப்பமாக மாறிவிட்டதால், தன்னுடைய புவிசார் செல்வாக்கை விரிவுப் படுத்துவதற்காக, ரியாத் புதிய வாய்ப்புகளை நோக்கி ஆராய துவங்கிவிட்டது!.
உலக மக்கள் தொகையில் 41% கொண்டிருக்கும் பிரிக்ஸ் அமைப்பு (பிரேசில்,ரஷ்யா,இந்தியா,சீனா,தென் ஆப்ரிக்கா) தொகுதியானது, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மூன்றில் ஒரு பங்கும், சர்வதேச வர்த்தகத்தில் 16% மும் கொண்டிருக்கிறது.
அண்மையில், 2023- ல் தென் ஆப்ரிக்காவில் நடைப் பெறவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வரும் துருக்கி மற்றும் அர்ஜன்டைனா ஆகியவற்றின் வரிசையில், சவூதி அரேபியாவும் சேர ஆர்வம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் உடனான உறவு கசந்துவிட்ட நிலையில், தன்னுடைய புவிசார் செல்வாக்கை விரிவுப்படுத்த புதிய வாய்ப்புகளை நோக்கி ஆராய துவங்கிவிட்டது. சவூதி அரேபியாவும், அமெரிக்காவும், நீண்ட நாட்கள் நட்பு நாடுகளாக இருந்த போதிலும், பைடன் நிர்வாகம் அதிகாரத்திற்கு வந்த பிறகு, சவூதி அரேபிய பேரரசின் மனித உரிமைகள் பற்றிய ஆவணங்கள் மீதான விமர்சன குரல், அவர்களுக்கு இடையேயான இருதரப்பு உறவை பலவீனப்படுத்தி இருக்கிறது. இன்னும் கூடுதலாக, 2018 ஆண்டு, ஜமால் கசகோகியின் படுகொலையானது, அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களால், சவூதி அரசாங்கத்தின் தொடர்பு இருந்ததைப் பற்றி கண்டறிந்ததானது, ரியாத்தை ஒரங்கட்டி வைத்தது. தான் அரசியல் ரீதியாக தனிமைப் படுத்தி வைத்திருப்பதையும், தனிமைப்படுத்தப்பட்டு போனதையும் கண்டு அச்சப்பட்டு போன சவூதி அரேபியா, மேற்குலகத்தை சமநிலைப்படுத்த, கிழக்கே இருக்கும் புதிய கூட்டாளிகளை தேடத் துவங்கிவிட்ட்டது.
வாஷிங்டன்னை மாற்றிவிட வேண்டும் என்று வெளிப்படையாக வாய்ப்பினை வைத்திருப்பது, ரியாதுக்கு உருப்படியான பயனையளிக்குமா?.
அப்படி துவங்கும் பொழுது, பிரிக்ஸ்ஸில் சேர்வதாகக் கொண்டால், ரியாதின் நகர்வானது, அதனை, பீஜிங்கின் சுற்று வட்டத்திற்கு அருகே கொண்டுவரும். ஏனெனில், அக் குழுவில் இருக்கும் சீனா, சர்வதேச செலாவணி நிதியத்தில்(IMF), அக்குழுவின் பொருளாதாரத்தில், கிட்டத்தட்ட, 70% பங்கினை அது கொண்டிருக்கிறது.
இப்பொழுது, வாஷிங்டன்னிற்கும், பீஜிங்கிற்கும் இடையே வர்த்தகப் போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்கா மற்றும் ரியாத் இடையே ஏற்படும் சிறு சச்சரவுகள் கூட, ரியாத் பேரரசின் மீது, சீனா தனது செல்வாக்கினை விரிவுப் படுத்துவதற்கு வாய்ப்பாக முடிந்துவிடும். ஏனென்றால், இந்த விவகாரங்களுக்கு எல்லாம் பதில் அளிக்கும் படியாக, சவுதி இளவரசர், முகமது - பின் - சலாம் (Mbs), சீனாவுடன் சேர்வதற்கான தனது உணர்வு பற்றிய விருப்பதினை தெரிவித்துள்ளார். சீன செய்தி தொடர்பாளர், வாங் வென் பின், " சீனா இதனை வரவேற்கிறது, ஆதரிக்கிறது" என்று அறிவித்துள்ளார்.
2050 ஆம் ஆண்டிற்குள், பொருளாதார வளமிக்க பணக்கார நாடுகளுடன் போட்டியிட எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. கோல்டன் சாஸ் வங்கிக் குழுமத்தின் கணக்கெடுப்புபடி, பிரிக்ஸ் நாடுகள், துரிதமான பொருளாதார வளர்ச்சியை காட்டிக் கொண்டிருக்கிறது. இது உலகத்தின் மொத்தப் பொருளாதார பங்களிப்பில், 25% ஆகும்.
இந்தாண்டு, ஜூலையில் நடைபெற்ற 14 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பொருளாதார ஒத்துழைப்பிற்கான புதிய சாத்தியப்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அவற்றுள் சில, புதிய வளர்ச்சி வங்கி, உள் நாடுகளுக்கு இடையே பண அளிப்பு முறை, பிரிக்ஸ் அமைப்பிற்கென்று நிதியிருப்பு தொகுப்பு மற்றும் அவசரகால நித்தியிருப்பு ஆகியவைகள் பற்றியதாகும்.
"புவிசார் அடிப்படையில், தனது பாதுகாப்பிற்கு இன்னும் அமெரிக்காவை சார்ந்திருக்கும் சவுதி அரேபியா, புவிசார் பொருளாதாரத்தில், கிழக்கு நோக்கி தன்னை மாற்றிக் கொண்டுவிட்டது", என்று, ஜெர்மன் நாட்டு உலகளாவிய மற்றும் பகுதி அடிப்படையிலான ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர், முகமது பகர் பரோக், நியூ கார்ப் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
" இப்பொழுதே, சீனா, நாட்டின் மேலான வர்த்தக கூட்டாளியாக இருக்கிறது. இந்தியாவிடம் ரஷ்யாவும் கூட அதற்கு மிக முக்கியமானவர்களாக ஆகியிருப்பது அதிகரித்திருக்கிறது. இந்த முன்னேற்றத்தின் கீழ்தான், பிரிக்ஸ் மற்றும் சாங்காய் அமைப்பில் சவூதி அரேபியா சேர விரும்புவது இயற்கையான ஒன்றுதான்".
சவூதி அரேபியாவிற்கான இந்த நகர்வுகளின் அனுகூலங்கள் குறித்து, சீனாவை அடித்தளமாகக் கொண்டு இயங்கும், சர்வதேச உறவுகள் குறித்த நிபுணர், சீன ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, " பிரிக்ஸ் அமைப்பில் சேர்வது குறித்த கருத்தானது, வாஷிங்டன் உடனான சவூதி அரேபியாவின் தூதரக உறவில் தன்னாட்சி உரிமை வளர்ந்து இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது, பிரிக்ஸ் அமைப்பில் சவூதி அரேபியா சேர்வதானது, தன்னுடைய சொந்த ஆற்றல் நலனை பாதுகாப்பதாக இருக்கும் என்பதோடு, பிறர் அதனை துருப்பு அட்டையாக பயன்படுத்துவது இல்லாமல் இருக்கும்".
அடுத்து, " மாஸ்கோ காரணி" இருப்பதும் ஒன்றாகும். உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பானது, பிற நாடுகள் அனைத்தும் தங்கள் வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் செய்வது பெரும் பணியாக இருக்கும் பொழுது, தனது வெளியுறவு கொள்கையில் சிறிதளவே மாற்றுருவாக்கத்தை செய்ய வேண்டியிருந்தது. கடந்த காலங்களைக் காட்டிலும், அனுகூலங்கள் கொண்டதாக இருப்பினும், நடுநிலையை சாதிப்பது சற்று கடினமானதாகவே இருக்கிறது.
பிரிக்ஸ் அமைப்பில், இன்னும் பல நாடுகள் சேர்ந்திருப்பினும், அவைகளுக்கு, அந்த பொருளாதார குழுவில், மாஸ்கோ ஓர் அங்கமாக இருப்பதால், நேட்டோவின் திட்டமிட்ட விரிவாக்கத்தோடு ஒப்பிடும் பொழுது, தங்களை முறைப்படுத்தி கொள்வதற்கு சில காலம் பிடிக்கும்.
மேலும், ரஷ்ய நலன்களுக்காக, சவூதியின் ஆதரவு அதிகரித்து இருப்பதானது, பல்வேறு நிலைமைகளில், சவூதி- அமெரிக்க உறவுகளின் அடிப்படைகளில் இருந்து, முன்னரே சோதிக்கப்பட்டுவிட்டது. இவ்விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும் படியாக, சிறிது காலத்திற்கு முன், பைடன் அந்த முடியாட்சிக்கு சென்றிருந்த பொழுது, எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான எந்தவொரு உடன்படிக்யையும் வாஷிங்டன் எட்டவில்லை.
கடந்த அக்டோபரில், சவூதி தலைமயிலான OPEC (பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு), கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் தினமும் இரண்டு மில்லியன் பீப்பாய்களாக குறைத்தது. இந்த நடவடிக்கை கட்டாயம் ரஷ்யாவிற்கு உதவிகரமாக இருந்தது. இது அமெரிக்காவின் இடைத் தேர்தலுக்கு சற்று முன்னதாக, கேசோ லைன் விலையேற்றம் செய்ததானது, வாஷிங்டன்னுக்கு மேலும் தொல்லைத் தருவதாகவே ஆனது.
இதன் முடிவு, இந்த மாதம், G-20 உச்சி மாநாட்டில், முகமது பின் சல்மாவை அமெரிக்க அதிபர் பைடன் " சந்திப்பதாக திட்டம்" எதுவும் இல்லை என்று சொல்லப்பட்டது. இறுதியாக, ரியாத்தானது, தனக்கான "ஆற்றல் சார் புவிசார் அரசியலில்" ஈடுபட துவங்கியிருக்கிறது.
தனது மிகப்பெரும் இரண்டு வாடிக்கையாளர்களுடன், இந்தியா மற்றும் சீனாவுடன், சுதந்திரமான எண்ணெய் தொடர்பான மூலயுத்தியை விவாதித்துக் கொண்டு இருக்கும் பொழுதே, கடந்த மாதம், சவூதியின் ஆற்றல் சார் அமைச்சர், இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதம் நடத்தினார்.
இதற்கிடையே, தனக்கு எதிர் நிகராக இருக்கும் இளவரசர் பைசல் பின் பர்ஹானை காணொளியில் சந்தித்தப் பிறகு, சீன வெளியுறவு துறை அமைச்சர், " வாங் ஹிய்", " அரசின் சுதந்திரமான ஆற்றல் கொள்கையை பின்தொடர்வது பற்றியும், சர்வதேச ஆற்றல் சார் சந்தையின் நிலைத் தன்மையை பராமரிக்க, அதன் துடிப்பான முயற்சிகளை புகழ்ந்து, கூட்டாக இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார். கடந்த சில மாதங்களாக, ரியாத் மற்றும் பீஜிங் இரண்டும், சவூதி எண்ணெய்க்கு, சீன யுவானில் பணம் செலுத்த வேண்டும் என்பது பற்றி குழப்பிக் கொண்டிருந்தன.
இந்த நிலைமைகளில், இத்தகையதொரு நகர்வானது, உலகளவில் ஓர் சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும், எனினும், சீன - சவூதியின் ஒரு நாள் வர்த்தகம், 320 டாலர் மதிப்பாக இருக்கும் நிலையில், அமெரிக்க டாலரில் நடக்கும் வர்த்தகத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 6.6 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொருபுறம், பாகிஸ்தானின் கௌதாரில், ரியாத்தானது, 10 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவியுள்ளது. அடுத்து, ரியாத் - இஸ்லாமாபாத் - பீஜிங் இடையே ஓர் முத்தரப்பு உடன்படிக்கை ஒன்றும் கருத்துருவில் உள்ளது. இது தொடர்பாக அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தைக்கு இந்த மாதம் சவூதியின் இளவரசர் பாகிஸ்தான் சென்று பார்க்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, சீனாவின் நல்லெண்ணமானது, ஆசியாவின் நல்வளர்ச்சிக்கும், நீண்ட கால பொருளாதார மற்றும் யுத்தத் தந்திர ரீதியிலான ஒத்துழைப்பிற்கும், பாதுகாப்பிற்கும் மைய அச்சாகும். எனினும், உள்ளார்ந்த முரண்பாடானது ஒருவரையொருவர் உறவை முறித்துக்கொள்வது, ரியாத்திற்கோ அல்லது வாஷிங்டன்னுக்கோ பொருத்தமாயிருக்காது.
சவுதியின் கிழக்கு முழுவதையும் அடைவது என்பது முடிந்துவிட்டால், அமெரிக்கா அப்பகுதியில் அதன் பிடிப்பை இழக்கும். அமெரிக்கா தற்போது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே, சவுதியின் பிரச்சனை சீனாவுடனான முதன்மை முரண்பாடாக இருக்கவில்லை.
சீனாவுடன் விரிவான யுத்த தந்திர பங்குதாரராக இருந்தப் போதிலும், சவுதி இதுவரை எந்த ஒரு தெளிவான இராணுவ பாத்திரத்தையோ, மத்திய கிழக்கு நாடுகள் உடனான தொடர்பையோ கொண்டிருக்கவில்லை. பீஜிங் ரியாத்துடன் அணு ஆற்றல் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை கையெழுத்திட்டிருந்தாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொழிற்நுட்பம் மற்றும் ட்ரோன்கள் போன்றவற்றை வழங்கிவிட்டாலும், அவைகள் எல்லாம், வாஷிங்டன் வழங்கக் கூடிய பாதுகாப்பு வகைப்பட்டது போலவே ஆகிறது.
ரியாத்தின், ஆசிய நாடுகளுடனான ஈடுபாடானது, அதன் பொருளாதார பன்முகத் தன்மைக்கும், நிலையான ஆற்றல் சார் கூட்டுப் பங்காண்மைக்கும் உதவிகரமானதாக இருக்க முடியும். ஆனால், சவுதி அதன் பாதுகாப்பு தேவைகளுக்கு வாஷிங்டன்னுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியதாக இருக்கக் கூடும். மேலும், வாஷிங்டன்னும், ரியாத்தும், கிட்டத்தட்ட ஒரேவிதமான மண்டல பாதுகாப்பு நலன்களை பங்கிடுகிறது.
எந்த நேரத்திலும், அவர்களின் தலைக்கு எதிராக மீண்டும் தீவிரவாத அச்சுறுத்தல் நிகழலாம். உதவிக்கு ரியாத் வாஷிங்டன்னை எதிர்நோக்கலாம். சிறிது காலத்திற்கு முன்னர்தான் சவுதியும், அமெரிக்கா எண்ணெய் நிறுவனங்களும், மத்தியக் கிழக்கில் இருக்கும் ஆற்றல் உள் கட்டமைப்பின் மீது ஈரானிய தாக்குதல் என்று கூறப்படும் புலனாய்வு பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டன.
எனவே, சில ஒழுங்கற்ற கட்டங்கள் சில இருந்த போதிலும், சவுதியின் வெளியுறவு கொள்கையில், அமெரிக்கா உடனான கொள்கையில், நீண்ட கால மாற்றத்தை எதிர் பார்க்க முடியாது. மேலும், இந்த இரண்டு நாடுகளும், மீண்டும் ஒரு முக்கியமான விவகாரங்களில், ஒரு கட்டத்திற்குள் மீண்டும் செல்வது சாத்தியமே!.
-சபீனா சித்திக்,
வெளியுறவு பத்திரிக்கையாளர், வழக்கறிஞர் மற்றும் நவீன புவிசார் அரசியல், ஒரு மண்டலம் ஒரு பாதையின் துவக்க முயற்சி, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய விவகாரங்களில் நிபுணத்துவம் கொண்டிருப்பவர்!
- சேரன்
(தமிழில்)
மூலக்கட்டுரை: