வாராக்கடன்கள் தள்ளுபடி: கார்ப்பரேட்களுக்கு மோடி அரசின் தொடர் சேவை
ரிசர்வ் வங்கியின் படியே, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மோடி அரசு கார்ப்பரேட்களுக்காக சுமார் 11 லட்சம் கோடி ரூபாயை வாராக்கடன்கள் என அறிவித்து தள்ளுபடி செய்துள்ளது.
சிபிஎம். ன் ஜான் பிரிட்டாஸ் பின்வரும் விவரங்களை மத்திய அரசிடமிருந்து கேட்டுள்ளார்:
1) கடந்த 5 ஆண்டுகளின் வாராக்கடன்கள் பற்றிய விவரங்கள்
2) 10 கோடிக்கு மேல் வாராக்கடன்களை கொண்டிருப்பவர்களின் விவரங்கள்
3) வாராக்கடன் பட்டியிலிலுள்ள முதல் 25 பேரின் விவரங்கள்
இவற்றிற்கு மாநிலங்களுக்கான மத்திய நிதி அமைச்சர் பகவத் காரத் எழுத்து பூர்வமாக பின்வருமாறு பதிலளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் படி,
வாராக்கடன்கள்:
2017-18 ல் ரூ. 1,61,328 கோடி
2018-19 ல் ரூ. 2,36,165 கோடி
2019-20 ல் ரூ. 2,34,170 கோடி
2020- 21ல் ரூ. 2,02,781 கோடி
2021- 22 ல் ரூ. 1,74,966 கோடி
மீட்கப்பட்ட வாராக்கடன்கள்:
2017-18 ல் ரூ. 12,881 கோடி
2018-19 ல் ரூ. 25,501 கோடி
2019-20 ல் ரூ. 30,016 கோடி
2020- 21ல் ரூ. 30,104 கோடி
2021- 22 ல் ரூ. 33,534 கோடி
என்று மட்டும் அவர் பதிலளித்துள்ளார். மேலும் அவர் ரிசர்வ் வங்கி சரியாக இந்த விவரங்களை கணக்கில் வைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கடனாளர்களின் விவரங்களை அவர் கொடுக்கவில்லை.ரிசர்வ் வங்கி சட்டம் 1934, பிரிவு 45E ன் படி கடன் வாங்குபவர்களின் விவரங்களை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு கடன்களை வாரி இறைப்பதும் அதை வாராக்கடன்கள் என அறிவித்து தள்ளுபடி செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. அவர்களின் விவரங்களை கூட வெளியிட மறுத்து கார்ப்பரேட்களை பாதுகாக்கிறது.
வாராக்கடன் மீட்பு என்ற பெயரில் சிறிய கார்ப்பரேட் நிறுவனங்களையும் அதன் சொத்துக்களையும் கையகப்படுத்தி அவற்றை பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறது. இவ்வகையிலும் பொருளாதார மையப்படுத்துதல் போக்கு தீவிரமடைகிறது.
- செந்தளம் செய்திப்பிரிவு