அதானியின் மோசடிக்கு துணைபுரிந்த வங்கிகள்

தமிழில்: மருதன்

அதானியின் மோசடிக்கு துணைபுரிந்த வங்கிகள்

கௌதம் அதானியின் சமீபத்திய சர்ச்சைகள், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான இவரின் எழுச்சி குறித்த தொடர் சந்தேகங்களை நிரூபித்துள்ளன. அவரது நிறுவனத்தின் பெயரிடப்பட்ட குழுவின் பத்திரங்கள் மிகவும் கவலைக்குரிய மதிப்பீட்டில் வர்த்தகம் செய்யப்படுவதால், இந்த 60 வயது முதியவரின் பகாசுர வளர்ச்சிக்கு பெருதும் கடனளித்து உதவிய சர்வதேச வங்கிகளின் கடன் மதிப்பீட்டு அடிப்படைகளை பெரிதும் சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் அதானியின் பங்குகள் 110 பில்லியன்கள் அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது டாய்ஷே, பார்க்லேசு மற்றும் ஸ்டாண்டர்ட் சார்டர்டு ஆகிய வங்கிகளுக்கு எந்த அதிர்வையும் ஏற்படுத்தியிருக்காது, ஏனெனில் அதானியின் ஊதிப்பெருக்கப்பட்ட மதிப்பீடுகள் பற்றிய பல அறிகுறிகள் பல காலமாகவே வெளிப்படையாகவே இருந்து வந்துள்ளன.

பங்குகளை விற்று வாங்கும் (short-selling) நிறுவனமான ஹிண்டன்பர்க் தனது அறிக்கையை வெளியிடுவதற்க்கு முன்பு அதானி நிறுவனங்களின் ஒருங்கிணைக்கப்பெற்ற சந்தை மதிப்பானது 218 பில்லியன் டாலர்கள் என்னும் அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் அடையாளமாக விளங்கியது. பல்கலைக்கல்வியைக் கூட தாண்டாத இந்த முதல் தலைமுறை தொழிலதிபரின் முதலீடுப் பட்டியலில் புதிப்பிக்கத்தக்க ஆற்றல், மும்பை சர்வதேச விமான நிலையம் உட்பட நாடு முழுதும் ஏழு விமான நிலையங்களும் மற்றும் துறைமுகம், மின்சாரப் பரிமாற்றம் ஆகிய துறைகளில் அரசிற்கு இணையான அதிகாரங்களையும் கொண்டுள்ளார்.

பங்குகளோ போதுமான அடிப்படைகள் இன்றி வானளவு உயர்ந்திருந்தது. தொடர் சரிவிற்கு முன், அதானியின் மூன்று பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், அடுத்த 12 மாதங்களில் எதிர்பார்க்கப்படும் வருமானத்தின் அடிப்படையில் உலகின் முதல் 10 மிக விலையுயர்ந்த பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்தன, சுருக்கமாக அவரை உலகின் மூன்றாவது பணக்காரராக மாற்றியது. அதானி குழுமத்தின் நிலக்கரிச் சுரங்கம் மற்றும் சாலைகள் முதல் தரவு மையங்கள் வரையிலான புதிய திட்டங்களை அடைகாத்து வளர்த்தெடுக்கும் நிறுவனமான எண்டர்பிரைசஸ், தனது அடிப்படைகளைக் காட்டிலும் 136 மடங்கு அதிகளவில் வர்த்தகமாகி வந்தது. வரி ஏய்ப்புக்கென்றே பிரத்தியேகமாக செயல்படும் கடல்கடந்த புகலிடங்களின் உதவி கொண்டு “கார்ப்பரேட் உலகில் மீப்பெரும் ஊழலை” நிகழ்த்தியிருப்பதாக நாதன் ஆண்டர்சன் என்பவரால் நடந்தப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவைகளையெல்லாம் “தேர்ந்தெடுக்கப்பட்ட தவறான தகவல்கள் மற்றும் பழமையான, ஆதாரமற்ற மற்றும் மதிப்பிழந்த குற்றச்சாட்டுகளின் தீங்கிழைக்கும் கலவையாகும்” எனக்கூறி நிராகரித்துள்ளது அதானி நிறுவனம். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் அத்தனையும் முற்றிலும் புதியவை அல்ல என்பதுதான் இப்போது அதானியின் வளர்ச்சிக்கு கடனளித்தவர்களையும், வங்கியாளர்களையும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய தோல்வியானது, மொரிஷியஸை தளமாகக் கொண்ட நிதிகள் கூட்டமைப்பு ஒன்று அதானி நிறுவனங்களின் மதிப்பை உயர்த்தியது என்ற ஊடகக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அதானி பங்குகளில் 2021 ஆம் ஆண்டு நடந்த சரிவின் மிகைப்படுத்தப்பட்ட பதிப்பாகும். அப்போதும் அதானி தவறான தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கை என்று சொல்லி மறுத்தார். இருப்பினும் பல தரப்பு முதலீட்டாளர்கள் அதானி பங்குகளை தவிர்த்தனர். இதற்கு நேர்மாறாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா பெயரைக் கொண்ட பெரிய இந்தியக் குழுக்கள் நிறுவன முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலமாக இன்றளவும் உள்ளன.

பங்குச் சந்தை தரகு நிறுவனங்களும் கூட அப்போதிருந்தே அதானியின் பங்குகள் மீது பெரிய அக்கறை காட்டவில்லை. ஆகஸ்ட் 2022 இல் பிரேக்கிங்வியூஸ் செய்திக் குழுமம் அதானி நிறுவனத்தின் பங்குகளை உன்னிப்பாகக் கவனித்தபோது நிதித் தரவு வழங்குநரான Refinitiv தனது போர்ட்டலில் $100 பில்லியனுக்கும் அதிகமான மொத்த சந்தை மதிப்பு கொண்ட மூன்று அதானி நிறுவனங்களுக்கும் எந்தவித வருவாய் மதிப்பீட்டையும் காட்டவில்லை.

உயர்கட்டண சேவைகள் வழங்கும் சர்வதேச வங்கிகள் சில அதானி விஷயத்தில் கொஞ்சம் ஆர்வம் காட்டியுள்ளன. அவர்கள் அதானியுடனான தங்கள் உறவை ஆழப்படுத்தினர், அவருடைய நிதி ஆதாரங்களை பல்வகைப்படுத்தவும், இந்திய கடன் வழங்குபவர்களை அவர் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உதவினார்கள். வெளிநாட்டு வங்கிகள் மற்றும் பத்திரங்கள் இப்போது அதானி குழுமத்தின் கடன்களில் முறையே 18% மற்றும் 37% ஆக உள்ளது, இது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பூஜ்ஜியமாகவும் 14% ஆகவும் இருந்தது என்று Jefferies ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். Deutsche, Barclays மற்றும் StanChart ஆகியவை Dealogic பதிவுகள் தொடங்கியதில் இருந்து அதானி குழுமத்தால் உருவாக்கப்பட்ட $260 மில்லியன் முதலீட்டு வங்கி வருவாயில் $57 மில்லியன் அளவு பயனடைந்தன. இம்மூன்று சர்வதேச வங்கிகளுடன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் உள்நாட்டு தனியார் கடன் வழங்கும் ICICI வங்கி ஆகியவையே அதானிக்கு சேவை செய்வதற்கான கட்டண வசூலிப்பில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளனர். சிட்டி வங்கி 2014 முதல் அதானியின் கடன் மூலதனச் சந்தை ஒப்பந்தங்களில் சிறந்த ஆலோசகராக இருந்து வருகிறது. தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அதானி குழுமம் இப்போது அந்த சர்வதேச வங்கி உறவுகளையே அதன் வலிமையின் அடையாளமாக சுட்டிக்காட்டுகிறது.

வெளிநாட்டு வங்கிகள் தங்கள் முதலீடுகள் பற்றி அமைதியாக இருக்கின்றன, ஆனால் அதானி குழுமத்தில் தாங்கள் ஆர்வம் கொண்டிருந்ததற்கு அவர்கள் சில நியாயங்களைக் கொண்டிருந்தனர். 2021 இல் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அரசாங்க அமைச்சரின் எழுத்துப்பூர்வ பதிலில், சில அதானி குழும நிறுவனங்களை ஒழுங்குமுறை ஆணையம் விசாரித்து வருவதாக வெளிப்படுத்திய போதிலும், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குழுவின் அனைத்து முன்மொழிவுகளுக்கும் தொடர்ந்து ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடியின் பிரதமராக இருந்தபோது அதானியின் எழுச்சியும், தொடர்ந்து இந்தியாவுக்குத் தேவையான கட்டுமானங்களைக் கட்டியெழுப்புவதும், அவர் மறைமுகமான அரச ஆதரவைப் பெற்றதாக வங்கிகளை நம்பவைத்திருக்கலாம். இதற்கிடையில், சர்வதேச போர்தந்திர ரீதியான முதலீட்டாளர்களுடனான அதானியின் தொடர்புகள் கூடுதல் ஆறுதலை அளித்தன. 2019 ஆம் ஆண்டு முதல் அதானியின் நிறுவனங்கள், பிரான்சின் TotalEnergies மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சக்திவாய்ந்த ஷேக் தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான் தலைமையிலான கூட்டு நிறுவனமான அபுதாபியின் இன்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி ஆகியவற்றிலிருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் ஈக்விட்டி நிதியைப் பெற்றுள்ளன. 

மேலும், அதானி பெரும்பாலும் பணம் சம்பாதிக்கும் சொத்துக்களையே வாங்கிக் குவித்தார். சுவிட்சர்லாந்தின் Holcim-இன் இந்திய சிமென்ட் வணிகத்தை கடந்த ஆண்டு $10 பில்லியன் கையகப்படுத்தியதற்கு, Barclays, Deutsche மற்றும் StanChart ஆகிய நிறுவனங்களால் சுமார் $5 பில்லியன் கடன்கள் மூலம் அளிக்கப்பட்டது. சிங்கப்பூரின் DBS, ஜப்பானின் Mitsubishi UFJ நிதிக் குழு மற்றும் இத்தாலியின் Intesa Sanpaolo ஆகியவை அதனியின் கடன் வழங்கும் சிண்டிகேட்டில் உள்ள மற்றவை. Holcim நிதிகள் சிறிய கடனைக் கொண்ட நிறுவனங்களால் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன என்று நிலைமையை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்தார். அதானி குழுமத்தின் கடன்கள் சுமார் 40% உயர்ந்து மார்ச் வரையிலான ஆண்டில் $27 பில்லியனை எட்டியிருந்தாலும், அதன் நிகரக் கடன் நான்கு மடங்கு EBITDA இல் சமாளிக்கக்கூடியதாகத் தெரிகிறது. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்த்தால் அதானிக்கு கடன் வழங்குவதில் உள்ள வெகுமதிகள் அதன் அபாயங்களை நியாயப்படுத்துவது போல் தோன்றியது.

ஆனாலும் வெளிநாட்டு வங்கிகள் இப்போது அதானி குழுமத்திலிருந்து சற்று விலகி நிற்கின்றன. பலர் அதானியின் அமெரிக்க டாலர் பத்திரங்களுக்கு எதிராக கடன் வாங்குவதை நிறுத்திவிட்டனர் அல்லது குழுவின் பத்திரங்களுக்கு எதிரான கடன்களை வழங்குவதை நிறுத்திவிட்டனர். இந்தியாவின் ரெகுலேட்டர் மற்றும் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகளும் கலங்கி வருகின்றன. அதானி எண்டர்பிரைசஸ் 2.4 பில்லியன் டாலர் பங்கு விற்பனையை நிறுத்தியதில் சாத்தியமான முறைகேடுகளை செபி கவனித்து வருவதாக கடந்த வாரம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. இதற்கிடையில், அதானி போர்ட்ஸின் டாலர் பத்திரங்கள் டாலருக்கு 66 முதல் 90 சென்ட் வரை வர்த்தகம் ஆகிறது. அடுத்த 12 மாதங்களில் கடன் முதிர்வுகளை சமாளிக்க முடியும் என்று மதிப்பீட்டு நிறுவனம் கூறுகிறது, ஆனால் குழுவின் நிர்வாகத்தைப் பற்றிய முதலீட்டாளர்களின் கவலை அது கருதியதை விட அதிகமாக இருக்கலாம் என்று ஒப்புக்கொள்கிறது. சந்தையை அமைதிப்படுத்த உதவிய ஒரு நடவடிக்கையாக, கௌதம் அதானி இந்த வாரம் $1 பில்லியனுக்கும் மேலாக தனது சில பங்குகளில் உறுதிமொழிகளை வெளியிடுவதற்காக செலுத்தினார், மேலும் அவரது நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றன.

வங்கிகள் லாபகரமானதாகத் தோன்றும் முதலீடுகளில் சிக்கித் தவிக்கும் வரலாற்றைக் கொண்டுள்ளன. ஒரு தசாப்தத்திற்கு முன்னர் மலேசியாவின் இறையாண்மை நிதியான 1MDB இல் நடந்த ஊழல், கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் தங்களால் செய்யக்கூடிய மற்றும் செய்ய வேண்டிய வணிகத்தை வேறுபடுத்துவதில் தோல்வியடைந்ததைக் காட்டுகிறது. இது வால் ஸ்ட்ரீட் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட $6 பில்லியன் செலவாக முடிந்தது.

அதானியின் மீது கவனம் செலுத்தும் எவரும், அதன் மூலதன அணுகல் சந்தேகத்திற்குரியதாக இருந்தால், நிறுவனத்தின் வெளிப்புற ஆதரவைத் திரட்டும் திறனை அதன் நன்னடத்தைக் குறித்த கவலைகள் தடுக்கலாம் என்பதை அறிந்திருந்தனர். இதற்கிடையில், வங்கிகளும் அதானியுடனான உறவால் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றன. செவ்வாயன்று, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதானி குழுவை விசாரிக்கக் கோரி நான்காவது நாளாக இந்திய நாடாளுமன்றத்தை சீர்குலைத்தனர். உள்நாட்டு கடன் வழங்குபவர்கள் இயல்புநிலையின் அபாயத்தை குறைத்து மதிப்பிடுகின்றனர், ஆனால் வெளிநாட்டு வங்கிகளோ தங்கள் நிதியால் வானுயர வளர்ந்தவருடன் நெருக்கம் பாராட்ட தயங்குகின்றன. இருப்பினும் அதானியின் வளர்ச்சியில் அவ்வங்கிகளின் பங்கெடுப்பு குறித்த கேள்விகள் மேலும் வலுவடையும்.

தற்போது சிக்கலில் உள்ள இந்திய அதானி குழுமத்தின் ஒரு பகுதியான அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம், ஏப்ரலில் தொடங்கும் அடுத்த நிதியாண்டில் 50 பில்லியன் ரூபாய் (604 மில்லியன் டாலர்) மதிப்புள்ள பத்திரங்கள் உள்ளிட்ட கடன்களை திருப்பிச் செலுத்தப்போவதாக பிப்ரவரி 7 அன்று தெரிவித்தது.

பிப்ரவரி 6 அன்று, அதானி குழுமம் 2024 ஆம் ஆண்டில் முதிர்ச்சியடைவதற்கு முன்னதாக $ 1.11 பில்லியன் கடன்களை முன்கூட்டியே செலுத்தியதைத் தொடர்ந்து அதன் நிறுவனங்களின் பங்குகள் வெளியிடப்படும் என்று கூறியது, அதே நேரத்தில் கூட்டமைப்பு அதன் மூலதனத்தைச் செலவைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த ஊடக அறிக்கைகளை மறுத்தது.

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டிற்க்கான தனது பதிலை கடந்த ஜனவரி 29-ஆம் தேதி அதானி குழுமம் 413-பக்கம் கொண்ட அறிக்கையாக வெளியிட்டது. அதில், ஹிண்டன்பர்க் முன்வைத்த 88 கேள்விகளில் முக்கால்வாசிக்கும் மேலான கேள்விகள் முன்பே பேசித் தீர்க்கப்பட்ட விஷயங்களுடன் தொடர்புடையது என்றும், மீதமுள்ள கேள்விகளில் பெரும்பாலானவை பொது பங்குதாரர்களுடன் தொடர்புடையது என்பதால் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அக்கேள்விகள் குறித்த தகவல்களை அளிக்கத் தேவையில்லை என்றும், ஹிண்டன்பர்க் பிரச்சாரம் இந்தியா மற்றும் அதன் வளர்ச்சியின் மீது கணக்கிடப்பட்ட தாக்குதல் என்றும் குறிப்பிட்டிருந்தது.

- மருதன்

(தமிழில்)

மூலக்கட்டுரை :  https://www.reuters.com/breakingviews/gautam-adanis-woes-were-banks-plain-sight-2023-02-08/