புல்வாமா தாக்குதல்: மோடி அரசின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முன்னாள் ஆளுநர்

தமிழில் : விஜயன்

புல்வாமா தாக்குதல்: மோடி அரசின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முன்னாள் ஆளுநர்

“பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து வாய் திறக்க கூடாது என்றார்; ஜம்மு காஷ்மீரின் நிலைமைகள் பற்றி மோடிக்கு ஒன்றும் தெரியாது; ஊழல் பற்றியெல்லாம் அவருக்கு ஒரு கவலையும் இல்லை.”

மோடி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் அவர்களை தி வயர் பத்திரிக்கை சார்பாக கரன் தாப்பர் பேட்டி கண்ட பொழுது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. மோடியைப் பற்றியும், அவரது நெருங்கிய ஆலோசகர்கள் பற்றியும் ஆதாரங்களுடன் படுமோசமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

ஒரு மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் துண்டாடப்பட்டு, ஒன்றியப் பிரதேசமாக மாற்றப்படுவதற்கு முன் அம்மாநிலத்தின் கடைசி ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் அவர்கள் “உண்மையில் பிரதமருக்கு ஊழல் பற்றி ஒரு கவலையும் இல்லை என்பதை என்னால் அடித்துக் கூற முடியும்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ள தகவல்கள் மோடி அரசாங்கம், பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜம்மு காஷ்மீரின் அரசியல் வட்டத்திலும் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.

பிப்ரவரி 2019-ல் புல்வாமா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்டபோதும், அதே ஆண்டில் சரத்து-370 ரத்து செய்யப்பட்ட போதும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக மாலிக் தான் இருந்துள்ளார். காஷ்மீர் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாமல், மடத்தனமாக செயல்பட்டார் என்று மாலிக் கூறுகிறார். மேலும் அவர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு குறைபாடுகளால் நம் நாட்டின் சிப்பாய்கள் மீது பிப்ரவரி 2019-ல் நடத்தப்பட்ட புல்வாமா பயங்கரவாத தாக்குதல் பற்றி வாய் திறக்கக்கூடாது என்று தன்னிடம் பிரதமர் சொன்னதாகவும் கூறினார்.

இந்திய பாதுகாப்புத் துறையின் குறிப்பாக சி.ஆர்.பி.எப் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கையாலாதாத தனம், பொறுப்பற்றத்தனத்தால் தான் மத்திய ரிசர்வ் படை போலிசார் சென்றுகொண்டிருந்த கான்வாய் மீது புல்வாமா பகுதியில் தாக்குதல் நடந்தது என்று பல்வேறு தலைப்புகளில் கேட்கப்பட்ட நேர்காணலில் மாலிக் அம்பலப்படுத்தியிருப்பார். அந்த சமயத்தில் உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இருந்தார். சிப்பாய்களை கூட்டிச் செல்வதற்கு விமானம் வழங்கும்படி கேட்ட சி.ஆர்.பி.எப்-ன் கோரிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் எவ்வாறு மறுத்தது என்ற விவரங்கள் பற்றி விரிவாக கூறினார். இராணுவ வீரர்களை கூட்டிச் சென்ற சாலையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாதது குறித்தும் பேசியுள்ளார்.

கார்பெட் தேசியப் பூங்காவை பார்வையிட்டு வந்த உடனேயே புல்வாமா தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக தன்னை தொலைபேசியில் அழைத்த போது நேரடியாகவே அத்தனை பாதுகாப்பு குளறுபடிகள் குறித்தும் அவரிடம் கூறினேன். இது பற்றி பிரதமர் அமைதி காக்கச் சொன்னார்; யாரிடமும் எதுவும் கூறக்கூடாது என்றார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தனியாக அழைத்து யாரிடமும் எதுவும் கூறக்கூடாது என்று கூறியதாக மாலிக் கூறினார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கான பழியை பாகிஸ்தான் மீது சுமத்துவதோடு, பாஜகவிற்கும், ஆட்சிக்கும் தேர்தலின் போது பலன் தரும் வகையில் இந்த விவகாரத்தை பயன்படுத்திக் கொள்வதே இவர்களின் உள்நோக்கம் என்பது தனக்கு அப்போதே தெரிந்துவிட்டது என்று மாலிக் கூறினார்.

300 கிலோ எடையுள்ள RDX வெடிமருந்தை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தானிலிருந்து கிளம்பிய ஒரு வாகனம் பத்து பதினைந்து நாள்களாக யாருக்கும் தெரியாமல், யாரிடமும் பிடிபடாமல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சாலைகளிலும், கிராமங்களிலும் சுற்றிவந்துள்ளது என்றால் புல்வாமா தாக்குதல் என்பது இந்திய உளவுத்துறையின் பெருந்தோல்வியாகும் என்று மாலிக் தொடர்ந்து கூறினார்.

சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 87 உறுப்பினர்களில் 56 உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்று ஆட்சியமைக்கக் கோரிய மெஹ்பூபா முப்தியின் கோரிக்கையை ஏற்காமல் நவம்பர் 2018-ல் சட்டப்பேரவையை தான் கலைத்தது ஏன் என்பது பற்றி மாலிக் விரிவாக பேசுகிறார். அவ்வாறு வேறு ஒன்றை பற்றி பேசுகையில், தேசிய மாநாட்டுக் கட்சி போன்று பிற கட்சிகளின் ஆதரவு இருப்பதாகக் மெஹ்பூபா அவர்களால் கூறப்பட்ட கட்சிகளே கூட குதிரை பேர அரசியலுக்கு அஞ்சி தனியாக வந்து ஆட்சியைக் கலைக்குப்படி பேசினர் என்று கூறினார்.

தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக இருந்தபொழுது எங்கு, எப்படி நீர் மின்சார திட்டம் மற்றும் ரிலையன்ஸ் கம்பெனியின் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு தன்னிடம் பாஜக-ஆர்.எஸ்.எஸ்-ன் மூத்த தலைவரான ராம் மாதவ் அவர்களே நேரில் வந்து கேட்ட போது, “சட்ட விரோதமாக எந்த காரியத்தையும் நான் செய்ய மாட்டேன்” என்று கூறியதை பற்றி விளக்கினார். இந்தத் திட்டங்களுக்கு சம்மதிக்கச் செய்வதற்காக மாதவ் அவர்கள் விடியற்காலை ஏழு மணிக்கே தன்னை சந்திக்க வந்துவிட்டார். இந்த இரண்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கினால் 300 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று கூட அப்போது எனக்கு சொல்லப்பட்டது என்கிறார் மாலிக்.

ஜீன் 34, 2021 அன்று டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்திருந்த மனோஜ் சின்ஹா, பரூக் அப்துல்லா மற்றும் பிற கட்சித் தலைவர்களுடன் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் புகைப்படம்.

மோடியைக் குறித்து பேசுகையில், ஊழல் பற்றி துளியளவு கூட பிரதமருக்கு கவலையில்லை. பிரதமரின் கவனத்திற்கு பல்வேறு ஊழல்கள் பற்றி எடுத்தச் சொன்ன போது, அதை களைவதற்கு பதிலாக மோடி அரசாங்கம் கண்டுங்காணதது போல இருந்ததோடு ஆகஸ்டு 2020-ல் கோவா ஆளுநராக இருந்த என் பதவியை பறித்து மேகாலயா மாநிலத்திற்கு பணிமாற்றம் செய்துவிட்டனர் என்று கூறினார். பிரதமருடன் இருக்கக்கூடியவர்கள் பெரும்பாலான நேரங்களில் பிரதமர் அலுவலகத்தின்(PMO) பெயரை பயன்படுத்தி ஊழலில் ஈடுபடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டினார். இவை அனைத்தைப் பற்றியும் நான் பிரதமரின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளேன். இருந்தபோதும் இதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கூட அவர் மதிக்கவில்லை. இது பற்றி சொல்லும் போது தான் மாலிக், “பிரதமருக்கு ஊழல் பற்றி துளி கூட கவலையில்லை என்று அடித்துக் கூறினார்”.

குடியரசுத் தலைவர் திரௌபதி மர்மூ யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்பதைக் கூட பிரதமர் அலவலகம் தான் தீர்மானிக்கிறது. குடியரசுத் தலைவரைச் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டது; தான் அப்போதும் ஆளுநராகத் தான் இருந்தேன்; குடியரசுத் தலைவரின் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது கடைசி நேரத்தில் எனக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது என்று மாலிக் கூறினார்.

மாலிக் அவர்கள் அளித்த பிற அதிர்ச்சிகரமான தகவல்கள்:

1. பிபிசி ஊடகத்தை கையாண்ட விதத்தில் பிரதமர் பெருந்தவறு செய்துள்ளார் என்கிறார் மாலிக்.

2. இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமரும் மற்றும் பல அமைச்சர்களும் பேசி வரும்/நடந்து கொள்ளும் விதத்தை மாலிக் கடுமையாக விமர்சித்தார்.

3. அதானி ஊழல் காரணமாக மோடி எனும் பிம்பம் சுக்கு நூறாக உடைந்து போனது. இதனால் பட்டித்தொட்டி வரையிலும் கூட மோடி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்துள்ளது; பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு தனித்த பிரதமர் வேட்பாளரை முன்னிருத்துவார்கள் என்றால், இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையால் வருகிற தேர்தல்களில் பாஜகவிற்கு கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும்.

4. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை பேசுவதற்கு அனுமதி மறுத்த நிகழ்வு என்பது இதுவரையில் கண்டிறாத குற்றமாகும். அதானி ஊழல் குறித்து சரியான கேள்விகளைத்தான் ராகுல் காந்தி முன்வைத்தார்; அவர் எழுப்பிய கேள்விகளுக்கு தெளிவான பதிலை நிச்சயமாக பிரதமரால் வழங்கியிருக்க முடியாது என்று மாலிக் தொடர்ந்து பேசினார்.

5. ‘மூன்றாம் தர நபர்களை’யெல்லாம் மோடி அரசாங்கம் ஆளுநர்களாக நியமிக்கிறது என்று மாலிக் குற்றம் சாட்டினார்.

பேச்சு வழக்கிலான எளிய மொழிநடையில் இந்த நேர்காணல் இருமொழியில் (இந்தி,ஆங்கிலம்) எடுக்கப்பட்டது.

பிரதமரைப் பற்றி கூறிய அத்தனை கருத்துகளிலும் தான் உறுதியாக இருப்பதாகவும், இது தொடர்பாக வரக்கூடிய எந்தவிதமான அடக்குமுறைகள் பற்றி அஞ்சுவதோ கவலைப்படப்போவதோ இல்லை என்று கூறி பேட்டியை முடித்துள்ளார். இருந்தபோதிலும், ஒரு முன்னாள் ஆளுநருக்கு எந்தளவிலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரப்பூர்வ பாதுகாப்பு குழுவின் பரிந்துரையில் கூறியுள்ள அளவை விட குறைந்த பாதுகாப்பே தனக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்தினார். இவ்வாறிருக்க, அடக்குமுறைகள் பற்றி தனக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பதையும் சேர்த்துக் கூறினார்.

மாலிக் அவர்களிடம் எந்த அளவிற்கு கேள்வி எழுப்பப்பட்டது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவும் வகையில், அவரிடம் கேட்கப்பட்ட 28 கேள்விகளை கீழே பட்டியலிடுகிறோம்.

1) ஆகஸ்ட் 2018 இல் குடியரசுத் தலைவர் ஆட்சி இருந்தபோது நீங்கள் ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக நியமிக்கப்பட்டீர்கள். மூன்று மாதங்களுக்குப் பிறகு, தனக்கு காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவு இருப்பதால் மொத்தம் 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 56 எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறி மெஹபூபா முப்தி உங்களைத் தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ள தீவிரமாக முயன்றபோது, நீங்கள் அவரது அழைப்பை ஏற்க மறுத்துவிட்டீர்கள். ஆளுநர் மாளிகைக்கே தொலைநகல் மூலமாக அனுப்பப்பட்ட கடிதமும் கிடைக்கப்பெறவில்லை என்று கூறுயுள்ளீர்கள். ஆனால், சில நிமிடங்களுக்குள்ளாகவே சட்டசபையை கலைத்துவிட்டீர்கள். ஏன் அப்படி செய்தீர்கள்? மெகபூபாவை ஆட்சி அமைக்க விடாதீர்கள் என்று மோடி அரசு சொன்னதா?

2) மெகபூபா முப்தி ட்வீட் செய்தது இதுதான்: “இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், கவர்னர் இல்லத்தில் உள்ள தொலைநகல் இயந்திரம் எங்களின் தொலைநகலைப் பெற முடியவில்லை, ஆனால் சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மட்டும் விரைவாக வெளியிட முடிந்தது என்பது மிகவும் விசித்திரமான ஒன்றுதான்.” உங்கள் தொலைநகல் இயந்திரம் தனது கடிதத்தைப் பெறவில்லை என்பது பொய் என்று அவர் தெளிவாகக் கூறுகிறார்.

3) இப்போது நீங்கள் கூறிய விளக்கத்தைப் பாருங்கள். நீங்கள் ஒரு தொலைக்காட்சி செய்தி சேனலுக்குச் இவ்வாறு சொன்னீர்கள்: “ரம்ஜான் பண்டிகை காரணமாக எனது அலுவலகம் மூடப்பட்டது, அதனால் எனக்கு மெஹபூபா முஃப்தியிடம் இருந்து எந்தச் செய்தியும் கிடைக்கப் பெறவில்லை. ஒரு விடுமுறை நாளில், தொலைநகல் இயந்திரத்தின் அருகில் யாரும் அமர்ந்திருக்க முடியாது. ஆளுநர் மாளிகையில் வேலைகள் இப்படித்தான் நடக்கிறதா, ஏனென்றால் இது கேட்பதற்கே வேடிக்கையாகத் தோன்றுகிறது? (ஹிந்துஸ்தான் டைம்ஸ்).

4) பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கவிருந்த ஒரு சட்டப் பேரவையே இதனால் கலைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆளுநராக நீங்கள் செய்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல குற்றமுமாகும். நீங்கள் செய்த காரியதிற்காக பெருமைப்படுகிறீர்களா? அல்லது வருத்தப்படுகிறீர்களா?

5) மூன்று மாதங்களுக்குப் பிறகு 2019 பிப்ரவரியில் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடந்தது. அதைப் பற்றி பேசலாம். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதி வரை உளவுத்துறை அறிக்கைகள் எச்சரித்த வண்ணம் தான் இருந்தன. இருந்தபோதிலும் 1,000 சிஆர்பிஎஃப் ஜவான்கள் ஒரு கான்வாயில் போதிய பாதுகாப்பின்றி சாலை வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது கவர்னராக இருந்தது நீங்கள் தான், இதற்கு உங்கள் விளக்கம் என்ன?

6) யூடியூப்பில் நீங்கள் அளித்த ஒரு நேர்காணலில், கான்வாய் செல்ல வேண்டிய பாதை போதுமான அளவிற்கு பாதுகாப்பானதா என்று உறுதி செய்யப்படவில்லை என்றும், பாதுகாப்பு சரியாக இல்லை என்றும் கூறியுள்ளீர்கள். நீங்கள் சொல்லும் பாதுகாப்பு குளறுபடிகள் பற்றிய விவரங்களைத் கூற முடியுமா?

புல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பள்ளி மாணவிகள் அஞ்சலி செலுத்தினர். 

7) அந்த நேர்காணலில் இந்திய பாதுகாப்புத்துறையின் "கையாளாகாதத்தனம்" "பொறுப்பற்றத்தனம்" என்றும் கூறியுள்ளீர்கள். யாருடைய கையாளாகாதத்தனத்தால் யாருடைய பொறுப்பற்றத்தனத்தால் இந்த தாக்குதல் நடந்தது?

8) இது தொடர்பாக, தாவீந்தர் சிங் என்ற மூத்த போலீஸ் அதிகாரியின் சதிவேலையும் இதில் இருப்பதாக செய்திகள் வந்தன. இவரை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்று கூறியுள்ளீர்கள். இவர் யார், இந்த தாக்குதலில் இவரின் பங்கு என்ன? புல்வாமாவில் என்ன நடந்தது என்பது பற்றிய முழு உண்மையையும் நமக்கு எப்போதுதான் தெரிய வரும்?

9) பிறகு ஆகஸ்ட் 5 ஆம் தேதி சரத்து 370 திடீரென ரத்து செய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இப்படி எதுவும் நடக்காது என்று பொது மக்களுக்கு உறுதி அளித்தீர்கள். நீங்கள் வேண்டுமென்றே மக்களை தவறாக வழிநடத்தியுள்ளீர்கள் என்பது தெரிகிறது. மத்திய அரசுதான் உங்களை அவ்வாறு செய்யச் சொன்னதா?

[“வதந்திகள் மட்டுமே பரப்பப்படுகிறது... இன்று வரை அப்படிப்பட்ட எண்ணமே எனக்கு இல்லை, எந்த தகவலும் வரவில்லை, நான் மத்திய அரசில் உள்ள அனைவரிடமும் பேசினேன், அவர்கள் இதை அல்லது அதை செய்வார்கள் என்று யாரும் எனக்கு எந்த குறிப்பையும் கொடுக்கவில்லை. சிலர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்றாக பிரிக்கப்படும் என்று கூறுகிறார்கள். சரத்து 35, சரத்து 370 பற்றி சிலர் பேசுகிறார்கள். இந்த விஷயங்களைப் பற்றி பிரதமரோ உள்துறை அமைச்சரோ யாரும் என்னிடம் விவாதிக்கவில்லை. – ANI ஊடகத்திற்கு சத்ய பால் மாலிக், 2019 ஆகஸ்ட் 3, அன்று அளித்த செய்தி.]

10) 370வது சரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக நீண்ட நாள்களாக கூறி வந்துள்ளது, ஆனால் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஏன் ஒன்றியப் பிரதேசமாக மாற்றப்பட்டது? இது காஷ்மீர் மக்களை அவமானப்படுத்தும் திட்டமிட்ட முயற்சி என்று பலர் கூறி வருகிறார்கள்.

11) சரத்து 370 ரத்து செய்யப்பட்ட பிறகு உங்கள் நிர்வாகம் பத்திரிகையாளர்களுக்கு எதிராக காட்டாச்சியை கட்டவிழ்த்துவிட்டதாக தெரிகிறது. காஷ்மீர் டைம்ஸின் நிர்வாக ஆசிரியர் அனுராதா பாசின், தி நியூயார்க் டைம்ஸில் இவ்வாறு எழுதியிருந்தார்: “பத்திரிகையாளர்கள் காவல்துறையினரால் தொடர்ச்சியாக வரவழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வருமான வரி மீறல்கள் அல்லது பயங்கரவாதம் அல்லது பிரிவினைவாதம் போன்ற குற்றச்சாட்டுகளால் அச்சுறுத்தப்படுகிறார்கள். பல முக்கிய ஊடகவியலாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்... நாட்டை விட்டு தப்பியோடி விடாமல் தடுப்பதற்கு இருக்கும் தடைப்பட்டியில் குறைந்தது 20 பேராவது சேர்க்கப்பட்டிருப்பர். ஏன் இப்படி செய்தீர்கள்? அதற்கான தேவை என்ன இருந்தது?

- " ஊடகங்களுக்கு எதிரான மோடியின் அடக்குமுறை கொள்கைகள் காஷ்மீரில் ஊடகத்துறையையே அழித்து வருவதோடு, அரசாங்கத்தின் ஊதுகுழல்களாக செயல்படச் செய்யும் வகையில் ஊடகங்களை மிரட்டி வருகின்றன".

12) நீங்கள் அளித்த யூடியூப் நேர்காணலில் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனி சார்பாக காஷ்மீரில் காப்பீட்டுத் திட்டம் துவங்கவதற்கு முனைப்பு காட்டியதை பற்றிப் பேசியுள்ளீர்கள். இது சம்பந்தமாக, நீங்கள் குளிக்கச் செல்வதற்கு முன்பே இந்த திட்டத்திற்கு உங்களை சம்மத்திக்கச் செய்வதற்காக ராம் மாதவ் ஒரு நாள் காலையில் 7 மணிக்கே உங்களைப் பார்க்க வந்துள்ளார். அப்போது நீங்கள் "நான் சட்ட விரோதமாக எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்" என்று கூறியுள்ளீர்கள். உங்களிடம் கேட்கப்பட்ட சட்ட விரோதமான காரியம் என்ன?

13) அப்படியென்றால் ராம் மாதவ் உங்களிடம் வெளிப்படையாகவே சட்ட விரோதமாகச் அனுமதி வழங்குமாறு கேட்டாரா?

14) இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கினால் உங்களுக்கு 300 கோடி ரூபாய் தரப்படும் என்று சொல்லப்பட்டதாக அந்த நேர்காணலில் கூறியுள்ளீர்கள். உங்களுக்கு இவ்வாறு பணம் தருவதாக சொன்னது யார்?

15) இது தொடர்பாக சிபிஐ உங்களிடம் கேள்வி எழுப்பியபோது, “பிரதமர் உடன் இருப்பவர்கள் தான்” என்று பதிலளித்ததாக அந்த நேர்காணலில் கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் திரு.மோடிக்கும் இதில் பங்குள்ளதா?

16) நீங்கள் ஜம்முவுக்கு வந்து 14 மாதங்களே ஆகிய நிலையில் கோவாவுக்கு மாற்றப்பட்டீர்கள். ஏன் அவ்வாறு செய்யப்பட்டது? இந்த ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனி விஷயத்திற்கும், “பிரதமர் உடன் இருப்பவர்கள் தான்” என்ற நீங்கள் கூறியதற்கும் இந்த பணி மாற்றத்திற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா?

17) ஜம்மு காஷ்மீர் ஆளுநராக நீங்கள் பணியாற்றிய 14 மாதங்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வியுற்றேன். இன்று நீங்கள் பேசிய விஷயங்கள் உட்பட அனைத்தையும் கூறும் நேர்மையான புத்தகமாக இது இருக்குமா?

18) நமது விவாதத்தை விரிவுபடுத்துவோம். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹரியானா மாநிலம் தாத்ரியில் நடந்த விழாவில் விவசாயிகள் போராட்டத்தின் போது பிரதமரை சந்தித்தது பற்றி பேசியுள்ளீர்கள். "ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே சண்டை வந்துவிட்டது … அவர் ஆணவமாக பேசினார்". என்று கூறியுள்ளீர்கள்(இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜனவரி 3, 2022). “பிறர் பேச்சை கேட்டு கேட்டு அவரின் மூளையே மழுங்கிவிட்டது சத்ய பால்” என்று மோடியைப் பற்றி கூறிய அமித் ஷாவையும் நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். (இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜனவரி 4, 2022). இன்று நரேந்திர மோடியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

19) இஸ்லாமியர்களை பகிரங்கமாக கிண்டல் செய்யும் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களை கூட மோடி தடுக்கவில்லை. அவர்கள் இஸ்லாமியர்களை "பாபரின் வாரிசுகள், அப்பா ஜான் என்போர் மற்றும் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்" என்றாவாறெல்லாம் அழைத்தார்கள். "அவர்கள் அணிந்துள்ள உடையை வைத்து அடையாளங் காணுங்கள்" மற்றும் "இடுகாடு சுடுகாடுகளை வைத்து அடையாளங் காணுங்கள்" என்று மோடியே கூறியுள்ளார். இஸ்லாமியர்களும் இந்தியக் குடிமக்கள் தான். அவர்களைப் பற்றி இந்தியப் பிரதமர் இப்படிப் பேசுவது சரியா?

20) சமூக ஊடக கணக்குகளை முடக்குமளவிற்கு தள்ளிய பிபிசி ஆவணப்படத்தை பிரதமர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் கருத்து என்ன? அதன் பிறகு பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு ஊடகங்கள் முன்வைக்கும் விமர்சனங்களைக் கையாளுவதற்கு இது தான் சரியான வழியாக தெரிந்ததா?

21) சமீபத்தில் அதானி ஊழல் விவகாரம் இந்தியாவை பாதித்த விசயங்களில் மிக மோசமான ஒன்றாகும். இந்த முறையும் பிரதமர் முற்றிலும் மௌனமாக இருக்கிறார், அதானியை அவர் பாதுகாக்கிறார் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள். இந்த விவகாரத்தை பிரதமர் சரியாக கையாண்டாரா?

22) 1989ல் உங்களுக்கு நெருக்கமாக இருந்த வி.பி.சிங் போஃபர்ஸ் துப்பாக்கி ஊழல் விவகாரத்தை தேர்தல் பிரச்சினையாக்கி ராஜீவ் காந்தியை தோற்கடித்தார். அதானி பிரச்சினையும் 2024 இல் அதே அளவிற்கு தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துமா?

23) இறுதியாக, ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் அவமதிக்கப்பட்டதைப் பற்றி பேசுவோம். பாஜக அமைச்சர்கள் 4 பேர் அவரைப் பற்றி பேச அனுமதிக்கப்பட்டதால் அவரும் நாடாளுமன்றத்தில் பேச விரும்பினார். அவர் பதில் சொல்லவே முற்பட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இது சரியான முறையா?

24) தகுதி நீக்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? குற்றம் நிரூபிக்கப்பட்ட 24 மணி நேரம் ஆகியவுடன் அவர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், 2016ஆம் ஆண்டு பாஜக எம்பியான நாரன்பாய் கச்சாடியா வழக்கில், அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு பதிலாக, 16 நாட்கள் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இது பாராபட்சம் காட்டுவதாகாதா?

25) இறுதியாக, அந்த யூடியூப் நேர்காணலில், பாஜக ஆளுநர்களால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்றும், அவர்கள் ஒருபோதும் நியமிக்கப்படக் கூடாதவர்கள் என்றும் சொன்னீர்கள். துணைவேந்தராக இருப்பதற்கான கல்வித் தகுதி அவர்களுக்கு இல்லை என்று சொல்கிறீர்களா?

26) எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்த பிறகே ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையர்களை கொலீஜியமே நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதைத் தான் நீங்களும் பரிந்துரைத்துள்ளீர்கள். அப்படியென்றால், பிரதமரே தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு பதிலாக கொலீஜியம் தான் நியமனம் செய்ய வேண்டும் என்கிறீர்களா?

27) அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவர்களை ஆளுநர்களாக நியமிக்கலாமா? யாரையெல்லாம் அமைச்சரவையில் வைத்துக் கொள்ள முடியாது என்று பிரதமர் கருதுகிறாரோ அவர்களுக்கான ஓய்வுக்கால பணியாக ஆளுநர் பதவிகள் வழங்கப்படுவது சரியா?

28) இறுதியாக, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ற்றைக்கு ஒற்றையாய் நின்று போட்டியிட்டால் 2024ல் மோடியை தோற்கடிக்க முடியுமா?

பேச்சு வழக்கிலான எளிய மொழிநடையில் இந்த நேர்காணல் இருமொழியில்(இந்தி,ஆங்கிலம்) எடுக்கப்பட்டது.

- விஜயன் 

(தமிழில்)

மூலக்கட்டுரை : https://m.thewire.in/article/government/watch-karan-thapar-satya-pal-malik-narendra-modi