way2 news நிறுவனத்தின் ஊழியர் விரோதப் போக்குகளுக்கு கண்டனம்
ஊடக பணியாளர்கள் சங்கம் அறிக்கை
ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Way2News Private Limited நிறுவனம் சென்னையில் அதன் தமிழ்ப் பிரிவைக் கொண்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பின்றி இங்கு பணியாற்றும் Business Development Managers மூவரை கட்டாயமாக பணிவிலகுமாறு கூறியுள்ளது. தற்போது ஒருவருக்கு மட்டும் ஒரு மாத சம்பளத்தை கூடுதலாக தருவதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக உள்ளடக்க எழுத்தாளர்கள்(Content Writers) சிலரையும் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தமாக பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பகுதி பகுதியாக வேலை நீக்க முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Way2News நிர்வாகத்தின் சட்டவிரோத பணிநீக்க முயற்சிகளை தடுக்க தொழிலாளர் நலத் துறை தலையிட வேண்டும்.
‐----------------------------------------------
Way2News ஊழியர்களுக்கான கோரிக்கைகள்
1. ஊழியர்களை பணி விலக கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்
2. பத்திரிகையாளர்கள் - பணியாளர்கள் பணி நேரத்தை 8 மணிநேரமாக குறைத்திட வேண்டும்.
3. நிறுவனம் செலுத்த வேண்டிய PF தொகையை ஊழியர்களிடம் பிடித்தம் செய்யக்கூடாது.
4. அரசு விடுமுறை நாளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும்.
5. அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்களுக்கு ரூபாய் 35,000, புதிதாக பணியில் இணைபவர்களுக்கு ரூபாய் 25,000 மாத ஊதியம் வழங்க வேண்டும்.
ஊடக பணியாளர் சங்கம் (Media Employees Union)
Disclaimer: இந்த பகுதி சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு