பொது சிவில் சட்டம் இந்துக்களுக்கும் எதிரி!

தீக்கதிர்

பொது சிவில் சட்டம் இந்துக்களுக்கும் எதிரி!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்று முக்கிய பிரகடனங்களான ராமர் கோவில், 370ஆவது பிரிவு நீக்கம், பொது சிவில் சட்டம் என்கிற அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக பாஜக பரிவாரங்கள் கொக்கரித்துக் கொண்டிருக்கின் றன. நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதே நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. ஆயினும் மாநில சட்டமன்றங் களில் ஒப்புதல் பெற்றால்தான் அமலாக்க முடியும் என்ற நிலையில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்தாமி தற்போது பொது சிவில் சட்ட மசோ தாவை அறிமுகம் செய்திருக்கிறார்.  

பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் உள்ள இந்திய துணைக் கண்டத்தில் வாழும் மக்கள் பல வகையான வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். அவற்றை பாஜக - ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் ஒரே கலாச்சாரம் என்ற கூட்டுக்குள் அடைக்கச் செய்யும் முயற்சியே இந்த பொது சிவில் சட்டம்.  பொதுவாக மக்களின் திருமண, வழிபாடு மற்றும் இதர வாழ்வியல் நடவடிக்கைகள் பல்வேறு மதத்தினருக்கும் மாநில மக்களுக்கும் வெவ்வேறாக இருக்கும் சூழலில் இந்த பொது சிவில் சட்டம் எத்தகைய திருமண முறையை அங்கீகரிக்கும்? புரோகித திருமண முறையை பிராமணர்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்து மதத்தில் உள்ள மற்ற சாதியினர் தங்களுக்கே உரிய பல்வேறு முறைகளில் திருமணம் செய்கின்றனர்.

 இது தவிர சுயமரியாதை திருமணம், சீர்திருத்த திருமணம் என்ற வகையில் சிறப்புத் திருமண முறைகளும் உள்ளன. இந்த சிவில் சட்டம் உண் மையில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான தாக கருதி கொண்டு வரப்பட்டாலும் உண்மை யில் இந்துக்களின் பல்வேறு பிரிவினருக்கு எதி ரானதாகவும் அமையும். அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் கூட பொது சிவில் சட்டம் அமலில் இல்லை. இந்தி யாவில் ஒரே பொது சிவில் சட்டம் என்பது இந்துத் துவாவினரின் ஒரே மத, ஒரே கலாச்சார வரிசை யில் நாட்டு மக்களின் பன்முக கலாச்சாரத்தை, வாழ்வியல் நடைமுறையை ஒழித்துக் கட்டுவ தற்கும் ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்க நடை முறையை திணிப்பதற்குமே இந்த சட்டம்.  

உண்மையில் 1954ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சிறப்பு திருமணச் சட்டம் மற்றும் இந்திய வாரிசு சட்டம் 1925 ஆகியவற்றை இணைத்து ஒரு புதிய சட்டமாக இந்திய சிவில் சட்டம் என்று கொண்டு வரலாம். ஆனால் இவர்களின் நோக்கம் பொதுவான சட்டம் கொண்டு வருவதல்ல. இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தவரை பழிவாங்கவும் அதன்மூலம் சமூகப் பதற்றத்தை உருவாக்கவுமே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதை நாட்டு மக்கள் முறியடித்திட வேண்டும்.

- தீக்கதிர்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு