இந்தியாவை அலைட் பிளன்டர்ஸ் பன்னாட்டு சாராய நிறுவனத்தின் சந்தையாக்கும் பாஜக அரசு
தமிழில் : விஜயன்
அலைட் ப்ளன்டர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு வரிசைகட்டி நிற்கும் முதலீட்டாளர்கள்
முதன்முறையாக பொது விற்பனைக்கு வெளியிடப்பட்ட பங்கு(IPO)களை வாங்குவதற்கு பலதரப்பட்ட முதலீட்டாளர்களும் மிக அதிக அளவில் ஆர்வம் காட்டியுள்ளது தெரிய வருகிறது. அதாவது அறிவிக்கப்பட்டது ஒரு பங்கு எனில் அதில் முதலீடு செய்வதற்கான கோரிக்கை 23.55 மடங்கு அதிகமாக வந்துள்ளது. வியாழக்கிழமை நடந்த ஏலத்தின் முடிவில் 1,500 கோடி அளவிற்கு IPOகள் விற்பனையாகியுள்ளது. சில்லறை முதலீட்டாளர்களுக்காக அறிவிக்கப்பட்ட பங்குகளை வாங்குவதற்கு 4.51 மடங்கு போட்டி காணப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யும் நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் 50.37 மடங்கிலான போட்டி இருந்துள்ளது. மிகப் பெரிய அளவில் முதலீடு செய்யும் நிறுவனம் அல்லாத தனிநபர்கள் மத்தியிலும் 32.4 மடங்கு போட்டி நிலவியுள்ளது.
இரண்டு வகையான IPOகள் விற்பனைக்கு வந்துள்ளது. 1,000 கோடி மதிப்பிலான பங்குகள் புதிதாகவும், 500 கோடி மதிப்பிலான பங்குகள் பழைய முதலீட்டாளர்களிடமிருந்தும் முதன்முறையாக பொது விற்பனைக்கு (IPO) வந்துள்ளது. ஒரு பங்கின் விலை 267 முதல் 281 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அயல் நாட்டு மதுபானங்களை உள்நாட்டில் தயாரிக்கும்(IMFL) நிறுவனங்களில் மூன்றாவது பெரிய நிறுவனமாக அலைட் பிளண்டர்ஸ் அண்ட் டிஸ்டில்லர்ஸ் நிறுவனம்(Allied Blender and Distillers) இருந்து வருகிறது. விஸ்கி, பிராந்தி, ரம், வோட்கா, கின்(gin) என பலதரப்பட்ட மதுபானங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.
- விஜயன் (தமிழில்)