ஸ்ரீமதி படுகொலை: களத்தில் இறங்கிய மஜஇகவினர்

போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தஞ்சை கபிஸ்தலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்.

ஸ்ரீமதி படுகொலை: களத்தில் இறங்கிய மஜஇகவினர்

அடக்கு முறையையே ஆட்சி முறையாக நடத்திக் கொண்டிருப்பதாக திமுக அரசை கண்டித்து தொடர் பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் போஸ்டர் பிரச்சாரம் செய்வதைக் கூட அனுமதிக்காத இந்த சமூக நீதி அரசின் மக்கள் விரோத அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை வன்மையாக கண்டித்து தொடர் முழக்கங்கள் நிகழ்ச்சியில் எழுப்பினர். 

துவக்கத்திலிருந்தே  சங்பரிவார கயவர் கும்பலை பாதுகாக்க பல்வேறு திருகு வேலைகளை இந்த அரசு இயந்திரமும், அதன் ஆளும் வர்க்கங்களும் செய்து வந்த நிலையில் தற்போது மக்களின் மனசாட்சியாக நின்று நீதி கேட்டுப் போராடும் மக்கள், ஜனநாயக சக்திகள் மீது பல்வேறு அடக்கு முறைகளை ஏவி வருகின்றனர். கொலை குற்றவாளிகளை பாதுகாக்கிறது; நீதி கேட்டுப் போராடும் மக்கள் மீது பொய் வழக்கை போடுகிறது; காவல்துறை சட்டத்தை மீறி காவலில் வைக்கப்பட்ட பல நபர்களின் கையை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி சமூக பிரச்சனையில் அக்கறையுடன், சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் சாமானிய மக்களின் குரல் வலையையும், அவர்களின் போராட்ட குணத்தையும் நசுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கு எதிரான தனியார்மயத்தை அமல்படுத்திக் கொண்டே சமூக நீதி நாடகமாடும் திராவிட மாடலும் குஜராத் மாடலும் ஒன்றே என்பதை இந்த அடக்குமுறைகள் நிரூபித்து வருகின்றன.

மஜஇகவின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் மணிவேல் தலைமையில் பதாகைகள் ஏந்தி நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை காவல் துறை ஆர்ப்பாட்டம் செய்த தோழர்களை கைது செய்தது.