ரஷ்யா உலகிற்கே அச்சுறுத்தல் அமெரிக்க எடுபிடி ஜெலன்ஸ்கி பேச்சு: இந்தியா ஆதரவு

தமிழில்: மருதன்

ரஷ்யா உலகிற்கே அச்சுறுத்தல் அமெரிக்க எடுபிடி ஜெலன்ஸ்கி பேச்சு: இந்தியா ஆதரவு

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் பிரச்சினை குறித்து நடந்த நடைமுறை வாக்கெடுப்பில் முதன்முறையாக ரஷ்யாவிற்கெதிரான தனது வாக்கை இந்தியா பதிவு செய்துள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி டெலிகான்பரன்சிங் மூலம் ரஷ்யாவின் போர்குற்றங்கள் பற்றிய உரையை 15 நாடுகள் கூடும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் நிகழ்த்துவது பற்றிய வாக்கெடுப்பில்  ஜெலன்ஸ்கியின் பங்கெடுப்பிற்கு எதிராக ரஷ்யா வாக்களித்துள்ள நிலையில் இந்தியா உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

ஐ. நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் பிரச்சனை குறித்து இதுவரை எடுக்கப்பட்ட வாக்கெடுப்புகளில் எந்த அணிக்கும் ஆதரவாக வாக்களிப்பதை தவிர்த்து வந்த இந்தியா முதன்முறையாக ரஷ்யாவிற்கெதிராக வாக்களித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா உட்பட பல்வேறு மேற்கு நாடுகள் உக்ரைன் ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக ரஷ்யாவின் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ஆனால் அவ்வாக்கிரமிப்பு போருக்கு எதிராக ரஷ்யாவின் மீது இந்தியா எந்த ஒரு விமர்சனத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு அணிகளையும் பேச்சுவார்த்தை மூலம் உடனடித் தீர்வு காணுமாறும் அதற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறி வருகிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்போது தற்காலிக உறுப்பினராக உள்ளது. இந்த பதவி வருகிற டிசம்பரில் காலாவதியாகிறது.

ஆகஸ்டு 24ல், 31வது உக்ரைன் சுதந்திர தினத்தையொட்டி கடந்த ஆறு மாதகால உக்ரைன் போர் பற்றிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

சந்திப்பு தொடங்கியவுடன் அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதுவர் வச்சிலி நெபென்சியா சந்திப்பில் உக்ரைன் அதிபர் பங்கு கொள்வது குறித்து ஒரு பொது வாக்கெடுப்பைக் கோரினார்.

அதைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் 13க்கு 1 என்ற அடிப்படையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பில் பங்குபெற அனுமதிக்கப்பட்டார். வாக்கெடுப்பில் ரஷ்யா மட்டுமே ஜெலன்ஸ்கியின் பங்கெடுப்பிற்கு எதிராக வாக்களித்தது. சீனா வாக்கெடுப்பில் பங்குபெறவில்லை.

உக்ரைன் அதிபர் மாநட்டில் பங்குபெறுவது குறித்து தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் ஆனால் அவர் (கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்ததுபோல இப்போதும்) டெலிகான்பரன்சிங் மூலம் பங்குபெறுவது கவுன்சில் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் ரஷ்யாவின் தூதுவர் நெபன்சியா தெரிவித்தார்.

டெலிகான்பரன்சிங் மூலம் அவர் பங்கெடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை எனக்கூறி இந்தியா உட்பட 12 நாடுகளும் ஜெலென்ஸ்கிக்கு ஆதரவு தெரிவித்தன.  

உக்ரைன் தற்போது போர்ச்சூழலில் இருப்பதாகவும் இவ்வாறான நெருக்கடிகளில் நாட்டின் அதிபர் நாட்டிலிருந்து மக்களுக்கு உறுதுணையாக இருப்பதே அந்நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்கமுடியும் என்று  ஐ.நாவிற்கான அல்பேனியத் தூதுவர் பெரிட் ஒஜா கூறியுள்ளார்.

ரஷ்ய தூதுவர் நெபன்சியா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கவுன்சிலின் விதிகளை பொருட்படுத்தவில்லை எனவும் உக்ரைனின் மேற்குலக ஆதரவாளர்களின் நலன்கள் மட்டுமே கவுன்சில் உறுப்பினர்களுக்கு பிரதானமாக இருக்கிறது எனவும் குற்றம் சாட்டினார். இம்மாதிரியான நடவடிக்கைகள் பாதுகாப்பு கவுன்சிலின் அழிவிற்கே வழிவகுக்கும் எனவும் எச்சரித்தார்.

அதன்பின் டெலிகான்பரன்சிங் மூலம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைன் மீது நடந்துகொண்டிருக்கும் க்கிரமிப்புப் போருக்கு ரஷ்யா முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும், ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு இப்போதே ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை எனில் இந்த ரஷ்ய கொலைகாரர்கள் உலகின் அனைத்து நாடுகளின் மீதும் தங்களின் போர்வெறியை காட்டுவார்கள் எனவும் கூறினார்.

உலகின் எதிர்காலம் உக்ரைன் மண்ணில்தான் நிர்ணயிக்கப்படும் என்றும், உக்ரைனின் சுதந்திரமே உலகின் பாதுகாப்பு எனவும் அவர் எச்சரித்தார்.

ஜபோரிசியா அணுசக்தி நிலையத்தை போர் பகுதியாக மாற்றி உலகையே அணுஆயுதப் போரின் விளிம்பில் நிறுத்தியுள்ளது என்று ரஷ்யாவின் மீது குற்றம் சாட்டினார். அந்த நிலையத்தில் மொத்தம் ஆறு உலைகள் இருப்பதாகவும் அனைத்து உலைகளையும் சர்வதேச ணுசக்தி பாதுகாப்பு நிறுவனம் உடனடியாக தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். 

ரஷ்யா தன் அணு ஆயுத பூச்சாண்டியை நிறுத்திக் கொண்டு உடனடியாக ஜபோரிசியா அணுசக்தி நிலையத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஜபோரிசியா அணுசக்தி நிலையத்தின் நிலவரத்தின் பாதுகாப்பின்மை குறித்து ஐ.நா பாதுகாப்பு சபை தலைவர் அந்தோனியோ குட்டரஸ் தனது வருத்தத்தை பதிவு செய்தார். உலகின் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை ஒளி படரத்துவங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அணுசக்தி நிலையத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எந்தவொரு நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் சர்வதேச அணுசக்தி கழகம் உடனடியாக அப்பகுதியில் ஆய்வு மெற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆவன செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உக்ரைன் பிரச்சனையில் சர்வதேச மனிதஉரிமை சட்டங்கள் கடுமையாக மீறப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

ஐ.நாவிற்கான அமெரிக்க தூதுவர் லிண்டா தாமஸ் க்ரீன்பீல்டு உக்ரைனை உலக வரைபடத்திலிருந்து நீக்குதற்கு உறுதிபூண்டு ரஷ்யா செயல்படுபவதாகவும், அதன் பொய் பிரச்சாரங்கள் முலம் உக்ரைன் மீதான தனது ஆக்கிரமிப்பை நாளுக்கு நாள் அதிகப்படுத்தியே வருவதாகவும், இந்நடவடிக்கைகள் மூலம் ரஷ்யா உலக நாடுகளின் ஆதரவை ஒருபோதும் பெறமுடியாது என தெரிவித்தார்.

உக்ரைன் தது நட்டின் அணு உலைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் உலக நாடுகளில் முன்னணி வகிப்பத்தாகவும், ற்பொது ரஷ்யா இந்த சமீபத்திய பொறுப்பற்றத் தாக்குதல் மூலம் ஒரு அணு சக்தி பேரழிவையே ஏற்படுத்த துணிந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் இதுபோன்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உக்ரைன் மக்களை ரஷ்யாவின் எல்லைகளுக்குள் தள்ளுவதாகவும் அமெரிக்காவின் தூதுக்குழு தெரிவித்தது.

பிரான்சு, அயர்லாந்து, நார்வே, பிரிட்டன், கபோன், கானா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக தங்கள் கருத்தை முன்வைத்தன.

- மருதன் (தமிழில்)

மூலக்கட்டுரை: thehindu.com