"இஸ்ரோ" விஞ்ஞானிகள் ராஜினாமா! இந்திய விண்வெளித் துறையை சூளும் கார்ப்பரேட் காரிருள்!

செந்தளம் செய்திப்பிரிவு

"இஸ்ரோ" விஞ்ஞானிகள் ராஜினாமா!  இந்திய விண்வெளித் துறையை சூளும் கார்ப்பரேட் காரிருள்!

இஸ்ரோ(ISRO) விஞ்ஞானிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

விண்வெளித் துறையின் (Department of Space) உள்விவரக் குறிப்புகளின்படி, இஸ்ரோவின் (ISRO) முக்கியத் திட்டங்களில் பணியாற்றிய  120 விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் கடந்த சில  மாதங்களில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

பெங்களூரில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்திலிருந்து (URSC) சுமார் 80 பேரும், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலிருந்து (VSSC) சுமார் 20 பேரும் விலகியுள்ளனர். ககன்யான் (Gaganyaan) மற்றும் சந்திரயான்-3 போன்ற முக்கியத் திட்டங்களில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானிகளும் விலகியிருப்பது குறிப்பிட தக்கது.

​​

விண்வெளித்துறையைத் தனியார்மயமாக்கும் கொள்கையின்படி ஒரு பொதுவான டெண்டர் (Bid) நடைமுறை நடந்து வருகிறது.

​IN-SPACe நடவடிக்கை: இந்திய விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க உருவான 'இன்-ஸ்பேஸ்' (IN-SPACe) அமைப்பு, பிஎஸ்எல்வி ராக்கெட் தொழில்நுட்பத்தை முழுமையாகத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான தகுதி விருப்பக் கோரிக்கையை (Expression of Interest) வெளியிட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பெற்று வணிக ரீதியாக ராக்கெட்டுகளைத் தயாரிக்க அதானி குழுமம், எல் அண்ட் டி (L&T) முன்னணியில் நிற்கிறது.

​​அமெரிக்காவில் மோடி மற்றும் எலான் மஸ்க் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) மற்றும் அதன் செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங்க் (Starlink) ஆகியவற்றை இந்தியாவில் அனுமதிக்கும் முடிவு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்

இந்தியவிண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைய மோடி அரசு அனுமதி வழங்கியதையடுத்து, அது சார்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகின்றன. 

சென்னையை சேர்ந்த, ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் தனியார், ‘ஸ்டார்ட் – அப்’ நிறுவனத்தில்,இஸ்ரோவின் முக்கிய திட்டங்களான, சந்திரயான் – 3, ஆதித்யா எல் – 1, எல்.வி.எம் – 3’ ஆகியவற்றின் உருவாக்கங்களில் வழிநடத்திய இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சோம்நாத், இணைந்துள்ளார். இப்படி நூற்றுக்கனக்கான விஞ்ஞானிகள் தனியார் நிறுவனங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

இந்தத் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் சம்பளம் கொடுப்பதால்  இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் இயக்குநர்கள் இஸ்ரோவில் இருந்து விலகி தனியார் நிறுவனங்களில் சேர்ந்து வருவதாக கூறப்பட்டாலும், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்திய விண்வெளித்துறையில் தனியார் மயத்தை தீவிரமாக செயல்படுத்தும் மோடி அரசின் கொள்கைதான் அடிப்படை!

அமெரிக்க மஸ்க், உள்நாட்டு அதானி போன்ற கார்ப்பரேட் கும்பல்களிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு விஞ்ஞானிகள் வெளியேறுவது மற்றும் விருப்ப ஓய்வு பெறுவதற்கு கட்டுப்பாடுகளை மோடி அரசு கொண்டு வருவது கேலிக்கூத்தாகத்தான் உள்ளது.

-செந்தளம் செய்திப்பிரிவு