இந்தியப் பொருளாதாரம் யாருக்கானது?

பொருளாதார ஆலோசனைக் குழுவில் அதானி அம்பானி உள்ளிட்ட தரகு முதலாளித்துவ கும்பலின் வாரிசுகள்

இந்தியப் பொருளாதாரம் யாருக்கானது?

இந்திய பொருளாதாரம் அதானி அம்பானி உள்ளிட்ட பெரும் தரகுமுதலாளித்துவ கும்பல் நலன்களுக்கானதே என்பதை கீழ்கண்ட இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நமக்கு தெரிவிக்கின்றது.

_______________________

ஆனந்த் அம்பானி, கரண் அதானி ஆகியோர் பொருளாதார ஆலோசனைக் குழுவின் அங்கம் வகிக்கின்றனர்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் மகன் கரண் அதானி ஆகியோர் மகாராஷ்டிராவின் புதிய பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC) உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கவுன்சில் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் தலைமையில் 21 உறுப்பினர்களை உள்ளடக்கியது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஆனந்த் அம்பானி மின் துறையை பிரதிநிதித்துவப்படுத்துவார், அதானி துறைமுகஸதலைமை நிர்வாக அதிகாரி கரண் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை பிரதிநிதித்துவப்படுத்துவார்.

மற்ற உறுப்பினர்களில்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் மேத்தா -  (FMCG)யையும்,

பெயின் கேப்பிடல் நிர்வாக இயக்குனர் அமித் சந்திரா - தனியார் தொழில்துறையின் பங்கு மூலதனம் துறையையும்,

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் லிமாயே - வங்கி துறையையும்,

லார்சன் மற்றும் டூப்ரோ நிர்வாக இயக்குனர் எஸ்.என். சுப்ரமணியன் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா தலைமை நிர்வாக அதிகாரி அனிஷ் ஷா - பொறியியல் துறையையும்

பிரதிநிதித்துவப்படுத்துவர்.

______________________________

- செந்தளம் செய்திப் பிரிவு