சாட் ஜிபிடி பதில்கள்: மின்னணு வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா?

தொகுப்பு : அரிச்சந்திரன்

சாட் ஜிபிடி பதில்கள்: மின்னணு வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா?

மின்னணு வாக்கு இயந்திரங்கள் இந்தியா, பிரேசில், அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட உலகில் சில நாடுகளில் பயன் படுத்தப் படுகின்றன. அவை பாதுகாப்பான, மோசடி தவிர்க்கும் அம்சங்கள் பல கொண்டவைதான். ஆனால், எந்த தொழில் நுட்பத்தையும் போல இதில் மோசடிகளுக்கும், பழுதான முடிவுகளுக்கும் எப்போதும் வாய்ப்புள்ளது. 

மின்னணு வாக்கு இயந்திரங்களின் சில கவலை தரும் அம்சங்கள்:

கோளாறுகள்:

இவிஎம் கருவிகள் மென்பொருள் தவறுகளாலும், வன்பொருள் பிரச்சினைகளாலும் தவறான தகவல்களைத் தர வாய்ப்பு உள்ளது. 

மோசடியான திருத்தங்கள்: இவிம் கருவிகளில் உள்ளடி வேலைகளாலும், வெளியிலிருந்து இணையம், ஹேக்கர்கள் மூலமாகவும் வாக்கு எண்ணிக்கையை  திருத்தி மோசடியான முடிவுகளை வெளியிட வாய்ப்பு உள்ளது. மோசடியான திருத்தங்களை செய்யும் வழிமுறைகள்: வன்பொருட்களில் மாற்றங்கள், மென் பொருளில் திருத்தங்கள், அல்லது இணைய வழி அல்லது ஹேக்கர் தாக்குதல்.

வெளிப்படைத் தன்மை இன்மை:

இவிஎம்கள் ரகசியமான விசைத் தொகுதி (System) ஆகும். வாக்காளர்கள், வாக்குகள் எப்படி பதிவாகின்றன, எப்படி முடிவுகள் கணக்கிடப் படுகின்றன என்பதை அறியவே முடியாது. வெளிப்படைத் தன்மை இன்மையானது வாக்காளர்களிடையே அவநம்பிக்கைக்கு உரியதாகி, தேர்தல் முறையின் நேர்மையை சந்தேகிக்க வைக்கும்.. 

சோதனை செய்ய முடியாதவை:

காகித பிரதிகள் இல்லாதவரை, பதிவு செய்யப் பட்டுவிட்ட  வாக்குகளை பரிசோதிக்க வழியே இல்லை. இதன் பொருள், மோசடிகள் செய்யப் பட்டாலும், தவறுகள் ஏற்பட்டாலும், தெரியவே தெரியாது என்பதால், பொதுமக்களிடம் தேர்தல் நடவடிக்கை பற்றிய நம்பிக்கை குறையும்.

பாதுகாத்து வைத்தலும், போக்குவரத்தும்:

இவிஎம்களை பாதுகாத்து வைப்பதும் அவற்றின் போக்குவரத்தும் அவை திருத்தத்துக்கு ஆளாகாத வகையில் திட்டமிடப் பட வேண்டும். பாதுகாப்பிலும், போக்கு வரத்திலும் ஏற்படும் குறைபாடுகள், தேர்தல் நடவடிக்கையின் நேர்மையை பாதிக்கும்.

இந்தப் பிரச்சினைகளை சமாளிக்க, பல நாடுகள், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அவை: 

தம் சித்தப் படி தேர்ந்தெடுக்கும் முறை: 

இவிஎம்  கருவிகளை முன்னணுமானிக்கப் பட்ட முறை அன்றி சித்தப் படி எடுத்துக் கொள்ளும் முறை. இது ஒரு குறிப்பிட்ட இவிஎம் மோசடி திட்டமிடப்படும் ஒரு குறிப்பிட்ட  தொகுதியை சென்றடைய விடாமல் தடுக்கும்.

பாதுகாப்பு அமைப்புகள்: 

இவிஎம்களில் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கலாம், கடவுச் சொற்கள், ரகசியக் குறீயீடு, திறக்க முடியாத அரக்கு முத்திரைகள், இவை அனுமதியற்ற அணுகலைத் தடுக்கும்.

தேர்தலுக்கு முன்னரான சோதனைகள்: 

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் இவிஎம்களை சோதனைக்கு உட்படுத்தி அவை சரியாக வேலை செய்வதை உறுதிப் படுத்துவது.

தேர்தலுக்குப் பின்னரான தணிக்கைகள்: இவிஎம் கருவிகளை தேர்தல் முடிந்த பின் பரிசோதிப்பது. 

வாக்காளர் சோதனை செய்யும் தணிக்கை சான்று (VVPAT) 

இவை, ஒவ்வொரு ஓட்டுக்கும், இணையான காகித வடிவ நகலைத் தரும். இதை வைத்து, எண்ணிக்கையை சரி பார்க்கலாம்.

பிழிவாக, இவிஎம் பற்றிய கவலைகள் இருந்த போதும், பல நாடுகள், பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றி, தேர்தல் முறையின் நம்பகத் தன்மையை நிறுவுகின்றன.

மோசடியான மின்னணு வாக்கு இயந்திரங்களை நுழைத்து, (இவிஎம்) எம்2எம் (மெஷின் டு மெஷின் தொழில் நுட்பம் மூலமாக, தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முடியுமா என ஆய்வு செய்க.

மோசடியான மின்னணு வாக்கு இயந்திரங்களை நுழைத்து, (இவிஎம்) எம்2எம் (மெஷின் டு மெஷின்)  (M2M- Machine to Mahcine) தொழில் நுட்பம் மூலமாக, ,தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முடியும் என்பது கவலைக்குரிய விஷயமாகும். எம்2எம் தொழில்நுட்பமானது, மனிதர்களது நேரடி தலையீடில்லாமல் ஒரு கருவிக்கும் இன்னொரு கருவிக்கும் தோலைவில் இருந்து ஆணை பெற்று தொடர்பை ஏற்படுத்தும் வசதியாகும்.

இவிஎம் கருவிகளை எம்2எம் தொழில் நுட்பம் மூலமாக இயக்குவதற்கான வாய்ப்புகள் இதோ:

தொலைதொடர்பு அணுகல் (REMOTE ACCESS) எம்2எம் தொழில்நுட்பம், எவரையும், தொலைதொடர்பு மூலம், இவிஎம் கருவியை தொடர்பு கொண்டு, இயக்க முடியும், வாக்குச் சாவடிக்கு பக்கத்தில் வராமலேயே. 

வாக்கை மாற்றி அமைத்தல்: (Vote tampering)

எம்2எம் தொழில்நுட்பமானது, வாக்கு எண்ணிக்கையை, இவிஎம் கருவிகளில் மாற்றி அமைக்க முடியும். இதை இவிஎம் கருவிகளின் மென்பொருளிலும், ஃப்ர்ம்வேரிலும், திருத்தங்கள் செய்து, ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு சாதகமாக எண்ணிக்கைகள் வரும் வகையில் செயல்பட வைக்கலாம்.

தரவு இடைமறிப்பு: (Data interception)

எம்2எம் தொழில்நுட்பம், இவிஎம் கருவிக்கும், வாக்கு எண்ணிக்கையை சேமித்து வைக்கும் சர்வருக்கும் இடையேயான தரவுகளில் இடைமறித்து முடிவை மாற்றி அமைக்க வழி உண்டு. ஆகவே, மோசடியாளர்கள், தரவுகள் பரிமாறப் படும் போது, இடைமறித்து, தங்களுக்கு சாதகமாக முடிவுகளை மாற்றிக் கொள்ளலாம்.

மால்வேர் திணிப்பு: (Malware injection)

எம்2எம் தொழில்நுட்பம் மூலமாக, இவிஎம் கருவிகளில் மால்வேரை பதித்து, அதன் பிறகு அதன் மூலமாக வாக்கு எண்ணிக்கையை இவிஎம் கருவிகளில் புகுந்து மாற்றியமைக்க முடியும். 

சேவை மறுப்பு தாக்குதல்கள் =Denial of Service (DoS) attacks.

எம்2எம் தொழில்நுட்பம், சேவை மறுப்பு தாக்குதலகளை இவிஎம் கருவிகளின் மீது செலுத்தி பாதிப்பு ஏற்படுத்தி, வாக்காளர்கள் பதிவு செய்யும் ஓட்டுக்களை, மத்திய சர்வருக்கு செல்வதை தடுக்க முடியும.

பின்வழி அணுகல்: (Backdoor access): 

எம்2எம் தொழில்நுட்பம், வெளி ஆட்களை இவிஎம் கருவிகளை கட்டுப் படுத்தவும், தரவுகளை மாற்றியமைக்கவும் சக்தியுள்ளவர்களாக மாற்றலாம்.

முடிவாக, திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட இவிஎம் கருவிகளைக் கொண்டு, தேர்தல் முடிவுகளை எம்2எம் தொழில் நுட்பம் மூலம் மாற்றி அமைக்க முடியும் என்பது, உண்மையான அச்சுறுத்தல் ஆகும். ஆகவே, மிக திண்மையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, இவிஎம் கருவிகள், தீர ஆய்வு செய்யப் பட்டு, பின்னரே வாக்களிப்புக்கு பயன்படுத்த அனுமதிக்கப் பட வேண்டும். எல்லாவறறுக்கும் மேலாக, தணிக்கை செய்யப் படக் கூடிய, வெளிப்படைத் தன்மை வாய்ந்த தேர்தல் நடைமுறை மிக முக்கியமானதாகும். அப்போதுதான், தேர்தல் முடிவுகள் துல்லியமாகவும், நம்பத் தகுந்ததாகவும் இருக்கும்.

- அரிச்சந்திரன்

(தொகுப்பு)