மக்கள் ஜனநாயகப் புரட்சியில் பெண்களின் பங்கேற்பு குறித்து ஏஎம்கே
இந்திய புரட்சியின் போர்த்தந்திரமும் செயல்தந்திரமும், 1986
பெண்கள் இந்திய மக்கள் தொகையில் பாதியை உள்ளடக்கியுள்ளார்கள். வர்க்க எல்லையைக் கடந்து எல்லா வர்க்கங்களிலும் நிறைந்துள்ளார்கள். எனவே, இந்தியப் பெண்களின் மிகப்பெரும்பான்மையோர் ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட வர்க்கங்களைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் அத்துடன் எல்லா வர்க்கங்களிலும் உள்ள பெண்கள் ஆண் ஒடுக்குமுறையால் துன்புறுகிறார்கள்.
பெண்களைத் தாழ்ந்தவர்களாகவும், காமம், குழந்தை உற்பத்தி, வீட்டு வேலை ஆகியவற்றுக்கானப் பொருளாகவும் பார்க்கிற ஒரு ஆண் ஆதிக்கவெறி கண்ணோட்டமானது நீடிக்கிற நிலப்பிரபுத்துவ கண்ணோட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். ஆண் புரட்சியாளர்கள் மக்கள் ஜனநாயகப் புரட்சியில் பெண்களின் பரந்த பங்கேற்பைச் சாத்தியமாக்குவதற்கு தனி முயற்சி செலுத்தவேண்டும்.
அவர்கள் குடும்பத்திலுள்ள ஆண்கள் மட்டுமே புரட்சிகர இயக்கத்தில் இருந்தால்போதும் என்ற மனப்பாங்கைக் கொள்ளக் கூடாது. பெண்கள் அமைப்பாளர்களாகவும், பிரச்சாரகர்களாகவும், கொரில்லா குழுக்களில் அரசியல் தலைவர்களாகவும், பண்பாட்டு செயல்வீரர்களாகவும் சிறிதளவு சாத்தியமுள்ள அரசியல் நடவடிக்கையின் எந்தத் துறையாக இருந்தாலும் அங்கு செயல்படுவதற்காக முன்வருவதற்கு ஊக்கமும் உதவியும் அளிக்கப்படவேண்டும்.
இதுதான் பெண்களை நிலப்பிரபுத்துவ பழமையிலிருந்தும், நிலப்பிரபுத்துவம் முதலாளியமும் பெண்களை இன்பம் தரும் போதையாக, பொருளாக அல்லது வீட்டோடு பிணைக்கப்பட்ட அடிமைகளாக தவறாக பிரதிபலிப்பதை எதிர்த்தும் விடுதலை செய்வதற்கு சிறந்த முறையாகும். இந்த முறையில்தான் நாம் பெண்களை பற்றிய ஆணாதிக்கவெறி அணுகுமுறையை உடைக்கவும் ஆண்கள் தங்கள் பிற்போக்குச் சிந்தனையை மாற்றி பெண்களை சமமாக பார்க்கவும் உதவ முடியும்.
- ஏஎம்கே
(இந்திய புரட்சியின் போர்த்தந்திரமும் செயல்தந்திரமும், 1986)