நேட்டோ விரிவாதிக்கத்தை தொடர்ந்து பிரிக்ஸ் அமைப்பும் விரிவாகிறது.

அமெரிக்க - நேட்டோவிற்கு சவாலாக மாறும் பிரிக்ஸ் அமைப்பு

நேட்டோ விரிவாதிக்கத்தை தொடர்ந்து பிரிக்ஸ் அமைப்பும் விரிவாகிறது.

நேட்டோ அமைப்பு தங்கள் பலத்தை விரிவு படுத்துவதைப் போல, இரசிய- சீன முகாமும் பல்வேறு அமைப்புகள் மூலம் தங்கள் பலத்தை விரிவுபடுத்தி வருகிறது. அப்படி ஒரு அமைப்பான  பிரிக்ஸ் அமைப்பு சென்ற வாரம் கூடியது. இந்த அமர்வில் பல்வேறு நாடுகளை பார்வையாளர்களாக அழைத்திருந்தனர். பிரிக்ஸ் அமைப்பில் பல புதிய உரிப்பினர்களை சேர்க்க சீனா பரிந்துரைத்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் ஆவதற்கு ஈரானும் அர்ஜெண்டினாவும் திங்கள் கிழமை முறையாக விண்ணப்பித்துள்ளது. இதில் ஈரான், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) கடந்த ஆண்டு இணைந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிக்ஸ் உறுப்பினர்கள் உலகின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதமும், உலக மக்கள் தொகையில் 40 சதவீதமும் உள்ளனர் என்று அதன் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.